கூகிள், வலைத்தளம் என்கிற ஒரு வசதியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. வலைத்தளத்தின் உரிமையாளர்கள் அவரவர் படைப்புகளை அதில் வெளியிடுகிறார்கள். வாரப்பத்திரிகைகளைப் போல இதற்கும் ஒரு மிகப்பெரிய வாசகர் வட்டம் உண்டு. - இந்த அளவுக்கு மட்டுமே எனக்கு வலையுலகைப் பற்றித் தெரிந்த சமயம் அது. அப்போது திரு.பட்டுக்கோட்டை பிரபாகரிடம் உதவியாளராகவும், அவர் பொறுப்பாசியராக இருந்த ‘ஊஞ்சல்’ இதழின் உ.ஆ. + வடிவமைப்பாளராகவும் இருந்த காலகட்டம். “வலையுலகில் சிறப்பாக எழுதுபவர்களைப் பற்றியும் அவர்கள் தளங்களைப் பற்றியும் ஒரு தொடர் வரப்போகுது. கேபிள் சங்கர்னு பிரபலமான ஒருத்தரை எழுதச் சொல்லியிருக்கேன். மனுஷன் பின்றார்” என்றார் பி.கே.பி. என்னிடம். (கேபிளார் எதைப் பின்னினாரோ? ஹி... ஹி....) அப்படி அறிமுகமாச்சு அவரின் பெயர். பின்வந்த மாதங்களில் ஊஞ்சல் இதழ்களில் அவர் எழுதியதைத் தொடர்ந்து படித்து வந்தேன். அவரின் எழுத்து நடை பிடிச்சது எனக்கு
.
பின்னொரு சந்தர்ப்பத்துல சைதாப்பேட்டை பெட்டிக்கடை ஒண்ணுல ‘கொத்து பரோட்டா’ என்கிற கேபிள் எழுதிய புத்தகம் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் உன்னிப்பதை பார்த்துட்டு, ”நம்ம ஏரியாவுலதான் ஸார் இருக்காரு கேபிள் சங்கர்”ன்னார் கடைக்காரர். என் ஏரியாவில் இருக்கும் அவரைச் சந்திக்கணும் என்ற ஆசை இருந்தாலும் வழி தெரியாம அமைதி காத்தேன். காலத்தின் கரைசல்ல சேட்டையண்ணாவின் வழிகாட்டுதல்ல நானும் ஒரு பதிவராகி சிலபேராவது அடையாளம் காணுற நிலைக்கு அடுத்த ஆறு மாசங்கள்ல வளர்ந்திருந்தேன். அதேமாதிரி கேபிளாரின் பதிவுகளைத் தொடர்ந்து படிச்சு அவர் வெரைட்டி வாரியா எழுதறதையும், அவருக்கிருந்த மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும் கவனிச்சு அவர் பிரபலம்கறதை புரிஞ்சு வெச்சிருந்தேன். அப்போ சென்னைல புத்தகக் கண்காட்சி வந்தது. அங்கதான் கேபிள் சங்கரை முதன்முதலில் சந்தித்தேன்.
பு.க.வைப் பொறுத்தவரை என்னென்ன ஸ்டால்களில் புத்தகங்கள் வாங்கலாம்கறதை சர்வே எடுக்க ஒரு முறையும், அவற்றை வாங்கறதுக்காக ஒரு முறையும் போறது வழக்கம். பார்ப்பதற்காகவும்... பலமுறை விசிட் அடிக்கறது உண்டு ஐ மீன் நண்பர்களைப் பார்ப்பதற்காக.... புக் சர்வேக்காக முதல்முறை போய் சுத்தி வந்துக்கிட்டிருந்தபோது டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலின் வாசலில் இரு நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்த கேபிளாரைக் கண்டேன். புத்தகங்களின் அட்டையில் போட்டோவாகப் பார்த்திருந்த அவரை எளிதா அடையாளம் காண முடிஞ்சது. முதல் பார்வைல நெல்லைக் கோயில் யானையை நினைவுபடுத்தினார். நோ... நோ... உருவத்தை வைச்சுச் சொல்லலீங்க... நீண்ட நேரமாய் நின்னுருப்பார் போலருக்கு கால் மாற்றிக் கால் மாற்றி நின்றபடி பேசிக் கொண்டிருந்தது எனக்கு அப்படி உருவகப்படுத்தியது. அருகில் சென்று உற்றுப் பார்த்தபடி சில நிமிடங்கன் நின்றிருந்தேன். என்னை மாதிரி ஒரு உருவம் பக்கத்துல வந்து எதுவும் பேசாம உத்துப் பாத்துட்டிருந்தா ஒண்ணு பயப்பட்டு விலகணும்... இல்ல, நெருங்கி வந்து பேசணும். ஆனா கேபிள் கொஞ்சமாச்சும் கண்டுக்கணுமே... ஊஹும்... உலகையே மறந்து அவங்களோட பேசிட்டிருந்தார். சரி... அப்பத்தானே அவர் பிரபலம்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு கிட்டப் போய் வலிஞ்சு என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். முதல் அறிமுகம்ங்கற தயக்கம் எதுவுமில்லாம சகஜமாப் பேச முடிஞ்சது கேபிளாரின் பலம்!
அதுக்கடுத்து அவர் போட்ட ‘கொத்து பரோட்டா’வுல என்னை சந்திச்சதைப் பத்தி சில வரிகள் எழுதியிருந்தார். ஆனா பாருங்க... பேரைப் போடாம ’பிகேபியின் உதவியாளர்’னு போட்ருந்தார். என்னை மாதிரி ஒரு ஒலகப் பிரபலத்தோட(!) பேரை மறக்கறது ஞாயமா சொல்லுங்க... நான் கடுங்கோபமாகி பின்னூட்டப் பெட்டில அலுதுட்டே ஒரு கருத்துப் போட்டேன். அதைப் பார்த்ததும் நினைவு வந்து மைல்டா ஒரு ஸாரி சொல்லி என் பேரை பதிவுல அப்டேட்டினார். அதுக்கப்புறம் முதல் ஆண்டு பதிவர் திருவிழாவின் ஏற்பாடுகளுக்கான சந்திப்புகளில் அடிக்கடி அவரைப் பார்க்க, பழக வாய்ப்புக் கிடைத்தது. சந்திக்கற பிரபலங்கள்ட்ட இருந்து முடிஞ்சவரை திருடிக்கற பழக்கமுள்ள நான் கேபிள்ட்ட இருந்தும் திருடிக்கிட்டேன் - எதிராளி கோபமா பாய்ஞ்சாலும் நாம எப்படி கூலா டீல்பண்ணி மேட்டரை ஸ்மூத்தாக்கறது, நாலு பேர் இருக்கற இடத்துல எப்படி அனைவர் கவனத்தையும் கவருவது... சுருக்கமாச் சொன்னா, சக மனிதர்கள்ட்ட பழகுறது எப்படிங்கறதை அவர்ட்டருந்து எடுத்து(திருடி)க்கிட்டேன்.
அவர்கூட நிறையப் பேசற சந்தர்ப்பங்கள் அமைஞ்சதும், உணவகங்களை எழுதறதுல சிகரமான அவர்கூட தாய்லாந்து உணவை ருசிச்சுச் சாப்பிட்டதும், அதை என் தளத்துல நான் எழுதினதும் எனக்கு மிகமிக மகிழ்ச்சி தந்த விஷயங்கள். மெரீனா பீச்ல பாத்தீங்கன்னா... நீச்சல் கொஞ்சங்கூட தெரியாம அலையில கால் நனைச்சுட்டு குதிச்சுட்டு மேலோட்டமா கடலை தெரிஞ்சுட்டு வருவாங்க சிலர். வேற சிலரோ கடலுக்குள்ள முங்கி நீச்சல் போட்டு அடியாழம் வரை போய்ட்டு வர்ற அளவுக்கு கடலை தெரிஞ்சிருப்பாங்க. சினிமாங்கற கடல்ல நான் முதல் ரகமா இருக்கறப்ப அவர் ரெண்டாவது ரகமா இருந்தார். தொலைக்காட்சித் தொடர்கள்ல நிறைய நடிச்சும், எழுதியும் இருந்த அவர் அப்ப ரெண்டு மூணு படங்களுக்கு வசனகர்த்தாவா இருந்தார். ‘கலகலப்பு’ படத்தில் இவர் எழுதின வசனங்கள் ரொம்பப் பிடிக்கும் எனக்கு.
முதலாமாண்டு பதிவர் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினரா பி.கே.பி. வர்றதா முடிவானதுப்ப கேபிள் தான் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் அதற்கு ‘தொட்டால் தொடரும்’ என்று தலைப்பு வெக்க விரும்பறதாவும் சொல்லி பிகேபிட்ட பேசச் சொன்னார். (அவரின் நாவல் தலைப்பு). பி.கே.பி.க்கு தர மனமில்லை. மறுத்துட்டாரு. கேபிளாரின் புரொடியூசர் டைட்டிலை ஏற்கனவே ரிஜிஸ்டர் பண்ணிட்டதால அந்தப் பேர்லயே படம் ஆரம்பமாச்சு. அப்ப கேபிள்ட்ட படத்தப் பத்திக் கேட்டேன். என்ன சப்ஜெக்ட், யார் ஹீரோ, முக்கியமா... யார் ஹீரோயின்... ஹி... ஹி... ஹி... அவர் சொன்னாரு...
இது காதல் த்ரில்லர் வகைக் கதை .முதல் பாதி லவ், ரொமான்ஸ் என்று நகரும் கதையின் மறுபாதி ஆக்ஷன் த்ரில்லராக வேகமெடுக்கும். ஹீரோவாக தமன், ஹீரோயினாக அருந்ததி நடித்திருக்கிறார்கள். இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் வின்சென்ட் அசோகன், ஹலோ எப்.எம். பாலாஜி நடித்திருக்கிறார்கள். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.சி. சிவன் இசையமைத்துவருகிறார்.
அவரோட ப்ளாக்கில நிறைய பக்கப் பார்வைகள் பெறுவது சினிமா விமர்சனம். யாரோட படமா இருந்தாலும் அதோட ப்ளஸ் மைனஸை விரிவா அலசி - டெக்னிகலாவும் அலசி - விமர்சனம் எழுதுவார். வாசகர்களுக்கு அவர் நடுநிலையா எழுதறது பிடிக்கும்னாலும் எல்லாப் படத்தையும் குறை சொல்றார்னு சினிமா சைட்ல ஒரு கருத்து இருக்கறதா என் ஃபீலிங். அவர்ட்ட, ‘தலைவா... நீங்க படமெடுக்கற பட்சத்துல அதை விமர்சனம் எழுதிக் கிழிக்க ஒரு க்ரூப்பே ரெடியாயிருக்கும். எல்லாத்தையும் நொட்டை சொல்ற இந்த ஆளு படம் எடுத்தா குறையில்லாம எடுத்திருவானான்னு கேக்க நிறையப் பேரு இருப்பாங்க...’ன்னேன். அதுக்கு அவர் கூலா சொன்னார்....
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தூவார் சந்திரசேகரனே எனக்கு அப்படித்தான் கிடைத்தார். அவர் தயாரித்த ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படத்துக்கு நான் எழுதியிருந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு என்னிடம் பேசினார். பிறகு என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர், அப்படியானால் நீங்கள் வந்து ஒரு படம் எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம் என்றார். சண்டையிலும் விவாதத்திலும்தான் எங்கள் நட்பு தொடங்கியது. விமர்சனம் செய்பவர்களால் நல்ல படம் எடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள். எல்லா நல்ல விமர்சகர்களுக்குள்ளும் நல்ல ரசிகன் இருக்கிறான். நான் பல படங்களை விமர்சனம் செய்திருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நல்லதை விட்டுவிட்டு கெட்டதை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார்கள். நான் வெறும் விமர்சகன் மட்டுமல்ல.கடந்த 15 ஆண்டுகளாகத் திரைத் துறையில், திரைப்பட விநியோகம், திரையரங்க நிர்வாகம், தயாரிப்பு, விளம்பரம், திரைக்கதை, வசனம், நாவல், சிறுகதை எனத் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறேன். திரை இயக்கம் என்பது என் கனவு. என் படத்திற்கும் விமர்சனம் இருக்கும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் பல விஷயங்களை விமர்சிக்க முடியாதபடி என் படம் தரமும் நேர்த்தியும் நிறைந்ததாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அப்புறமென்ன... அவர் படம் மளமளன்னு வளர்ந்து இப்ப இந்த மாசக் கடைசிலயோ, அடுத்த மாசத்துலயோ ரிலீசுக்குத் தயாரா இருக்குது. அதுக்கான ஒரு பாட்டு டீஸரா போன வாரம் வெளியாகி யூ ட்யூப்ல நிறைய ஹிட்ஸ்களை குவிச்சுட்டிருக்கு. ஒருமுறை கேட்டுப் பாப்போம்னு பாத்த என்னை பலமுறை கேக்க வெச்சிருச்சு. சாக்ஸபோன்ல ஆரம்பிக்கற அந்த இசையே முதல்ல உள்ள இழுத்திருது. உள்ள இழுத்த செவிகளை பாடல் முழுவதும் தொடர வெச்சு அசத்தியிருக்காரு இசையமைப்பாளர் பி.சி.சிவன். ரொம்பவே யதார்த்தமான அரசியல், சமூகப் பொறுப்புணர்வு, ஜாலி, கேலி கலந்த பாடல் வரிகளும் அருமை. (பாட்டை கேபிள்ஜியே எழுதினதாக் கேள்வி. நிஜமான்றதை அவர்தான் சொல்லணும்.) பாடினவர் பெயர் தெரில... (கேபிளாரே நல்லாப் பாடக்கூடியவர்தான், அவரே பாடியிருக்கலாமேன்னு தோணிச்சு) சின்னச் சின்ன கட் ஷாட்களை இணைச்சு, பிரபலங்கள்ட்ட கருத்து கேக்க வெச்சு அதையும் சேர்த்து, ஸ்க்ரீன் ப்ரஸன்ஸோட தானும் தன் டீமோட தோன்றி பாடலை சுவாரஸ்யமா காட்சிப்படுத்திருக்காரு கேபிள்ஜி. இந்தப் பாட்டை இதுவரை நீங்க பாக்கலைன்னா கீழ நான் தந்திருக்கற லிங்க்ல போய் உடனே பாத்திருங்க.
https://www.youtube.com/watch?v=RNHks79qB58
இதனால என்ன ஆபத்துன்னா... அவரோட படத்துக்கு இப்ப எதிர்பார்ப்பு எகிறிடுச்சு. அதை முழுமையா படம் நிறைவேத்தும்ங்கறதுல எனக்கு முழு நம்பிக்கை உண்டு. ஒரு படத்தை இயக்கறதுன்றது சாதாரண வேலையில்ல. ப்ரொட்யூஸரை சாடிஸ்பை பண்ணி, காமிரா, இசைன்னு அந்தந்தத் துறையில ஜாம்பவான்களை வேலை வாங்கி... அங்குசத்தை வெச்சு யானையை அடக்கற மாதிரி ரொம்பவே டென்ஷனான காரியம் அது. நம்ம ஜாதியில ஒருத்தர் (நோ...நோ... பதிவர் ஜாதிங்கறத சொல்றேன்) இயக்குனராகியிருக்கார் என்பது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்.
என்னைப் பொறுத்தவரைக்கும் பு.க.ல நான் முதல்முறை பார்த்த கேபிள் சங்கருக்கும். இப்ப இயக்குனராகிட்ட பிறகு பார்க்கற கேபிள் சங்கருக்கும் பழகும் முறையில துளியும் வித்தியாசமில்ல... இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடையணும், அடுத்தடுத்த வெற்றிகளைச் சந்திச்சு இன்னும் பல உயரங்களை அவர் எட்டணும்னு மனப்பூர்வமான மகிழ்ச்சியோட அவரை வாழ்த்தற அதே சமயத்துல எவ்வளவு உயரம் தொட்டாலும் பழகும் விதத்துல அவர் இப்ப மாதிரியே எப்பவும் இருக்கணும்னு ஒரு வேண்டுகோளையும் முன்வெக்கறேன். ஆல் த பெஸ்ட் ஃபார் த சக்ஸஸ் கேபிள்ஜி!
|
|
Tweet | ||
தொட்டால் தொடரும் மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நம்மில் ஒருவர் (பதிவர்) டைரக்டர் ஆவது நமக்கெல்லாம் பெருமை தானே!! வாழ்த்துகள் கேபிள் அண்ணே!
ReplyDeleteதொட்டால் தொடரும் ஸ்டில்ஸ் ஒவ்வொண்ணும் அருமை. பாட்டு ரிலீஸ் ஆனா முதல் நாளே கேட்டேன்.. ஒரு பாடல் டீசர் எப்படி இருக்கணுமோ அந்த இலக்கணத்தோடு ஜாலியா பாடல் பதிவான விதத்தை எடுத்திருந்தது பிடிச்சிருந்தது..
ReplyDeleteதமன் இந்த படத்திற்கு பிறகு பல உயரங்கள் செல்வார்..! ஆல் தி பெஸ்ட் Dude!!
டீஸரை ரசிச்சு, கேபிளாரை வாழ்த்தி தமனுக்கும் வாழ்த்துச் சொன்ன ஆவிக்கு மகிழ்வான நன்றி.
Deleteசந்திக்கறகிட்டே இருந்து முடிஞ்சவரை திருடிக்கற பழக்கம் - நீங்கள் சொன்னவை இருக்க வேண்டும்...!
ReplyDelete// பழகும் முறையில துளியும் வித்தியாசமில்ல... // சிறப்பு... கேபிள்ஜி அவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஆனாலும் ரொம்பத்தான் புகழுறீங்க.. வெட்க வெட்கமா வருது.. அந்தப் பாடலை எழுதியது நம்ம ஜாதிக்காரப் பய கார்க்கிபவாவும் நானும் தான்.:)
ReplyDeleteநம்ம ஜாதிக்காரங்கள்ல நிறைய திறமைசாலிகள் இருக்காங்கன்றத நினைக்கையில பெருமையா இருக்கு. கொஞ்சமா நான் புகழ்ந்ததுக்கே வெக்கப் படறீங்களே... அதுக்கு முழுத்தகுதி உள்ளவர் நீங்க கேபிள்ஜி. மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கு மனம் நிறைய நன்றி.
Deleteகேபிளார் வெற்றியின் உயரம் தொட மனமார வாழ்த்துகின்றேன்.
ReplyDeleteஅருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.
நண்பர் கேபிளை வாழ்த்தியதுடன் என் எழுத்தையும் பாராட்டின துளசி டீச்சருக்கு மகிழ்வான என் நன்றி.
Delete#முதல் அறிமுகம்ங்கற தயக்கம் எதுவுமில்லாம சகஜமாப் பேச முடிஞ்சது கேபிளாரின் பலம்!#
ReplyDeleteஇது உண்மைதான் ,சென்ற பதிவர் சந்திப்பின் போது நான் அவரை சந்தித்த போது நீண்ட நாள் பழகியவரைப் பேசினார் !
சினிமாவை அவர் தொட்டுவிட்டார் ,சிகரத்தை தொடவும் வாழ்த்துக்கள் !
த ம 3
வாழ்த்திய உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteபால கணேஷர்,
ReplyDeleteநல்ல விவரணை!
//உலகையே மறந்து அவங்களோட பேசிட்டிருந்தார். சரி... அப்பத்தானே அவர் பிரபலம்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு கிட்டப் போய் வலிஞ்சு என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். //
இந்த பிராபல்யங்கள் தொல்லை தாங்கலைடா சாமினு , மைண்ட் வாய்ஸ் கேட்டிருக்குமே அவ்வ்!
# வீரசேகரன் படம் போல் அருமையாக??!! இருக்கும் என நினைக்கிறேன் , வெற்றிப்பெற வாழ்த்துக்கள்!!!
டிவிடி கிடைக்குமானு தெரியலை அவ்வ்!
படம் உண்மையிலேயே அருமையாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. டிவிடி கேட்டது கேபிள் கண்ல படறதுக்குள்ள எஸ்கேப் ஆயிடுங்க, ஹி... ஹி.... ஹி.... மிக்க நன்றி.
Deleteகேபிள் அண்ணா சிகரம் தொட வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையா எழுதியிருக்கிறீர்கள் அண்ணா.
கேபிளை வாழ்த்தியதுடன் என் எழுத்தையும் ரசித்த குமாருக்கு மனம் நிறைய நன்றி.
Deleteசிறந்த நட்புப் பாலப் பகிர்வு
ReplyDeleteரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteஓ இவ்ளோ பெரிய ப்ளேஸ்பேக் இருக்குதா.. பலே பலே.. படத்தை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்...
ReplyDeleteகிட்டத்தட்ட முதல் சந்திபிற்குப் பின் என்னையும் மறந்துட்டார். இரண்டாம் முறை வலிந்து சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்... அடுத்த தடவ போது எப்படியோ :-)
தொட்டால் தொடரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் கேபிள் ஜீ :-)
இப்போ பிரபலமாயிட்டேல்ல நீயும். மறக்கவே மாட்டார் கேபிள், ஹாஹாஹா... வாழ்த்திய உனக்கு மகிழ்வான என் நன்றி.
Deleteபகிர்வுக்கு நன்றி,பாலகணேஷ் சார்!கேபிளார் மென்மேலும் வளர படைத்தவர்(ன்) துணையிருக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteஐயய்யோ... இப்பவே செமத்தியா வளர்ந்திருக்கார். இன்னும் வளர்ந்தா என்னாகறது...? ஓ... நீங்க பேர், புகழைச் சொல்றீங்களோ...? ஹி... ஹி.... நிறைய நிறைய வளரட்டும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteகேபிள் சங்கர் அவர்களுடனான தங்களின் அனுபவங்கள் ரசிக்கும் படி இருந்தது. பாலகணேஷ் சார். தெரிந்தவர் தெரியாதவர் எல்லோருடனும் சகஜமாக பழகுபவர். அவர். அவரது தொட்டால் தொடரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு என் மகிழ்வான நன்றி குடந்தையூராரே...
Deleteகேபிள் சங்கரின் ஓரிரு பதிவுக்குப் பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். அவர் ஒரு முறை காரில் தஞ்சை கும்பகோணம் வந்தது பற்றி எழுதி இருந்ததாக நினைவு. நல்ல முயற்சிகள் வெற்றி பெற்றே ஆகவேண்டும் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்திய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஅத்தனை அழகாக அக்கு வேறு ஆணி வேறாக விமர்சனம் செய்பவரின் படத்துக்கு இயல்பாகவே எதிர்பார்ப்பு எகிறத்தான் செய்யும் அண்ணா... அவருக்கும் அவருடைய முதல் படத்திற்க்கும் என் சார்பாகவும் வாழ்த்துக்கள்... இந்த பயணம் இனிமையானதாய் தொடரட்டும்
ReplyDeleteவாழ்த்திய தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.
DeleteCongratulations Cableji. I wish you all the best.
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஇந்த வருட பதிவர் சந்திப்பில் அருகில் பார்த்தும் கூச்சத்தால் பேசாமல் இருந்துவிட்டேன்! பாடலை நானும் ரசித்தேன்! படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteபேசினால் பேசியிருப்பார் நிறைய... வாழ்த்திய சுரேஷுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteபடம் வெளியாகும் சமயத்தில் ப்ரமோஷன் உத்திகளில் இது டாப்! (கேபிளார் சொல்லாமல் தான் நீங்கள் பதிவு போட்டிருப்பீர்கள் தான், ஆனாலும் இது படத்திற்கு உதவும்!) பதிவில் நீங்கள் இசை அமைப்பாளர் 'சிவன்' என்று எழுதி இருக்கிறீர்கள், பின்னூட்டத்தில் 'தமன்' என்று இருக்கிறது. எது சரி?
ReplyDeleteநானும் என் மனைவியும் 2 வருஷங்கள் முன் கேபிள் சங்கரை புத்தக சந்தையில் தான் பார்த்து பேசினோம், அவரும் அடுத்த பதிவில் என் பெயருடன் அதை எழுதி இருந்தார்! ஆனால் உங்களைப் போல் அந்த நட்பை தொடரும் வாய்ப்பும், சமமான திறமையும் இல்லை! படம் வெற்றி பெற நானும் வாழ்த்துகிறேன். - ஜெ.
நீங்கள் என்னை மிகச்சரியாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். நண்பனுக்கான மரியாதை + வாழ்த்தாகத்தான் இதை நான் எழுதினேன். இது வெளியாகும் வரை கேபிளுக்கே தெரியாது. அதுசரி... கேபிளைப் பார்த்து பேசினேன் என்கிறீர்கள். எனக்கந்த பாக்யம் இல்லையா... அவ்வ்வ்வ்வ்! படத்தின் கதாநாயகன் தமன். இசையமைப்பாளர் சிவன். ஆவி வாழ்த்தியிருப்பது கதாநாயகனை. மிக்க நன்றி.
Deleteசந்திக்கும் வாய்ப்புக்கும் பாக்யத்திற்கும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்!
Deleteகேபிள் சங்கரின் படம் வெற்றியடைய எனது வாழ்த்துகளும் கணேஷ்.
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteகேபிள் சங்கர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteநான் பதிவர் (!) ஆகிறதுக்கு முன்னாடியே கேபிளாரை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். என் பெயரைக் கேட்ட அவர் நீங்க எழுத்தாளர் தானே (!) என்று கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.
ReplyDeleteநீ ஒரு பிரபலம்ங்கறத அப்பவே அவர் ஸ்மெல் பண்ணிட்டாரு போல... ஹா... ஹா... ஹா... மிக்க நன்றி.
Deleteவாழ்த்துகள் கேபிள் சங்கர் .
ReplyDeleteகேபிள் சங்கர் அவர்களது படம் வெற்றியடைய எங்கள் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் கேபிள் சங்கர்!
ReplyDelete