பத்துப் பதினஞ்சு நாளா என்னோட நெட் கனெக்ஷன் புட்டுக்கிட்டதால இணைய உலகத்துல
என்ன நடக்குதுன்னு பாக்க முடியாமப் போச்சு. (எல்லாரும் நிம்மதியா இருந்திருப்பீங்கன்றது
வேற விஷயம்.) நண்பர் மதுரைத்தமிழன் ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு வெச்சு அது ஓடிக்கிட்டிருக்கறதையும், அவர் என்னைத்
தொடர அழைச்சிருக்கறதையும், அவரைத் தொடர்ந்து என் அன்புத் தங்கை
ராஜி மற்றும் இனிய தோழி கீதமஞ்சரி ஆகியோர் என்னையும் இந்தப் பத்துக் கேள்விகளுக்கு
பதில் சொல்லி சங்கிலியைத் தொடர அழைச்சிருக்கறதையும் கவனிச்சேன். உங்களின் விருப்பப்படி
பத்துக் கேள்விகளுக்கான பித்து... ச்சே... முத்து பதில்கள் இங்கே....
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட
விரும்புகிறீர்கள்?
‘சிரியஸ்’ பதில் : சந்திர மண்டலத்துல ஒரு காலனியை ரிசர்வ் செஞ்சு என்னோட பிரம்மாண்டமான லைவ் வினைல்
போர்டுகளை அங்கங்க வெச்சு பயமுறுத்தி, பதிவர் நண்பர்கள் எல்லாரையும்
ஒரு ஏர்க்ராப்ட்ல வெச்சுக் கூட்டிட்டு(கடத்திட்டு?)ப் போயி மிகப் பிரம்மாண்டமான
அரங்கத்துல ராட்சஸ சைஸ் கேக்கை வெட்டி, எல்லாருக்கும் ஒரு ரிச்சான
பார்ட்டி தந்து கூடவே என்னோட ஸ்டேஜ் டான்ஸ் ப்ரொக்ராமையும் அரங்கேற்றம் பண்ணுவேன்.
(சந்திர மண்டலத்துக்கு ஏன் கூட்டிட்டுப் போறேன்னு இப்பப் புரிஞ்சுதா... ஒரு பயபுள்ள
தப்பிச்சிர முடியாதுல்ல... ஹி.... ஹி... ஹி....)
‘சீரியஸ்’ பதில் : நான் 100 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை... விருப்பமும்
இல்லை. தவிர என் பிறந்த தினத்தை நான் கொண்டாடுவதுமில்லை. உங்கள் விருப்பப்படி நான்
100 ஆண்டுகள் வாழ்ந்து பிறந்தநாளையும் கொண்டாடுவது என்றால் 100வது பிறந்ததினத்தை குறைந்தபட்சம்
100 பேருக்காவது உணவிட்டு, 100 ஆதரவற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்து, என்மேல் அக்கறை கொண்ட நல்லவர்கள் (என்று நான் நம்பும்) நூறு பேருடன் கலந்துரையாடி
என் பிறந்த தினத்தைக் கொண்டாடுவேன்.
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
‘சிரியஸ்‘ : மனைவி வீசும் பூரிக்கட்டை மற்றும் இன்னபிற ஆயுதங்களிலிருந்து தப்புவது எப்படி
என்கிற வித்தையை. (நான் சொல்லிட்டேன். நெம்பப் பேரு சொல்லாமயே ஒரு ‘கெத்’தை மெயின்டைன் பண்ணுவாய்ங்க. ஹா... ஹா... ஹா...) அப்பறம்... பொய் சொல்ல...
(ஐ மீன் மாட்டிக்காம திறமையா... ஹி... ஹி....)
‘சீரியஸ்’ : ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்குதுங்க...
நீச்சல், தமிழ் தவிர்த்த இந்திய மொழிகள்,
கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சமைக்கும் கலை,
கார் டிரைவிங், இன்னும் நிறைய.. நிறைய... முடிந்தவரை
ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு லிஸ்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என்பது பெருவிருப்பம்.
