வலையுலகில் இப்போது விருது வழங்கும் சீசன் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது. THE VERSATILE BLOGGER என்கிற விருதானது எங்கிருந்தோ துவங்கி, ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கி, விருது பெற்றவர்கள் நன்றிகூறி மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்து... என்று வலையுலகம் சுறுசுறுப்பாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் THE VERSATILE BLOGGER, AWSOME BLOGGER என்று விருதுகள் மழை அனைவரின் தளத்திலும் பொழிந்து ஓய்ந்திருந்தது.
எனக்குக் கிடைத்த பல விருதுகளை நான் என் தளத்தில் ஒட்டி அலங்கரிக்கவில்லை. அதற்குக் காரணம் இவை பற்றி எனக்கிருந்த மாறுபட்ட கருத்துக்களே. அவற்றை விரித்துரைப்பதால் பலர் மனம் புண்படக் கூடுமே என்பதால் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. இப்போதும் அப்படியே இருந்துவிடலாம் என்று எண்ணினாலும் மனசு கேட்கவில்லை. மாறி மாறி வரும் + மற்றும்- சிந்தனைகளின் ஊசலாட்டத்தின் ஊடேதான் இப்போது டைப்பிக் கொண்டிருக்கிறேன்.
+ விருதுகள் பகிரப்படறதனால பதிவர்களுக்கு உற்சாகம் கிடைக்குதா இல்லையா...? நம் படைப்புக்கான அங்கீகாரத்துக்கு ஏங்கித்தானே நாமல்லாம் எழுதவே செய்யறோம். அதுமாதிரி நாம நல்லா செயல்பட்டுட்டிருக்கோம்கறதுக்கு இந்த விருது ஒரு சாட்சியில்லையா...?
- விருதுங்கறது என்ன...? ஏதாவது ஒரு துறையில சாதனை பண்ணினவங்களுக்கோ, இல்ல தனித்திறமை படைச்சவங்களுக்கோ அவங்களைப் பாராட்டி வழங்கப்படறது. இங்க ஒரு விருதை எடுத்துக்கிட்டு பெருமாள் கோயில் புளியோதரை மாதிரி ஆளாளுக்கு பகிர்ந்துட்டிருந்தா அந்த விருதுக்கு என்ன மரியாதை? அத்தனை பேர் ப்ளாக்லயும் இந்த விருது ஒட்ட வைக்கப்பட்டிருந்தா அதுக்கு என்ன வேல்யூ? ஒரு ஊர்ல இருக்கறவன் பூரா ரஜினிகாந்தா இருந்துட்டா ரஜினிக்கே வேல்யூ கிடையாதே....?
+ நான் விருதைக் குடுத்தவங்க அதை இன்னொரு அஞ்சு பேருக்கு பகிர்ந்தா, அந்த அஞ்சு பேர்ல எனக்கும் தெரியாதவங்க யாராச்சும் இருந்தா இப்ப அறிமுகமாயிடுவாங்கல்ல... இப்படி தொடர்ந்து போற சங்கிலியக் கவனிச்சா நிறையப் பதிவர்களோட அறிமுகம் கிடைச்சு வலையுலகத் தொடர்புகள் விரிவாகி இன்னும் நெருக்கமாத்தானே ஆகும்...? அது நல்லது தானே!
- ஏதாவது ஒரு போட்டி வெச்சு, அதுல ஜெயிக்கறவங்களுக்கு விருதுன்னு பண்ணினா, அதுல கலந்துக்கறவங்க லிஸ்டை வெச்சே நிறைய நட்பு வட்டம் பெருகுமே... அப்படி ஆண்டுக்கு நாலஞ்சு பேர் ஜெயிச்சால்ல அந்த விருதுக்கே சிறப்பு...? இல்ல, சிறப்பா செயல்படற ப்ளாக்கர்னு சிலரை நாமினேட் பண்ணி மத்த ப்ளாக்கர்ஸ் ஓட்டுப் போட்டு செலக்ட் பண்ணின ப்ளாகர்ஸ்க்கு கொடுத்தாலாவது நியாயம்..? இப்படி எல்லாரும் எல்லாருக்கும் சாக்லெட் தர்ற மாதிரி தர்றது என்ன நியாயம்...?
