Thursday, September 11, 2014

மின்னல் திரை : மேரிகோம் (இந்தி)

Posted by பால கணேஷ் Thursday, September 11, 2014
மேரிகோம் - இந்தியாவுக்கு உலக அளவிலான பெண்கள் பாக்ஸிங் பிரிவில் ஐந்து முறை தங்கமும், ஒலிம்பிக்ஸில் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று தந்த வீராங்கனை. ‘மக்னிபிஷியன்ட் மேரி’ என்று விளையாட்டு ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தன் சுயசரிதையை ‘அன்பிரேக்கபிள்’ என்ற தலைப்பில் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்டார். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளிலிருந்து விடுபட, நம்பிக்கை பெற, ‘பைட் கிளப்’ ஒன்றை தான் பிறந்த மணிப்பூரில் நடத்தி வருகிறார் மேரிகாம். அதனை பிரபலப்படுத்த பிராண்ட் அம்பாஸிடராக பிரியங்கா சோப்ரா இருக்க வேண்டுமென்று விரும்பித் தேர்ந்தெடுத்தார் மேரிகாம். இப்போது பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் அவரது வாழ்க்கை திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.


உண்மையின் மேல் சற்று புனையப்பட்ட இப்படக்கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். மணிப்பூரின் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மேரிகாமுக்கு பாக்ஸிங் விளையாட்டு சிறு வயதிலிருந்தே மிகப் பிடிக்கிறது. வாலிபியான மேரிகோம் குடும்பத்திற்காக பந்தயம் கட்டும் தெருச் சண்டையில் ஜெயிக்கிறார். அங்கு அறிமுகமாகும் இளைஞனுடன் நட்பாகிறார். ஒரு சில்லறை சண்டையின் மூலம் பாக்ஸிங் கோச்சின் அறிமுகம் கிடைக்க, பாக்ஸிங் பயிற்சியைத் துவங்கி, இந்தியாவிற்காக மூன்று முறை தங்கம் வெல்கிறார். அறிமுகமான இளைஞன் இப்போது காதலாக, கல்யாணம் என்று முடிவெடுக்கையில் ’கல்யாணம் என்பது ஸ்போர்ட்ஸின் முடிவு’ என்று கோச்சின் கோபத்துக்கு ஆளாகிறார். அதை மீறி கல்யாணம் செய்து. இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். பாக்ஸிங் ஈர்க்க, இரண்டாண்டுகளுக்குப் பின் கோச்சைச் சமாதானம் செய்து மீண்டெழுந்து வந்து பதக்கம் பெற பயிற்சி செய்கிறார். இதில் அவருக்கு வந்த தடைகள் என்னென்ன, அதை எப்படி வென்று பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று தந்தார் என்பதை 124 நிமிடங்களில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் போன்று வாழ்கின்ற செலிப்ரிட்டிகளின் கதைகளைப் படமாக எடுக்கையில் நிஜத்தைவிட நிழலை சற்நே மிகைப்படுத்தித் தான் காட்ட வேண்டியதிருக்கும்.  இங்கே கூடீயவரை நிஜத்துடனேயே பயணித்திருக்கிறார்கள். அதனால் படத்தில் நாம் எதிர்பார்க்கும் வலிந்து திணிக்கப்படூம் திருப்பங்கள் எதுவும் இல்லாத நேரடித் திரைக்கதை சற்றே போரடிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது - கிளைமாக்ஸ் நீங்கலாக. 

பாக்ஸிங்கிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி விட்டாலும் மனமெல்லாம் அது நிறைந்து ததும்பியிருக்க, தன் பழைய நியூஸ் கட்டிங்குகளை வெட்டி ஒட்டி மேரிகோம் ஆல்பம் தயாரிப்பது, தான் வென்ற மெடல்களை எடுத்து அணிந்து கொண்டு ரசிப்பது, பஸ்ஸில் பயணிக்கையில் சந்திக்கும் குட்டி ரசிகைக்கு கண்களில் நீர் திரையிட ஆட்டோகிராப் போட்டுத் தருவது என்று பல காட்சிகள் கவிதை மாதிரி அழகாக அமைந்து வசீகரிக்கின்றன. 