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
‘சிரியஸ்‘ : கடைசியாச் சிரிச்சதுன்னா... அப்ப இனி என் வாழ்நாள்ல சிரிக்கவே மாட்டேன்னா சொல்றீங்க...
அவ்வ்வ்வ்வ்! நீங்க கேக்கற அர்த்தத்துல யோசிச்சா.... அது மாப்பிள்ளை அழைப்பு அன்னிக்குச்
சிரிச்சதாத் தேங் இருக்கும்.
‘சீரியஸ்’ : என் மாதிரி ஆசாமியைப் பொறுத்தவரை தப்பான கேள்வி இது. எப்பவும் எதுக்காவது சிரிச்சுக்கிட்டே
இருக்கற ஆசாமிகிட்ட கடைசியான்னு கேட்டா என்னான்னு சொல்றது யுவர் ஆனர்... கொஸ்டியன்
ஓவர்ரூல்ட்.
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது
என்ன?
‘சிரியஸ்‘ : டான்ஸ் ஆடுவேன், (வாய்விட்டு) சத்தமில்லாமல் சிரிப்பேன்,
இன்னும் வெளிச்சத்துல மத்தவங்க பாத்தா லூசுன்னு நினைக்கிற எல்லாச் செயல்களையும்
தயங்காம செஞ்சு பார்த்துருவேன். (இதெல்லாம் செய்யாமலேயே கொள்ளப் பேரு என்னை அப்படித்தான்
நெனக்கிறாங்கன்றது வேற விஷயம். ஹி... ஹி....)
‘சீரியஸ்’ : மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கொண்டு நான் படிக்க விரும்பி நேரம் இல்லாமல்
பெண்டிங்கில் வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றிரண்டையாவது படித்து முடித்து விடுவேன்.
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது
என்ன?
‘சிரியஸ்‘ : “எலேய்... கல்யாணத்துல மாட்டிக்காதீங்கன்னு நான் படிச்சுப் படிச்சு சொன்னேனே...
கேட்டியாலே... இபப பேய்முழி முழிச்சுட்டு வந்து ஆசி கேட்டா என்னத்தச் சொல்ல.... உன்
புள்ளைங்களுக்காவது கல்யாணம் பண்ணி வெக்காம அவங்களைக் காப்பாத்து லேய்...”
‘சீரியஸ்’ : விட்டுக் கொடுத்து வாழுங்கள். எந்த விஷயமானாலும் அவள் அவனுக்காகவும், அவன் அவளுக்காகவும் ஈகோவை உதறிவிட்டு விட்டுக் கொடுத்தால் இனியது
இனியது வாழ்க்கை.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
‘சிரியஸ்‘ : அட போங்கப்பு... என் தலை(வலி)வியால வீட்ல ஏற்படற பிரச்னைகளையே தீர்க்க முடியாம
முழி பிதுங்கிட்டு இருக்கேன். உலகத்துப் பிரச்னைய நான் தீக்கறதாவது...? நல்ல டமாஸ்!
‘சீரியஸ்’ : உலகெங்கும் பெருகிவரும் மக்கள்தொகையைத்தான் நான் மிகப்பெரும் பிரச்னையாக உணர்கிறேன்.
அதனைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் முதலில் முயல்வேன்.
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
‘சிரியஸ்‘ : எந்தப் பிரச்னையா இருந்தாலும் முதல்ல என் மனைவிகிட்ட அட்வைஸ் கேப்பேன்... அப்புறம்
என் அம்மாகிட்ட அட்வைஸ் கேப்பேன்...! (ரெண்டையும் கண்டுக்காம
நானா முடிவெடுப்பேன்ங்கற ரகசியத்த யார்ட்டயும் சொல்லிடாதீங்க. ஹி... ஹி... ஹி...)
‘சீரியஸ்’ : பல சிக்கலான சூழ்நிலைகள் எனக்கு ஏற்பட்ட போதெல்லாம் உறவினர்களை விட அன்பும்
அக்கறையும் கொண்ட நட்புகள்தான் என்னை வழிநடத்தி காப்பாற்றி இருக்கிறது. எனவே... நான்
அறிவுரை கேட்பது நான் விரும்பும் நல்ல நட்புகளிடம் தான்.
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
‘சிரியஸ்‘ : அட... இப்புடிக்கூட என்னை பாப்புலராக்க முடியும்னு இத்தனை நாள் தெரியாமப் போச்சேப்பு...
ரொம்ப டாங்ஸுன்னு சொல்லி கை குலுக்குவேன்.
‘சீரியஸ்’ : என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் அந்தத் தவறான செய்தியை நிச்சயம் நம்ப மாட்டார்கள்.
என்னைப் பற்றித் தெரியாதவர்களுக்கு அது தவறான செய்தி என்று புரிய வைக்க வேண்டிய அவசியம்
என்ன...? ஆகவே, நான் முற்றிலும்
உதாசீனம் செய்வேன்.
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன
சொல்வீர்கள்?
‘சிரியஸ்‘ : “இனிமேலயாவது புத்திசாலியாப் பொழச்சுக்கடா... டோன்ட் ட்ரை யுவர் லக் அனதர் டைம்” என்று சொல்வேன். ஹா... ஹா... ஹா...
‘சீரியஸ்’ : சொல்வதற்கு வார்த்தைகள் ஏதய்யா... அன்பான தொடுகை, ஆறுதலான அரவணைப்பு இவற்றின் மூலம் என் உணர்வுகளைப் புரிய வைப்பேன்.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
‘சிரியஸ்‘ : எதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு என் மனைவி ‘தடா’ போட்டிருக்காளோ... அதையெல்லாம் கண்டிப்பாச் செஞ்சு பாத்துருவேன்ல....
‘சீரியஸ்’ : சில நல்ல ஈரானிய/கொரிய/உலகத் திரைப்படங்கள் அவற்றில் வரும் சில காட்சிகளின்
காரணமாக மனைவி மற்றும் அம்மாவால் கண்டிக்கப்படும் என்பதால் பார்க்க முடியாமல் மறைத்து
வைக்கப்பட்டிருக்கும். அப்படியான படங்களைப் பார்த்து ரசிப்பேன். நம்முடைய அருமையான
மின்சாரத்துறை அப்படிப் பார்க்க விடாமல் சதி செய்தால் ஏதாவது புத்தகம் படிப்பேன்.
ரைட்டு... நான் சொன்ன பதில்கள் உங்களுக்குப் புடிச்சிருக்கும்னு
நம்பறேன். இதைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல 1.சீனு, 2. கோவை ஆவி, 3. அரசன். 4.ரூபக்ராம் ஆகிய அம்ம பயலுவளக் கேட்டுக்கறேன்.
|
|
Tweet | ||
ஸ்கூல் பையன் பதிவில் சினுவிற்கு இப்படி பதில் அனுப்பி விட்டு பார்த்தால் உங்கள் பதிவு வந்து இருக்கிறது
ReplyDeleteஆரம்பிச்சு வச்சது நான் அதில் உங்க வாத்தியாரை பதிவு எழுத அழைப்பு விடுவித்தேன் அவரை பதிவிட்டால் உங்களை எல்லாம் கூப்பிடுவார் என நினைத்தேன். ஆனால் வாத்தியார்கிட்டேயே கேள்வியா கேட்கிற மதுரைத்தமிழா என்று கோச்சுகிட்டு வரவில்லை...
இந்த தொடர் வைரஸ் போல மிக வேகமாக பரவி விட்டது
பரவினதுல மகிழ்ச்சி மதுரைத் தமிழா. பதிவுலகத்துக்கு உங்களால ஒரு விறுவிறுப்பு கிடைச்சதுலயும் சந்தோஷம்தான். ஆனா... என் பதில்கள் எப்படின்னு ஒண்ணும் சொல்லலயே... (ஏம்பா... நான் சரியாத்தான் பேசிட்டிருக்கேனா...?)
Deleteவாத்தியாரன்னா வாத்தியார்தான் என்று தனித்திறமையால் பதிலை மிக அருமையாக கொடுத்தீட்டீங்க. பாராட்டுக்கள்
ReplyDeleteரைட்டு... இப்ப குஷியாய்டுச்சு. மிக்க நன்றிப்பா....
Deleteடான்ஸ் (ஆசை) விரைவில் அரங்கேற்றி விடுவோம்... ஹிஹி...
ReplyDeleteஅப்படின்னா... யாரும் தப்பிச்சு வெளில ஓடிர முடியாத ஆடிட்டோரியமா இருக்கணும் பிரதர். மிக்க நன்றி.
Deleteஅத்தனை பதில்களும் அருமை அண்ணா... இதில் எனக்கானதுமாய் நீங்கள் சொன்னதை நிச்சயம் மனதில் வைக்கிறேன் எப்பொழுதுக்குமாய்....
ReplyDeleteநிச்சயம் அது உனக்குப் பயன்தரும் தங்கையே... ஏன்னா நான் அனுபவத்துல உணர்ந்தது. எல்லா பதில்களையும் ரசித்த உனக்கு மனம் நிறைய நன்றி.
Deleteஹஹஹா உங்க முதல் பாதி பதில்கள் தான் எனக்கு பிடிச்சிருந்தது.. இரண்டாம் பாதி சீரியஸான மற்றவர்களுக்கு..
ReplyDeleteநான் ரெண்டாவது டைப் பதில்களைத்தான் ரசிக்கறேன் ஆவி. முதல் டைப் என்கிட்ட அந்த மாதிரியும் எதிர்பார்க்கறவங்களுக்காக... சரி.. நல்லபிள்யையா என் பேச்சைக் கேட்டு நீயும் எழுதிரு பதில்களை. ரைட்டா...?
Deleteசிரியஸ் + சீரியஸ் ஆ சூப்பர்..
ReplyDeleteஅட நானுமா... என்ன கொல்றதுக்கு ஒரு ஆவி இங்கிட்டு தான் சுத்திட்டு திரியுது.. அது கேட்ட ரெண்டு அசைன்மெண்ட் முடிச்சா தான் அடுத்த பதிவு :-)
அந்த ரெண்டு அசைன்மென்ட்டையும் இடதுகையால அடிச்சுத் தள்ளிட்டு என் விருப்பப்படி வலது கையால இதைத் தொடர்ந்திரு. ஹா... ஹா... ஹா...
Deleteவாத்தியார் ஸ்டைல்ல எல்லா சிரிய்ஸ் மற்றும் சீரியஸ் பதில்களுமே சூப்பருங்கோவ்...
ReplyDeleteஎல்லாத்தையும் ரசித்த ஸ்.பை.க்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteஹாஹாஹஹ்! சிரியஸ் பதில்கள் அனைத்தும்.....வாத்தியாரின் ட்ரேட் மார்க் பதில்கள்!!!! சீரியஸ் பதில்களும் அட்டாகாசம்! மொத்தத்தில் அட்டகாசமான அனாயாசமான அருமையான....பதில்கள்! அள்ளிட்டீங்க போங்க.....எங்க எல்லார் இதயத்தையும்!!!!!!! மிக மிக மிக மிக மிக............ரசித்தோம்! குடோஸ் சார்!
ReplyDeleteஇதயங்களை அள்ளினேன் என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.
Deleteஎன் அழைப்பை ஏற்றுத் தொடர்ந்தமைக்கு நன்றி கணேஷ். சீரியஸ், சிரியஸ் இரண்டு வகையான பதில்களால் மனம் தொட்டுவிட்டீர்கள். இரண்டையுமே நேர்மையாக மனந்திறந்து பதிவிட்டிருப்பதுதான் சிறப்பு. பாராட்டுகள் கணேஷ்.
ReplyDeleteபதில்களை ரசித்துப் பாராட்டி மகிழ்வு தந்த உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteபத்து கேள்விகளுக்கு நீங்கள் அளித்த இருபது பதில்களும் அருமை. உலகில், குறிப்பாக பதிவு உலகில் இரண்டு விதமானவர்கள் (சிரியஸ் மற்றும் சீரியஸ்) மட்டுமே உள்ளனர் என்பதால் படிக்கும் அனைவருக்கும் பிடித்த பதில்கள்
ReplyDeleteபதில்களை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteபதில்களை ரகம் வாரியா பிரிச்சுட்டீங்களா!? எல்லாம் சரி, அன்புத் தங்கையான எனக்கும் சந்திர மண்டலத்து ட்ரிப் எனக்கும் சேர்த்துதானா!?
ReplyDeleteமத்தவங்க மாட்டிக்கிட்டு முழிக்கறத ரசிச்சு, அவங்க ஓடிராம தடுக்கறதுக்கு உன்னை விட்டா யாரும்மா இருக்கா...? ஹா... ஹா... ஹா...
Deleteசந்திர மண்டலத்துக்கா !! ஜாலி ஜாலி என்னையும் சேர்த்துத் தானே உள்ளீர்கள் ?...
ReplyDelete(நானு முதல்ல டான்ஸ் கத்துக்கணும் ) :)).இரு வேறு ரகங்களாகப் பிரித்து மிகவும்
அசத்தலான பத்திகளைத் தந்த அன்புச் சகோதரனுக்கு இந்த அம்பாளடியாளின்
மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .இன்று போல் என்றென்றும் மகிழ்வோடு இருக்க வேண்டும் தங்கள் மனமும் அதன் நினைவுகளும் .வாழ்த்துக்கள் சகோதரா .
வாங்க சிஸ்... நீங்களும் டான்ஸ் கத்துக்கிட்டீங்கன்ன... உங்களுக்கும் அதே மேடையில நிச்சயம் இடம் உண்டு. பதில்களை ரசிச்சு எனக்கு வாழ்த்தும் சொன்ன உங்களின் அன்புக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
DeleteSerious answers are really superb. Well done (said) Mr.Balaganesh!
ReplyDeleteபதில்களை ரசித்துப் பாராட்டியமைக்கு என் மனம் நிறைய் நன்றி.
Deleteசிரியஸ் பதில்கள் சீரியஸ்(ல்?!) பதில்களை அடித்துப் போட்டு விட்டது,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஇரண்டு முறை புத்தகம் படிப்பேன்னு பதிவு செய்திருக்கீங்க கணேஷ். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
ReplyDeleteஒரு வழியா என்னோட கவிதைத் தொகுப்பையும் படிச்சுருங்க.. ( திட்டுறதுன்னா தனியா மெயில்ல திட்டுங்க.. ஹாஹா :)
பெண்டிங்ல இருக்கற புத்தகங்கள்ல அன்னப்பட்சியும் இருக்குது. அதிசீக்கிரத்துல அதுக்கு விடுதலை குடுத்துட்டு பகிர்ந்துக்கறேன் அக்கா... மிக்க நன்றி.
Deleteசுவாரஸ்யமான பதில்கள்.
ReplyDelete@ தேனம்மை, நானும் கவனித்தேன். அதற்கு மின்சாரம் தடைப்படணும் என வேண்டிக் கொள்ளுங்கள்:)!
ஹச்சச்சோ.... அப்டில்லாம் வேண்டிக்காதீங்க மேம்... சீக்கிரத்துலயே உங்கள் இருவரின் புத்தகத்தையும் படிச்சுட்டு ரெடியா வந்துடுவேன் நான். பதில்களை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteஅண்ணே இந்த உள்ளே வெளியே விளையாட்டு ரொம்ப நல்லா
ReplyDeleteவிளையாட்டை ரசிச்ச இலியாஸ்க்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteமிக சுவாரஸ்யமான பதில்கள். சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள் கணேஷ்.வாழ்த்துகள்.
ReplyDeleteபதில்களை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி வல்லிம்மா...
Deleteஆஹா! முதல் சிரியஸ் பதிலில் 100வயது என்பதை 50வயது என திருத்தி வாசிக்குமாறு தமிழன் சொல்லுறார்! space பார்ட்டி எப்போ அண்ணா:)))
ReplyDeleteசூப்பர் அண்ணா!
ஆஹா... என்னா சாமர்த்தியமா அடுத்த வருஷத்துலயே ஸ்பேஸ் போக ப்ளான் பண்ணுற தங்கையே... டீச்சர்னா சும்மாவா..? மிக்க நன்றிம்மா...
Deleteவெளில சொல்லாதீங்க :) கண்ணு பட்டும்.
Deleteஅவ்ளோ இளமையா இருக்கு உங்க எழுத்துக்கள்!!!!
சிரியஸும் சீரியஸும் சரியாகவே வந்திருக்கின்றன! உங்கள் சீரியஸ் பதில்கள் சிலவற்றிற்கு சில கேள்விகள்:
ReplyDeleteசீ1: 100 ஆண்டு வாழ்ந்தால் தான் அதை செய்ய வேண்டுமா? இப்போதே அந்தந்த வயதுக்குத் தக்க வேண்டிய நபர்களுக்கு உணவிட்டு உதவி செய்யலாமே!
சீ3: Question cannot be over-ruled; can be 'passed' if you don't want to nswer. (Objection is over ruled!)
சீ4: 24 மணி நேர பவர் கட்டின் போது பகல் பொழுதும் இருக்குமே, பின் மெழுகு வர்த்தி ஏன்! (ஐயா, அம்மா ஆட்சியில் ம்இன் தடை ச்ய்து உங்களை நிறைய படிக்க வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!)
நிற்க, ஒரு சந்தேகம். உங்கள் பதிவு எனக்கு மெயிலில் வருகிறது, ஆனால் நான் ஓபன் செய்யும்போதே 30, 40 பின்னூட்டங்களும், உங்கள் பதில்களும் இருக்கின்றன, எனக்கு மட்டும் ஏன் லேட்டாக மெயில் வருகிறது?!
-ஜெ.
1. நல்ல விஷயம்தான் சொல்லிருக்கீங்க. இனிவரும் பிறந்த நாள்லருந்து நிறைவேற்ற ட்ரை பண்றேன். 3, இவ்வளவு டீப்பா கவனிப்பீங்கன்னு தெரியாம விட்ட தப்பு. ஹி... ஹி... திருத்தினதுக்கு நன்றி. 4, நான் குறிப்பிட்டது மாலை நேரத்து பவர்கட்டை மட்டும்தான். நம்ம வாசகர்கள் நம்னைவிட புத்திசாலிகளாச்சே, புரிஞ்சுப்பாங்கனு தான் அழுத்தமா சொல்லலை...(ஐஸ்... ஐஸ்...!) கடைசியா உங்க சந்தேகத்துக்கு மட்டும் எனக்கு விடை சொல்லத் தெரியல... டெக்னிகல் புலிகள் யார்ட்டயாவது கேட்டுச் சொல்றேன் ஐயா... பதில்களை ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteபின்னூட்ட பதில்களுக்கு நன்றி!
Deleteஜெகநாதன் சார், நீங்கள் email subscription செய்திருப்பீர்கள். பதிவு எழுதிய எட்டு மணி நேரத்துக்குள் மெயில் போய்விட வேண்டும் என்பது கூகிளின் கணக்கு. ஆனால் பதிவு எழுதிய பத்து நிமிடத்துக்குள் வாத்தியாருக்கு பின்னூட்டங்கள் பலவும் வந்துவிடும். எம் போன்ற வாசகர்களுக்கு வாத்தியாரின் பதிவு வெளியானதும் ஓடிப்போய்ப் படித்து முதல் ஆளாக பின்னூட்டமிடுவதில் அலாதி ஆனந்தம்...
Deleteமகிழ்வான நன்றி மைடியர் ஸ்.பை.
Deleteஎன்னாலே சிரியஸா மட்டும்தான் பதில் சொல்ல முடிந்தது ,உங்களால் சீரியஸாவும்பதில் சொல்ல முடியுது எப்படி பாஸ் ?
ReplyDeleteத ம 8
அம்பிக்குள்ள ஒரு ரெமொ இருக்கற மாதிரி ஹ்யூமர் பண்ற எனக்குள்ளயும் ஒரு சீரியஸ் மேன் இருக்காரு பிரதர். அதேங்.... டாங்ஸ்.
Delete//உலகெங்கும் பெருகிவரும் மக்கள்தொகையைத்தான் நான் மிகப்பெரும் பிரச்னையாக உணர்கிறேன். அதனைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் முதலில் முயல்வேன்.
ReplyDelete////
இதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்கனும் சொல்லுங்க சார்!
அப்புறம் ஏழாவது கேள்விக்கு ரெண்டு பதிலுமே சீரியஸ் தான்!
Deleteஅதுக்கான வழிமுறைகளை இங்க நான் சொன்னா... இம்புட்டு கடுமையான்னும், இதயமில்லாத ராட்சசன்னும் திட்டு வாங்க வேண்டி வரும். ஸோ.... அதை விட்ரலாம்யா. ஏழாவது கௌவிக்கு... ஸாரி, கேள்விக்கு முதல் பதில் சிரியஸ்னு நினைச்சு பல்பு வாங்கிட்டனா... அவ்வ்வ்வ்... மிக்க நன்றி.
Deleteசிரியஸ் , சீரியஸ் என மற்றவர்க்காகவும் , உங்களுக்காகவும் நீங்கள் சொல்லியிருந்தது அருமை....
ReplyDeleteபதில்களை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி எழில்.
Delete24 மணி நேர பவர்கட்டில் மெழுகு வத்தி ஏற்றி வைத்துப் படிப்பேன் என்பது சீரியசான பதிலா.? அதில் 12 மணி நேரத்துக்கும் மேல் பகல் வெளிச்சம் இருக்குமே. பதிகள் ரசிக்க வைத்தன.
ReplyDeleteஐயா... வெளிச்சம் மங்கிடும் மாலை மற்றும் இரவு நேரத்துக்குத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். பதில்களை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteசிரியஸ் மற்றும் சீரியஸ் இரண்டும் கலக்கல் அண்ணா...
ReplyDeleteரெண்டு டைப்பையுமே ரசித்த குமாருக்கு மகிழ்வான என் நன்றி.
Deleteதலைவரே! சந்திர மண்டலத்துக்குபோறதுதான் போறீங்க.....மதுரைத்தமிழன் கோர்த்து விட்டமாதிரி..அந்த பத்து பதிவர்களை அறிவிச்சுட்டு போனா....எங்கள மாதிரி சிக்காதவங்களுக்கு பயன்படும்ல........இதிலுமா...சிக்கனம் தலைவா....
ReplyDeleteபத்து பத்து பதிவர்களா ஒவ்வொருத்தரும் கோர்த்துவிட்டா செயின் சீக்கிரம் முடிஞ்சுரும் பிரதர். அதனால தான் நாலு பேர். ஹா... ஹா... ஹா...
Deleteசிரியஸ்சும் சீரியசும் அருமை கணேஷ் ஐயா. அசத்திட்டீங்க.
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteசிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்
ReplyDeleteபதில்களை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteரெண்டு விதமான பதில்கள் அசத்தல் சிரிக்க ஒன்று சிந்திக்க ஒன்று. வாத்தியாரின் ரூட் தனி தான்
ReplyDeleteரசித்துப் படித்த நண்பனுக்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteகலந்து கட்டி அடிச்சிருக்கீங்க வாத்தியாரே ... சீரியஸ் செம , செம ... நான் தொடர்கிறேன் ...
ReplyDeleteஇரண்டு விதமான பதில்கள் - இரண்டு விதமும் அருமை....
ReplyDeleteஇதே கேள்வி-பதில் தொடர்பதிவில் என் பக்கத்தில் சொன்ன பின்னூட்டம் - பல பதில்களில் நமக்கு ஒத்த சிந்தனை!
நல்ல பதில்கள் வாழ்த்துக்கள்.
ReplyDelete