+ விருது கொடுக்கப்படுதுன்னா அதுக்குப் பின்னால அதை உனக்குத் தர்றவங்க உன் மேல வெச்ச அன்பும் மரியாதையும் இருக்கறது உன் கண்ணுக்குத் தெரியலயா...? அதை எப்படிக் குறை சொல்ல முடியும்...? உன்னை யாருக்காவது பகிரச் சொன்னாலும் அப்படி நீ அன்பு வெச்சிருக்கறவங்களுக்குத் தானே பகிர்வே...?
- விருதுகளை இப்படி அன்பின் காரணமா வழங்கறது சரிதானா...? இதுக்கு தங்களுக்குப் பிடிச்ச அன்பும் மரியாதையும் உள்ளவங்களுக்கு ஏதாச்சும் பட்டம் கொடுத்துப் பாராட்டலாம் இல்லையா..? சினிமாக்காரங்க புரட்சிங்கற வார்த்தைய அவனவன் விதவிதமா தன் பேருக்கு முன்னால சேர்த்துக்கற மாதிரி ப்ளாக் சம்பந்தப்பட்ட அடைமொழிகளைக் குடுத்துக்கிட்டா சிம்பிளா முடிஞ்சு போகுமே விஷயம்..!
இப்படி மாறிமாறி சிந்தனைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. அதனாலதான் என் தங்கை மைதிலி கஸ்தூரிரங்கனும், அன்பு நண்பர் மதுரைத் தமிழனும் வழங்கிய இந்த விருதை நான் இன்னும் யாருக்கும் பகிரவில்லை. இந்த இரண்டு அன்புள்ளங்களும் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டு மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன் அவர்களுக்குக் காட்டும் அன்பின் வெளிப்பாடாக இதை என் தளத்தில் வைக்கிறேன் சிலகாலம். இந்த விஷயத்தில் நான் ஒரு தெளிவுக்கு வர உங்களின் கருத்துக்கள் கலங்கரை விளக்காக வழிகாட்டும் என்று நம்பிக்கையுடன் வரப்போகும் கருத்துகளுக்காக ஆவலுடன் என் காத்திருப்பு. நன்றி.
|
|
Tweet | ||
எப்படியோ வலையுலகம் சுறுசுறுப்பாகி இருக்கிறது...!
ReplyDeleteஇனி பட்டமும் கொடுத்து பாராட்டி விடுவோம் வாத்தியாரே...
டி,டி. சொன்னச் சரிதான். மிக்க நன்றி.
Deleteபுதிதாக எழுத வருபவர்களுக்கு இவ்விருதுகள் நிச்சயம் உற்சாகத்தைக் கொடுக்கும்.
ReplyDeleteபெற்றுக் கொள்வது மட்டும் அல்லாமல் பிறருக்கு கொடுப்பதும் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.
வலையில் எழுது தொடங்குபவர்களுக்கு தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் தருவதாக அமையும்.
ஐந்து பேர் கான்செப்ட்தான் கொஞ்சம் உதைக்கிறது. ஐந்து பேரை தேர்ந்தெடுக்க முனைந்தால் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டிருகிறது.
விருது பெற்றவர்களுக்கும் வழங்கியவர்களுக்கும் பாராட்டுகள்
பெறுவதும் தருவதும் மகிழ்வான விஷயம்தான் முரளி. பட், அதை விருதுன்னு சொல்லாம வேற வடிவத்துல செஞ்சா நல்லாருககும்ங்கறதுதான் என் கருத்து. மிக்க நன்றி.
DeleteArumai ganesh anna , superb thought
Deletenanum unga karuthoda othu pokiren sir.
ReplyDeleteமிக்க நன்றி மகேஷ்.
Delete:)
ReplyDeleteஎன்னலே இது புன்னகை? நான் சொன்னது சரின்னு சொல்றியா..? மிக்க நன்றி.
Deleteஎனக்கும் இந்த எண்ணம் தோன்றியது . எல்லாரும் ரஜினி இல்லைன்னாலும் ரஜினி மாதிரியே முடியைச் சிலுப்பறாண்டான்னும்போது கேட்கறவங்களோட உற்சாகம் பார்த்திருக்கீங்கல்ல பாலா சார்.... அதோட ஒரு வடிவம் இது... மேலே நீங்க சொன்னா மாதிரி விருதுன்னு சொல்லாம வேறேதுவும் சொல்லலாம்...
ReplyDeleteஎருதுன்னு சொல்லலாமா மேடம்? ;) ;)
Deleteஎன் கருத்தோட ஒத்துப் போனதுக்கு மகிழ்வோட என் நன்றி எழில்,
Deleteஅடேய் ஆவி... ஹா...ஹா... ஹா.....
பதிவெழுத வந்த புதிதில் ஆங்காங்கு விருது தொங்க விட்டிருப்பார்கள்.. ஆச்சரியப்படுவேன் இதை வாங்கவெல்லாம் என்ன தகுதி வேண்டும் என்று.. விஷயம் புரிந்த போது அவ்வளவு தானா என்றது போல் ஆகிவிட்டது..
ReplyDeleteவிருது கொடுப்பதன் மூலமும் பகிர்வதன் மூலமும் ஏதோ ஒருவித மன நிம்மதி கிடைக்கிறது என் நினக்கிறோம்.. அதையே வேறு எதாவது ஒரு வழியில் ஆக்கபூர்வமாக செய்தால் அதன் மதிப்பு இன்னும் உயரும்...
ஆனால் சாத்தியமில்லை என்பதால் அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள்கிறேன் :-)
கற்பனை செய்து கொள்வதில் என் இனமடா நீ... மிக்க நன்றி.
Delete:)
Deleteஉங்களுக்கு "தில்லையகத்து" துளசிதரன் சார் கூட விருது கொடுத்திருக்கிறார் வாத்தியாரே. கூடவே சிஷ்யப்பிள்ளைகள் எங்களுக்கும். இதை நீங்க கவனிக்கலேன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteவிருதை அஞ்சு பேருக்கு கொடுக்கணும், நம்மைப் பற்றி ஏழு விஷயங்கள் சொல்லணும்னு யார் ஆரம்பிச்சு வச்சாங்கன்னு தெரியல. நிறைய பதிவர்கள் திணறியிருக்கிறாங்க.
என்னைக்கேட்டால் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் எழுதப்பட்ட பதிவுகளில் நல்ல பதிவுகளைப் பாராட்டி (பதிவர்களை அல்ல) விருது கொடுக்கலாம். அல்லது போட்டி ஏதேனும் நடத்தி அதில் வெற்றி பெறாத சில நல்ல பதிவுகளைப் பாராட்டி அவர்களுக்கு விருதுகளைக் கொடுக்கலாம்...
துளசிதரன் ஸார் கொடுத்திருக்கறத நான் கவனிக்கத் தவறிட்டேன் ஸ்.பை. பார்த்துடறேன்... அவருக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். கடைசிப் பாராவில் நீ சொன்ன கருத்துக்கள் எனக்கும் ஒப்புதலானவையே. மிக்க நன்றி.
Deleteஸ்.பை இதை ஆரம்பித்தது இண்டர்நேஷனல் ஆசாமியாக த்தான் இருக்கவேண்டும் சிலபல ஆங்கில பிளாக் களிலும் இவ்விருதுகளைப்பார்த்திருக்கிறேன்...
Deleteமுரளி சொல்வது போல புதிதாக வருபவர்களுக்குக் கொடுத்து உற்சாகப் படுத்தலாம்.
ReplyDeleteநன்று சொன்னீர் ஸ்ரீ. மிக்க நன்றி.
Deleteஇனிய வணக்கம் நண்பரே...
ReplyDeleteபல்சுவைக் கலைஞரான உங்களுக்கு இது
தகுந்த விருது தான்...
இன்னுமின்னும் பல விருதுகள் உங்களைத்
தஞ்சம் புகுந்திட என் விருப்பங்கள்...
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...
உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி நண்பரே...
Deleteஒரு பதிவு எழுத மேட்டர் கிடைச்சுதுனு நாலு பேர் நிம்மதியா இருப்பாங்களேனு நினைக்கலாம். ஹ்ம்ம்.
ReplyDeleteஇப்படி ஒரு ஆங்கிள் இருக்கோ...? மிக்க நன்றி நண்பரே..