பிரியங்கா  சோப்ரா மேரிகோம் கேரக்டரைத் திரையில் உயிர்ப்பித்திருக்கிறார்.  ரியல் விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகளை அவர் திரையில் செய்து காண்பிக்கையில் நமக்கு வலிக்கிறது. ஒரு காட்சியில் தலைமுடியிழந்து மொட்டை போட்டுக் கொண்டு வருகிற அளவுக்கு அந்த வீராங்கனைக்கான நடிப்பிற்கு நியாயம் செய்திருக்கிறார். செலக்ஷன் கமிட்டி மெம்பரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்க (மனமின்றி)ச் செல்ல, அங்கே அவர் பலர் முன்னிலையில் படித்துக் காட்டும்படிச் சொல்லி அவமானப்படுத்துகிற காட்சிபும் பிரியங்காவின் நடிப்பும் நன்று. அப்பா, கோச் மற்றும் கணவன் கேரக்டர்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அளவிற்கு நிறைவாகச் செய்திருக்கின்றனர். என்றாலும் படம் முழுக்க வியாபித்திருப்பது மேரிகோமான பிரியங்காதான்.

இந்தியாவின் சார்பாக உலகப் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் எப்படி பாலிடிக்ஸும் ஈகோவும் விளையாடுகிறது என்பதைக் காட்டும் காட்சிகளை மேலாகத் தாண்டிச்  சென்று விட்டார்கள். இதை மையச்சரடாக எடுத்துக் கொண்டு இன்னும் விரிவாக அலசியிருந்தால் இன்னும் படம் உயரம் தொட்டிருக்கும், அழுத்தமாக மனதில் பதிந்திருக்கும் என்பது என் எண்ணம். ‘நான் மணிப்பூரி என்பதற்காக மறுக்கிறீர்களா?’ என்று சீறும் மேரிகாம், ‘மூன்று முறை தங்கம் வென்ற எனக்கு ஹவில்தார் வேலைதான் உங்கள் அரசு தருமா?’ என்று சீறும் மேரிகோம்... ‘கிரிக்கெட்டைக் கொண்டாடுகிற நீங்க ஏண்டா 5 தங்கம் ஜெயிச்ச எங்களை மாதிரி வீராங்கனைகளைக் கண்டுக்க மாட்டேங்கறீங்க?’ என்று ஆக்ரோஷமாகச் சீறியிருக்க வேண்டாமோ...? அதேபோன்று கிளைமாக்ஸ் காட்சியும் ஒரு டெம்ப்ளேட்டான விஷயம்தான். எதிராளியிடம் கன்னாபின்னாவென்று அடி வாங்கி கதாநாயகன்/நாயகி விழுவதும் பின் எழுந்து எதிரியை துவம்சம் செய்து ஜெயிப்பதும் காலம் காலமா பார்த்துச்  சலிச்ச விஷயங்கள்டே.... இன்னுமா....?

சஞ்சய் லீலா பன்ஸாலியின் தயாரிப்பில் ஓமங்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் இதுபோல சின்னச் சின்னக் குறைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது என்றாலும் அதைத்தாண்டி நல்ல ‘ஃபீல்குட்’ படமாக வந்திருக்கிறது. அழகான ஒளிப்பதிவும், உறுத்தாத பின்னணி இசையும் துணை செய்ய  (இந்தி) மொழி புரியா விட்டாலும் கதை புரியும் வண்ணம் எளிமையாக இருப்பது சிறப்பு.

மொத்தத்தில் : நம்ம கோவை ஆவி சொன்னார்... “இதுமாதிரியான முயற்சிகளை நாமல்லாம் என்கரேஜ் பண்ணணும் ஸார்... அப்பத்தான் போகப்போக இதைவிட நிறையப் படங்கள் கிடைக்கும்.” என்று. ஆவியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். கூடவே - பிரியங்கா சோப்ராவின் அசுர உழைப்பிற்காகவும் அவசியம் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

19 comments:

  1. நான் மனசில நினைச்சதெல்லாம் அப்படியே சொல்லிட்டீங்க வாத்தியாரே....

    ReplyDelete
  2. எங்க ஊர்ல ரிலிஸாகலைன்னு நினைக்கிறேன் ணா !! ரிலிஸனாதும் பாத்துடறேன்!!

    ReplyDelete
  3. நான் பார்க்க வேண்டாம் என்று நினைத்த ஒரு படத்தை ஆவியார் பார்க்க வைத்துவிட்டார் :-)

    ReplyDelete

  4. கமர்ஷியல் காரணங்களுக்காக சில காட்சிகளை மிகைப்படுத்தியிருந்தாலும் பிரியங்காவின் அற்புதமான நடிப்புக்கு ஒரு சல்யுட் போட்டபடி ஒருமுறை எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.

    ReplyDelete
  5. நீங்களே சொல்லி விட்டீர்கள், அவசியம் படத்தைப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான விமர்சனம்..

    ReplyDelete
  7. மேரி கோமை படமாக எடுதத சஞ்ச்ய் பன்ஸாலி போட்ட முதலை தெற்றி இருப்பாரா. சினிமாப் படம் பார்த்து நாட்கள் பலவாகிவிட்டது.

    ReplyDelete
  8. அருமையான விமர்சனம்! இது போன்ற படங்களை ஊக்குவித்தல் அவசியம்! அப்போதுதான் இது போன்ற விளையாட்டுக்களும் வளரும் என்பது என் கருத்து!

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா

    தங்களின் பார்வையில் விமர்சனத்தை நன்றாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. தங்களின் விமர்சனமே படம் பார்க்கத் தூண்டுகிறது
    அவசியம் பார்க்கிறேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  11. கிரிக்கெட் விளையாடும் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!

    கிரிக்கெட்டிற்கும், சினிமாவிற்கும் எப்போதுமே ஒரு தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேயே நட்சத்திர கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்...#கிரிக்கெட் #சினிமா ...

    மேலும் படிக்க : http://cinema.dinamalar.com/cinema-news/21782/special-report/Cricket-fever-in-tamil-cinema.htm

    ReplyDelete
  12. படம் பார்க்கவேண்டும் அண்ணா! மேரி கோம் போல காட்சியளிக்க பிரியங்கா செய்த பயிற்சிகள் வீண்போகவில்லை என தெரிகிறது. மொத்தத்தில் என்று நீங்க குறிப்பிட்ட விஷயம் நச்..... திரையரங்குளில் மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யலாம் நமது கல்வித்துறை. பாப்போம்.

    ReplyDelete
  13. சிறந்த திறனாய்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  14. விமர்சனம் மொழி புரியாது என்றாலும் பார்க்க வேண்டும் எனத் தூண்டுகின்ரது. இறுதியில் சொல்லியிருப்பது...அதாங்க ஆவி சொல்வது போல் என்று ஆம் இது போன்ற படங்கள் வெளிவர வேண்டும்...நிச்சயமாஅக அப்போதுதான் சினிமாவின் தரம் உயரும்...

    ReplyDelete
  15. மிகவும் அருமையான விமர்சனம் அண்ணா...

    ReplyDelete
  16. நல்ல விமர்சனம் கணேஷ்.....

    படம் எடுக்கும்போது வந்த செய்திகளே படம் பார்க்கத் தூண்டியது உண்மை. ஆனால் இன்னமும் பார்க்கவில்லை. இந்த வார இறுதியில் பார்க்க முயல்கிறேன்.

    ReplyDelete
  17. அண்ணா! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)
    http://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html

    ReplyDelete
  18. மேரிகோம் என்னும் வீராங்கனையை இப்போதாவது அறியமுடிந்ததே என்ற மகிழ்ச்சி. ப்ரியங்கா சோப்ராவின் நடிப்புக்கு சொல்லவா வேண்டும்? நல்ல திறமை வாய்ந்த நடிகைகளுள் ஒருவர். நீங்கள் சொல்வது போல் விளையாட்டு அரசியல் காட்சிகளில் அடக்கி வாசித்திருக்க சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. படத்தை ஓட்டி போட்ட முதலையாவது எடுக்கவேண்டுமே. நல்ல விமர்சனம் கணேஷ்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube