இந்தச் சிரிப்பரங்கத்துல எல்லாரும் சொல்ற நகைச்சுவைகளைக் கேட்டவாய்விட்டுச் சிரிச்சுட்டுப் போக வந்த என்னை சிறப்பு விருந்தினரா மேடையேத்தி எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்துட்டார் சிரிப்பானந்தா. பத்தாததுக்கு சிறப்பு விருந்தினர் சிரிப்புரை ஆற்றுவார்னு மைக்கை வேற கைல கொடுத்து ‘ஙே’ முழிக்க வெச்சுட்டார். எனக்கு நகைச்சுவை அவ்வளவா வராதுங்க. சரி, ஏதாவது ஜோக் சொல்லி சமாளிக்கலாம்னா சட்னு ஜோக் எதுவும் நினைவுக்கு வரலை. அதனால மொழியைக் கையாள்வது பத்தி உங்ககிட்ட பேச விரும்பறேன்.
எந்த மொழியிலயும் வார்த்தைகளை சரியாக் கையாளணுங்க. ஒரு வார்த்தை... சிலசமயம் ஒரு எழுத்தை மாத்திப் போட்டாலும்கூட அர்த்தமே மாறிடற அபாயம் இருக்கு. அதும் தமிழ்மொழியைப் பொறுத்தவரை மிக ஜாக்கிரதையா இருக்கணும் வார்த்தை அமைக்கறதுல. நான் சின்னப்பையனா இருக்கறப்ப பக்கத்து வீட்டுல இருந்த அங்கிள் அந்த ஏரியாவுக்கு மட்டும் ஒரு சிறு பத்திரிகை நடத்திட்டிருந்தார். ஒரு இஷ்யூல ‘மேலத்தெரு ராமநாதன் இறந்து விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்’னு அஞ்சலி செய்தி போட்டிருந்தார். அடுத்தநாளே புத்தகமும் கையுமா சாட்சாத் அந்த ராமநாதனே இவர் வீட்டுக்கு வந்து கன்னாபின்னான்னு கத்தறார். கடைசில ஒருவழியா சமாதானமாகி அடுத்த இஷ்யூல மறுப்பு வெக்கறதுன்னு முடிவாச்சு. இவர் மறுப்பை இப்படி வெச்சாரு- ‘மேலத்தெரு ராமநாதன் இறந்து விட்டார் என்று சென்ற இதழில் வந்த செய்தி தவறானது. அவர் இறக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ பாருங்க.... ‘மேலத்தெரு ராமநாதன் இறந்து விட்டார் என்று சென்ற இதழில் வந்த செய்தி தவறானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் இறக்கவில்லை.’ அப்படின்னு வந்திருக்கணும்.
இப்படித்தாங்க ஒரு வார்த்தை மாறினாகூட பிரச்னையாய்டும். வயதான ஒருத்தர் பஸ்ல போய்ட்டிருந்தார். அவர் கைல அவர் மகன் குடுத்துட்டுப் போன ஒரு அப்ளிகேஷன் இருந்தது. ‘இதுல என் போட்டோ மட்டும் ஒட்டி போஸ்ட் பண்ணிடுங்க‘ன்னு பையன் சொல்லியிருந்ததால அடையாளமா போட்டோவையும் அப்ளிகேஷனோட பிடிச்சிட்டிருந்தாரு. அப்ப பஸ்ல ஒருத்தன் இடிக்கவும் போட்டோ கை நழுவி கீழ விழுந்து ஒரு பெண்ணோட காலடில போய் விழுந்துருச்சு. இவர் கீழகுனிஞ்சு அந்தப் பெண்கிட்ட, “உங்க சேலையக் கொஞ்சம் மேல தூக்குங்க. நான் போட்டோ எடுத்துக்கறேன்”ன்னாரு. “உங்க சேலையக் கொஞ்சம் மேல தூக்குங்க. நான் கீழ கிடக்கற என்னோட போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லியிருக்கணும். ‘கீழ கிடக்கற என்னோட’ங்கற வார்த்தைய அவர் சேர்க்காம விட்டதால பாவம்... தர்மஅடி தாங்க கிடைச்சது.