Deleteகடைசியில் அப்பா சார நண்பரே ஆக்கிட்டீங்க வாத்தியாரே :-)
Deleteஅப்பா சார் இதுக்கு தான் ஒரே ஐடில இருந்து பின்னூட்டம் போடணும்ன்னு சொல்றது ஹா ஹா ஹா :-)
போடா... அப்பா ஸார் எனக்கு நண்பர் இல்லையா பின்ன...? (எப்டில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..? அவ்வ்வ்வ்வ்)
Deleteஎனக்கும் இந்த தொடர் விருது பற்றி உடன் பாடு இல்லை ஆனால் கொடுத்தது மதிப்பிற்குரிய மைதிலி என்பதால் அவரின் மனம் கோணக் கூடாது என்பதால் நான் வேறொரு தலைப்பில் எழுதி வைத்திருந்த பதிவை கொஞ்சம் மாற்றி விருது பதிவாக போட்டுவிட்டேன் இப்படிதான் சில வருடங்களுக்கு முன்பால் விருதுகள் கொடுக்கும் போது எனக்கு அதில் உடன் பாடு இல்லாததால் நானே ஒரு விருது க்ரியேட் பண்ணி அதை சாகம்பரி மற்றும் ரமணி சாருக்கு மட்டும் கொடுத்தேன் அந்த விருதை நன்றாக எழுதுபவர்களில் 2 பேரை வருடதிற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் நேரம் இன்மை காரணமாக கடந்த் வருடம் கொடுக்கவில்லை
ReplyDelete//தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க///
ஒவ்வொரு பதிவை படிக்கும் போது நமக்கு நேரம் இருந்தால் கருத்து சொல்வதுதான் மிக சிறந்த விருதுங்க
இந்த விஷயத்தில் மதுரைத்தமிழன் விருது பகிர்ந்தது அர்த்தமுள்ளதாக இருந்தது.
Delete//ஒவ்வொரு பதிவை படிக்கும் போது நமக்கு நேரம் இருந்தால் கருத்து சொல்வதுதான் மிக சிறந்த விருதுங்க//
கரெக்டா சொன்னீங்க...
saga YOU MADE MY DAY:)
DeleteTHANK YOU SOOO MUCH!
நீங்கள் உருவாக்கித் தந்த விருதுகள் என்கிற விஷயம் நான் மிக ரசித்த ஒன்று மதுரைத் தமிழா. அன்பான மைதிலி தந்த விருதை நானும் மதிக்கிறேன். ஆனாலும் எனக்குள் ஓடிய சிந்தனைகளை ஒளிக்காமல் சொல்லியிருக்கிறேன் இங்கு. பதிவினில் கருத்துக்கள் அனைவரும் சொல்வதே சிறந்த விருது என்பது மறுபேச்சின்றி ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று.
Deleteஸ்பை நாங்களும் ரொம்பவே திணறிட்டோம். இது எங்களுக்கு ரொம்பவே புதுசு! நாங்களும் இப்ப வாத்தியார் என்ன சொல்றாரோ அதைத்தான் யோசிச்சோம். என்ன பண்ணனும்னு தெரியாம, அது எப்படினு தெரியாம....விருது என்பதன் அர்த்தமே வேறு என்பதால்....ரொம்பவே யோசிச்சோம்....அப்புறம் சகோதரி மைதிலிதான் கொடுத்துருந்தாங்கன்ரதுனால அவங்க தளத்துக்கு போனப்பதான் இது சுத்துனு தெரிஞ்சுகிட்டோம். அப்பவும் ஒரே குழப்பம்...பகிரணுமா வேண்டாமானு....ஆனா தந்தது நம்ம சகோதரியாச்சேனு அந்த அன்புல திணறி, லிஸ்ட் போட்டா அது போகுது அனுமார் வால் போல...அப்புறம் பகிர்ந்தோம்ன்றது வேற விஷயம்.... வலைன்னா அப்படித்தான் பண்ணனும் போல அப்படின்னு நினைச்சு.....எங்களுக்குத் தெரிய வந்ததே லேட்டுதான்...
Deleteமதுரைத் தமிழன் சொன்னதை வழி மொழிகின்றோம்....நமக்கு வரும் பின்னூட்டங்களே மிகப் பெரிய அவார்ட் ஏனென்றால் அவை + அண்ட் - ரெண்டையும் சொல்வதால்...
Deleteவாத்தியாரின் கருத்துகளுக்கு நானும் ஒத்துப்போகிறேன் !!
ReplyDeleteபாஸிட்டிவ் , நெகட்டிவ் லாம் பட்டாசுங்ணே!!!
மிக்க நன்றி பிரதர்....
Delete//..விருதை எடுத்துக்கிட்டு பெருமாள் கோயில் புளியோதரை மாதிரி ஆளாளுக்கு பகிர்ந்துட்டிருந்தா...// :) :)
ReplyDeleteமிக்க நன்றி விஜயன்.
Deleteகணேஷ் சார்! நீங்கள் சொவதெல்லாம் சரிதான்! ஆனால் ஆரம்பத்தில் வலைப்பதிவு உலகம் என்றால் இன்னதென்று புரிபடாமலேயே எழுதிய காலத்தில் எனக்கு கிடைத்த முதல் விருது உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அப்புறம் அடிக்கடி விருதுகள் கிடைக்க கிடைக்க அந்த முதல் சந்தோஷம் என்பது , நுகர்வோர் பயன்பாடு விதி போல குறைந்து விட்டது. இப்போதும் புதியவர்கள் மட்டுமல்லாது விருதுகள் வாங்கும் பலரும் அடையும் சந்தோஷத்தை பார்க்கும் போது சந்தோஷமாகவே உள்ளது.
ReplyDeleteஇந்த ஆண்டு இந்த விருதினை முதன் முதல் தமிழ் வலையுலகில் தொடங்கி வைத்த ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நன்றி!
த.ம.7
நேர்மையாகச் சொல்வதென்றால் எனக்கு முதன்முதலில் விருது வழங்கப்பட்டபோது எக்கச்சக்கமாய் மகிழ்ந்து பதிவு போட்டிருக்கிறேன் என்பது இப்போது புரட்டிப் பார்க்கையில் தெரிகிறது. புதியவர்களுக்கு வழங்குவது என்பது நல்ல விஷயமாகவே தோன்றுகிறது ஸார். மகிழ்வாகவும் இருக்கிறது. எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி.
Deleteதங்கள்
ReplyDeleteசிறந்த திறனாய்வுப் பகிர்வையை
வரவேற்கிறேன்!
ஆயினும்,
தங்களுக்குத் தெரிந்த
மிகச் சிறந்த பதிவர்களுக்கு
மைதிலி கஸ்தூரிரங்கனும், மதுரைத் தமிழனும்
வழங்கிய விருதுகளில்
ஒன்றையேனும் பகிர்ந்திருந்தால் - அவர்களுக்கு
சிறந்த பின்னூட்டியாக இருக்குமே - அது
அவர்களை மேலும் முன்னேறத் தூண்டுமே!
இனி பகிரலாம் நண்பரே. மிக்க நன்றி.
DeleteRecently I read an article on NALLASIRIYAR VIRUDHU in Dinamalar which almost coincides with your post.
ReplyDeleteஅட... ஆச்சரியமா இருக்கே இந்த ஒற்றுமை..? மிக்க நன்றி மோகன்.
Deleteஅண்ணா
ReplyDeleteஎனக்கு இந்த நடைமுறை புதுசு! மேலும் தகுதியுள்ளவர்களுக்கு கொடுக்க முடியுதேங்கிற உற்சாகத்தில் ஆர்வகோளாற உடனே செய்துட்டேன், எனக்கு கொடுத்தது மதிப்பிற்குரிய கரந்தை அண்ணா! அப்புறம் ப்லாக் ப்லாகா ஏதோ follow my blog செட்டிங் போல அதுவும் இருக்கு:(( உங்களை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிவிட்டதற்கு சாரி அண்ணா:(( but உங்களுக்கு இந்த விருது பொருத்தமானது தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லைனா:))
இந்த இரண்டு அன்புள்ளங்களும் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டு மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ** மன்னிபெல்லாம் பெரிய வார்த்தை அண்ணா! எனக்கு புரிகிறது:))
கரந்தை ஜெயகுமார் மதிக்கப்பட வேண்டிய மனிதர்தான். அதனால் நீ விருது பெற்று மகிழ்ந்திலும் பகிர்ந்ததிலும் எனக்கும் மகிழ்வே சிஸ். கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன், தங்கை நெற்றியில் வைத்துவிடும் விபூதியை ஏற்றுக் கொள்வது மாதிரியான மனநிலை என்னுடையது. அதைத்தான் எழுதத் தெரியாமல் இப்படி எழுதிட்டேன்னு நெனக்கறேன். சங்கடத்தில உன்னை மாட்டி விட்டது உண்மையில் நானம்மா. ஆனாலும் உன் புரிந்துணர்தலில் மிகமிக மகிழ்கிறேன். மிக்க நன்றி.
Deleteஉங்க கருத்து சரி தான் சார்..எனக்கும் இந்த விருதில் உடன்பாடில்லை. சில இடங்களில் டாக்டர் பட்டம் மாதிரி ஆகிடுச்சு, இந்த விருது!
ReplyDeleteமிக்க நன்றி நண்பா.
Deleteஎன்னைப் பொறுத்தவரை விருது கொடுப்பதற்கோ வாங்குவதற்கோ உரியவன் அல்ல!
ReplyDeleteEniya vaalththukal..
ReplyDeleteVetha.Elangathilakam.
வாழ்த்தியமைக்கு மகிழ்வான நன்றி சிஸ்.
Deleteபொதுவாக அறியப்பட்ட பெரிய விருதுகள், போட்டிகளில் கிடைக்கும் விருதுகள் எல்லாம் சரி. ஆனால் சிலர் பட்டம் வாங்குவதற்காகவே பரிசு தரும் ஆட்களைப் பிடித்து வாங்கிக் கொள்வார்கள்! கொடுப்பதற்கு தயாராகும் ஆட்களும் அந்த விழாவில் மேடையில் தோன்றி சில வினாடி லைம் லைட்டில் இருக்கலாம்! அவ்வளவுதான் விஷயம். இங்கு விருது கொடுத்தவர்கள் பிரபலமில்லாவிட்டாலும் பிரியத்தால் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் சரியான ஆளாய்ப் பார்த்துத் தான் கொடுத்திருக்கிறார்கள்! எஞ்ஜாய்! - ஜெ.
ReplyDeleteரைட் ஜெ. விருதை அனுபவிக்கிறேன் மகிழ்வுடன். மிக்க நன்றி.
Deleteஅனைவருமே ரஜினி காந்த் ஆகிவிட முடியாது என்பது உண்மைதான்.
ReplyDeleteபடிப்பது என்பதே மிகவும் குறைந்து விட்ட இக்காலத்தில், எழுதுகிறார்களே, அவர்களைப் பாராட்ட வேண்டுமல்லவா?
ஒவ்வொரு வலைப் பதிவரும், ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.பாராட்டுவோம்
பல சமயங்களில் விருது கிடைக்கும்போது நாம் அதற்கு தகுதியுடையவர் தானா என்ற எண்ணம் தோன்றும்!
ReplyDeleteவிருதுகள் கொடுப்பது, பெறுவது என்று சில பதிவுகள் வெளிவருகிறது. சிலர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விருது பெற்ற மகிழ்ச்சியில் பதிவு எழுதுவதும் நடக்கிறதே!
எனக்கும் நாலு பேர் கொடுத்திருக்கிறார்கள். இன்னமும் எனது பதிவில் எழுதிட வில்லை! :)
எழுதும் ஆர்வத்தை விருதுகள் தூண்டும் என்பது என் கருத்து .என்றாலும் விருதுகள் மட்டும் ஒரு படைப்பின் தகுதியை,தர்தைக்குறிப்பவையும் அல்ல அண்ணாச்சி .
ReplyDeleteஆனாலும் விருதுகளின் போது பலரின் சந்தோஸப்பகிர்வுகள் அதிகம் வருவதை வலையில் அவதானிக்கவும் முடிகின்றது. உங்களுக்கு விருது கிடைத்தது சந்தோஸமே .வாழ்த்துக்கள்.
விருது வாங்கலையோ... விருது..! இதே தலைப்பில் நானும் பதிவிட்டேன் .விருது வேண்டுவோர் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டேன் .சோகமான உண்மை என்னவென்றால் யாருமே இதுவரையிலும் விண்ணப்பிக்கவில்லை !
ReplyDeleteத ம 9
முதலில் திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றி. இந்த விருது வழங்குதலை நான் தான் ஆரம்பித்தேன் என்று நானே சொல்லிக்கொள்ள கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அவர் இங்கு இதனைச் சொல்லியிருப்பது எனது சங்கடத்தை தீர்த்து இருக்கிறது.
ReplyDeleteகிட்டத்தட்ட 6 மாதங்களாக ரொம்பவும் சோர்ந்து இருந்த என்னை இந்த விருது எழுப்பி உட்கார வைத்திருக்கிறது என்பது நூறு சதவிகிதம் உண்மை. அதுவும் எனக்கு ரொம்பவும் அறிமுகம் இல்லாத ஒருவர் எனக்கு இதை பகிர்ந்து இருக்கிறார் என்பதில் பெருமையும் இருந்தது.
'யான் பெற்ற இன்பம்..' என்ற வகையிலும், சிலருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் இந்த விருதினை பகிர்ந்து கொண்டேன்.
இந்த விருது பற்றிப் பலவித கருத்துக்கள் வருவது நிச்சயம் ஆரோக்கியமான ஒரு விஷயம் தான். நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா எண்ணங்களும் எனக்கும் தோன்றியவை தான்.
வெளிப்படையாக எழுதியிருப்பது நல்ல விஷயம்.
விருது வாங்கியதற்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
தோழமையுடன்,
புதுவை வேலு