இப்படித்தாங்க ஒருத்தர் தனக்கு பூர்விக சொத்தா இருந்த வீட்டை விக்கறதுக்காக சொந்த கிராமத்துக்குப் போனாரு. சொந்த கிராமம்னு பேரே தவிர, பிறந்ததுலருந்து சிட்டிலயே வளர்ந்தவரு அவரு. கிராமம் அவருக்குப் புதுசு. போன வேலை முடிஞ்சதும் கிளம்பலாம்னு பாத்தா, அடுத்த நாள்தான் பஸ்ன்னுட்டாங்க. நைட் தங்கறதுக்கு அந்த கிராமத்துல லாட்ஜும் இல்ல. யார் வீட்லயாவது அனுமதி வாங்கிட்டுத் தங்கிக்கங்கன்னுட்டார் மணியக்காரர். ஒரு வீட்ல கதவைத் தட்டி நிலைமையச் சொல்லி அனுமதி கேட்டாரு. “மன்னிச்சுக்கங்க. இந்த வீட்ல வயசுப் பொண்ணுங்க இருக்காங்க. வேற இடம் பாத்துக்கங்க”ன்னு பதில் வந்துச்சு. அடுத்தடுத்த ரெண்டு வீடுகள்லயும் இதே நிலைமைதான். இவர் உடனே சுதாரிச்சுக்கிட்டு அதுக்கடுத்து கதவைத் தட்டின வீட்ல, “இந்த வீட்ல வயசுப் பொண்ணுங்க இருக்கா?”ன்னு முதல்ல கேட்டாரு. வீட்டுக்காரர், “ஏன் கேக்கறீங்க?”ன்னு கேட்க, “இல்ல... இன்னிக்கு நைட் இங்க தங்கலாமான்னு கேக்கத்தான்...” அப்படின்னு இவர் பதில் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டார் நல்லா.
தமிழ்லதான் இப்படின்னு இல்லீங்க... மத்த மொழிகள்லயும் இதுமாதிரி பிரச்னைகள் வரும். அதும் வேற மொழிய அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு பேசறது ரொம்பவே ஆபத்துங்க. என் நண்பர் ஒருத்தர் புதுடில்லி போறதுக்காக டிரெய்ன் ஏறினார். அவருக்குத் தெரிஞ்ச நண்பர் அங்க கன்னத்துல கைய வெச்சுட்டு உக்கார்ந்திருந்தார். எதிர் வரிசையில ஒரு சிங் தம்பதி. இவர் நண்பரை குசலம் விசாரிச்சுட்டு, “ஏன் கன்னத்துல கை வெச்சுட்டிருக்கீங்க”ன்னு கேக்க... அவர் சொன்னாரு, “இந்த சிங் பொம்பளை அறைஞ்சுட்டா...”ன்னு. “ஏன்யா?”ன்னு இவர் கேக்க... “டில்லிலருந்து வரும்போது இவங்க என் கம்பார்ட்மெண்ட்லதான் வந்தாங்க. இப்பவும் எதேச்சையா என் கம்பார்ட்மெண்ட்ல எதிர் சீட் அமைஞ்சதும் ஸ்மைல் பண்ணாங்க. ‘என்ன அதுக்குள்ள டில்லி திரும்பறீங்க‘ன்னு கேட்டாங்க...”ன்றப்ப இவர் குறுக்கிட்டு, “தமிழ்லயா கேட்டாங்க?”ன்னார். “இல்லீங்க. இந்திலதான் கேட்டாங்க. நான் புரிஞ்சுகிட்டேன். நமக்கும் கொஞ்சம் இந்தி தெரியும்ல...”ன்னாரு இவரு. “சரி, எதுக்கு அடிவாங்கினே... அதச்சொல்லு”ன்னு இவர் கேக்க, “வேலை முடிஞ்சிருக்கு. அப்பறம் என்ன?ன்னு நான் இந்தில பதில் சொன்னேன். அதுக்குப் போய் பளார்னு அறைஞ்சுட்டாய்யா...”ன்னாரு. “ஸம்திங் ராங். நீ இந்தில சொன்ன வார்த்தைய அப்படியே சொல்லு...”ன்னு இவர் சந்தேகமாக் கேக்க... “ஒண்ணுமில்லப்பா.. ‘ஜோலி கே பீச்சே க்யா ஹை’ன்னு சொன்னேன். அவ்ளவ்தான்...”அப்படின்னாரு அறை வாங்கினவரு.
பாத்தீங்களா.... மொழிங்கறது மனுஷனுக்கு எத்தனை சிறப்பானதுன்னு இப்பப் புரிஞ்சுதுங்களா நல்லா... அதனால நீங்க, நான் எல்லாருமே நல்லா யோசிச்சு பேசறது, எழுதறது எல்லாத்துலயும் மொழியைச் சரியாக் கையாளணும்னு கேட்டுக்கிட்டு எனக்குப் பேச வாய்ப்புத் தந்த சிரிப்பானந்தாவுக்கும், என் பேச்சை பொறுமையாக் கேட்டு சிரிச்ச உங்களுக்கும் நன்றிகூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
.....ஜூன் எட்டாம் தேதி அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் நான் பேசிய... ஸாரி, எதிர்பாராம பேச வைக்கப்பட்ட உரை இது. பிடிச்சிருக்கா உங்களுக்கு?
|
|
Tweet | ||
ஹஹஹா.. எல்லாமே ரசிக்கும்படி இருந்தது தலைவரே..
ReplyDeleteஇப்படித்தான் என் கல்லூரி நாட்கள்ல அரைகுறையா தெரிஞ்ச தெலுங்க வச்சிக்கிட்டு மறுநாள் காலேஜுக்கு வருவாளா மாட்டாளா என ஒரு தெலுங்குதேசத்து தோழியை பார்த்து "நாளைக்கு வர்றியா" என தெலுங்கில் கேட்டு தர்ம அடி வாங்காத குறையாக அவள் ஆங்கிலத்தில் வசைபாடியதை இன்றும் மறக்க முடியாது.. அப்படி என்ன கேட்டுட்டேன்.. "ரேப்புக்கு வச்சேவா" ன்னேன்.. இது தப்பா.. ;-)
ReplyDeleteமுதல் வரவாய் ரசித்துச் சிரித்ததற்கு நன்றி. உன் தெலுங்கு பேசிய அனுபவம்... ஹா... ஹா... ஹா...
Deleteஹா... ஹா... ஹா... ரசிக்க வைத்தது அண்ணா.
ReplyDeleteரசித்துச் சிரித்த குமாருக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteபொருத்தமாய் தொகுத்து பேசி சமாளித்து இருக்கீங்களே ,சபாஷ்!
ReplyDeleteத ம 2
உற்சாகம் தந்த கருத்துக்கு உளம்கனிந்த நன்றி.
Deleteதிறம்பட மொழியைக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅடி வாங்கிய அடிவாங்கிகள்
படித்திருப்பார்கள் என நம்புகிறேன்!
ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஹாஹாஹாஹா
ReplyDeleteரசித்ததை அழகாய் சிரிப்பால் உணர்த்திய ஸ்ரீவிஜிக்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteசூழ்நிலையைத் தாங்கள் கையாண்டவிதம அழகு. தாங்கள் மொழி ஆளுமை கைவரப் பெற்றவர் என்பதற்கு தங்கள் பேச்சே தக்க சான்று.
ReplyDeleteநன்று இரசித்தேன்.
மகிழ்வு தந்தது உங்கள் வருகை முனைவரையா. இரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteரொம்பவே புடிச்சிருக்கு. . தப்பா ஏதும் எழுதலையே..?
ReplyDeleteரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteஹா ஹா ஹா.... மூன்றுமே செம ஜோக்குங்க.
ReplyDeleteபடிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியவில்லை.
நன்றாக பேசி இருக்கிறீர்கள். பதிலைப் படிக்கும் போது
நகைச்சுவைத் தென்றல் சண்முக வடிவேல் ஐயாவின் ஞாபகம்
வந்து போனது.
வாழ்த்துக்கள் கணேஷ் ஐயா.
படித்து ரசித்து சிரித்து வாழ்த்திய அருணாவுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteரொம்பவே ரசிச்சு சிரிச்சேன்,பாலகணேஷ் அவர்களே!///அந்த இந்தி வார்த்தைக்குப் பொருள் தான் என்ன?நான் ஈழத் தமிழன்.){‘ஜோலி கே பீச்சே க்யா ஹை}ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDeleteரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. (பொருள் இங்க எழுத முடியாது. வேற யார்ட்டயாவது கேட்டுக்குங்க.)
Delete
ReplyDeleteசின்ன சின்ன வார்த்தைகள் கூட பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும் .. (நான் சிக்கியது ஒரு விசயத்தில் அதை இங்கு சொல்ல முடியாது அப்படிஒரு பேராபத்து அது ) அதிலிருந்து தப்பிக்க பெரும்பாடு பட்டேன் வாத்தியாரே ...
அடடே... சொந்த அனுபவம் வேற இருக்கா...? அப்பறம் தெரிஞ்சுக்கறேன். ரசிச்சுப் படிச்ச அரசனுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteசிறப்பாக இருந்தது சிரிப்பான பேச்சு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறப்பாக இருந்தது சிரிப்பான பேச்சு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇருமுறை அழுத்தமாகக் கருத்திட்டு ரசித்த சுரேஷ்க்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅருமையான நகைச்சுவை சிரிக்க வைத்தன....
ReplyDeleteரசித்துச் சிரித்த நண்பனுக்கு மகிழ்வான நன்றி.
Deleteஅந்த சிறு பத்திரிகையாளர் செய்திகளை ரொம்பவே முந்தித் தருபவர் போல! அதற்குப் போய் அந்த 'இன்னும் இறக்காத' மனிதர் கோபித்துக்கொள்ளலாமா! - ஜெ.
ReplyDeleteஅதானே... மிக்க நன்றி.
Deleteஅண்ணா உண்மையில் ஜோக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்:)) இந்த ஜோக்ஸ் கு சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வந்துடுச்சு:)) செம !! செம!!!
ReplyDelete// எனக்கு நகைச்சுவை அவ்வளவா வராதுங்க.// உலக நடிப்புடா சாமி (இதை கௌண்டமணி சத்தியராஜை பார்த்து சொல்லும் டோனில் படிக்கவும்)
கவுண்டமணியின் அந்த டயலாக் டெலிவரி நான் மிகமிக ரசிச்ச விஷயங்கள்ல ஒண்ணும்மா மைதிலி. அதை இங்க நீ சொன்னதுல சிரிச்சுட்டேன். அது ஒண்ணுமில்லம்மா... சிறப்பு விருந்தினர் சிரிப்பாப் பேசுவார்னு அவங்க பில்டப் கொடுத்ததால மக்கள் நிறைய எதிர்பார்த்துடக் கூடாதுன்னுதான் அவையடக்கமா அப்டிச் சொன்னது. அப்டிச் சொல்லிட்டு பேசினா ஜோக்கை நிறைய ரசிப்பாங்கன்னு ஒரு ட்ரிக். கண்ணில் நீர்வர ரசித்துச் சிரித்த தங்கைக்கு மகிழ்வான என் நன்றி.
Deleteநல்ல நகைச்சுவை....
ReplyDeleteரசித்த உஙகளுக்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteஹா... ஹா... ஹா...
ReplyDeleteரசித்தேன்...வாத்தியாரே...
ரசித்த உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.
Deleteசிறப்பான சிரிப்பா இருந்தது கணேஷ் சார்.
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஹா.ஹா...
ReplyDeleteரொம்ப பிடித்தது ...
சிரித்து ரசித்த சீனிக்கு என் இதயம் நிறை நன்றி.
Delete:-)))))))))))))))))))))
ReplyDeleteசிரித்து மகிழ்ந்து எனக்கு மகிழ்வு தந்த துளசி ‘டீச்சருக்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteமுன்தயாரிப்பின்றி பேசிய பேச்சே இவ்வளவு நகைச்சுவையாக உள்ளதே.. முன்கூட்டி திட்டமிட்டு பேசியிருந்தால் இன்னும் எவ்வளவு நகைச்சுவையாக இருந்திருக்கும்... பகிர்ந்த அனைத்துமே ரசிக்கவைத்தன. பாராட்டுகள் கணேஷ்.
ReplyDeleteரசித்துப் பாராட்டிய தோழிக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஹா ஹா வாத்தியாரே, அப்படியே நீங்க நேர்ல பேசற மாதிரியே இருந்தது.... சூப்பர்....
ReplyDeleteபேச்சை ரசித்த ஸ்.பைக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteஅருமையான பதிவு கணேஷ் சார். சில சமயம் முன்னேற்பாடு இல்லாமல்
ReplyDeleteசெய்யும் திடீர் சமையல் சிறப்பாக அமைந்து விடும். அது போல்தான் சிறப்பாக அமைந்துவிட்டது உங்கள் சிரிப்பரங்கம். உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் கணேஷ் சார்.
ரொம்ப நாளாச்சு புவனேஸ்வரியம்மாவப் பாத்து... நலந்தானே... ரசித்துப் படித்து என்னை வாழ்த்திய உங்கள் அன்புக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteஅற்புதம்
ReplyDeleteநிச்சயம் அரங்கம் அதிர்ந்திருக்கும்
வாழ்த்துக்கள்
ஆம். அரங்கத்தின் கைத்தட்டல்தான் தைரியமாக தொடர்ந்து பேச உத்வேகம் தந்தது ரம ணி ஸார். உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.
Deleteஹாஹா அருமை அண்ணா... உதாரணங்கள் சிரிக்க வைத்தாலும் சொன்ன கருத்து சீரியஸ் ரகம்....
ReplyDeleteநாம எப்பவும் அப்டித்தானே சிஸ்... ரசித்துச் சிரித்த உனக்கு என் மகிழ்வான நன்றிம்மா.
Deleteஹாஹாஹாஹாஅ.......செம நகைச்சுவை....உங்களுக்கா நகைச்சுவை அவ்வளவா வராதுன்னு சொல்லிக்கிறீங்க!??!!!!!!!!!!!!!!!.....அவைஅடக்கம்?!?!.....ஆனா அவை அடங்கி இருக்காதே சார்...அதான் சிரிச்சு சிரிச்சுக்கிட்டே இருந்துருப்பாங்களே!
ReplyDeleteசூப்பர் பதிவு...சாரி உங்கள் பேச்சு......!!
அதே... அதே... அவையடக்கம்தான் காரணம். பேச்சை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஉங்களுக்கு நகைச்சுவை வராதுன்னா எங்களுக்கு? கூடிய சீக்கிரத்தில் நகைச்சுவைப் பேச்சாளராகவும் ஆயிடுவீங்கன்னு நினைக்கிறேன். அனைத்தும் சட்டென்று சிரிக்க வைத்தன
ReplyDeleteஅடக்கம் அமரருள் உய்க்கும் முரளி. அதேங் அப்படி.... சிரித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteதங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !
ReplyDeleteஆரம்பம் முதல் இறுதி வரை சிரித்துகொண்டே படித்த அதே நேரத்தில், இனி ஜாக்கிரதையா பேசனும்னு யோசிக்கவும் வச்ச பதிவு !
ReplyDeleteநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !
http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html
( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )