Sunday, December 2, 2012

நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள்

Posted by பால கணேஷ் Sunday, December 02, 2012

அன்பார்ந்த நண்பர்களே...

தீபஒளித் திருநாள் முடிந்ததும் 3 தினங்கள் கோவை சுற்றுப்பயணம் சென்று வந்தேன். வந்ததும் புதிய வேலை கிடைத்து அலுவலகம் மாறினேன். புதிய அலுகலகத்தில் இணைய பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி எனக்கு மிகமிகக் கடினமாக இருக்கிறது. இதுநாள் வரை அலுகலகத்திலிருந்து கொண்டுதான் இணையத்தில் உலாவி வந்ததால் கடந்த 15 தினங்களாக இணையத்திற்கு அன்னியன் ஆக்கப்பட்டேன். வீட்டில் இணைய இணைப்பு பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் அம்பியாகவோ ரெமோவாகவோ வந்து விடுவேன் என்ற (எனக்கு) மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவை வெளியிட்ட தங்கைக்கு என் நன்றி.

                                       
                                                           

தமிழ் சினிமா தோன்றிய நாளிலிருந்து எத்தனையோ காமெடியன்களைப் பார்த்திருப்பீர்கள். ரசித்துச் சிரித்திருப்பீர்கள். நானும் அப்படியே. ஆனால் காமெடியன்களை விட சில கதாநாயகர்கள் நடிக்கும் காட்சிகள் காமெடியன்களை மிஞ்சி விடுவதுண்டு. என்னை மிகவும் ரசித்துச் சிரிக்க வைத்ததுண்டு. அப்படி இரண்டு கதாநாயகர்கள் நடித்த காமெடிக் காட்சிகளைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.


செங்கோட்டை என்று ஒரு படம். ஆக்ஷன் கிங் அர்ஜுன்தான் கதாநாயகன். படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் குரூப் அடியாட்கள் அவர் மனைவி மீனாவையும் அப்பா விஜயகுமாரையும் தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு ஒரு அடியாளுடன் அவரை ப்ளைட்டில் போகச் சொல்வார்கள். விமானம் கிளம்பிய பின் அவர் அடியாளின் கழுத்தில் அடித்து மயக்கமடையச் செய்துவிட்டு விமானத்தின் டாய்லெட்டைத் தாண்டி பின்னால் வந்து டயர் வழியாக வங்கக் கடலில் குதிப்பார். பொதுவாக விமானம் ஆகாயத்தில் ஏறியதுமே மூடிக் கொள்ளும் டயர் அர்ஜுனுக்கு வசதியாக மீனம்பாக்கத்திலிருந்து வங்கக் கடலை அடையும் வரை அரை மணி நேரமாகியும் மேலே ஏறாமலேயே பறந்து கொண்டிருக்கும். ஹா... ஹா... சூப்பர் காமெடி என்கிறீர்களா... இல்லை, இனிதான் காமெடியே...


கடலில் குதித்த அவர் நீந்திக் கரையேறி, தன் வீட்டிற்கு வந்து வில்லன் அடியாட்களை வீழ்த்திவிட்டு பிரதமரைக் கொல்ல நடக்கும் சதியைத் தடுக்க செங்கோட்டைக்கு வருவார். சுதந்திர தின விழா நடந்து கொண்டிருக்க, பிரதமரைக் கொல்ல வரும் கொலையாளியை அவர் தேடுவார். கொலையாளி நாம் யாருமே எதிர்பாராத வண்ணம் மேலே பறந்து கொண்டிருக்கும் பெரிய ஹீலியம் பலூனுக்குள் இருப்பான். அவனுக்கு பலூனுக்குள் சுவாசிக்க ஏதய்யா ஆக்சிஜன், ஹீலியம் வாயுவை சுவாசிக்க முடியாதே என்று யாராவது கேட்டீங்களோ... கொன்டேபுட்டேன்!


அது மட்டுமா... பலூனுக்குள்ளிருந்து ஏதோ பால்கனிக் கதவைத் திறந்து நாம் வேடிக்கை பார்ப்பது மாதிரி ஒரு கதவைத் திறந்து பிரதமரைக் குறி பார்ப்பான். பலூனிலிருக்கும் காற்றெல்லாம் வெளியேறி விட்டால் அது எப்படிப் பறக்கும் என்று பகுத்தறிவுக் கேள்வி யாராவது கேட்டீங்களோ... சரி, அவன்தான் அப்படியென்றால் நம்ம ஆக்ஷன் கிங் சும்மா இருப்பாரா... நிழலில் இருந்தே கொலையாளி பலூனில் இருப்பதைக் கண்டுபிடித்து அப்படியே மல்லாக்கப் படுத்து சுடுவார். பலூன் வெடித்து கொலையாளியும் பரலோகத்துக்கு பார்சல்.


அவ்வளவுதான்... அங்கே இருக்கும், கொலையாளியை ஏவிய மெயின் வில்லன் பிரதமரைச் சுடுவார். துப்பாக்கிக் குண்டு ஸ்லோமோஷனில் வந்து கொண்டிருக்க, அதை குறுக்கிட்டு நம்ம ஆக்ஷன் கிங் தோளில் வாங்கிக் கொள்வார். வில்லனின் அடுத்த குண்டு தேசியக் கொடிக் கம்பத்தை சாய்க்க, அர்ஜுன் இன்னொரு குண்‌டை ஏற்றுக் கொண்டு கொடியைத் தாங்கிப் பிடிப்பார். (தேசபக்தி சார்!) பாதுகாப்புப் படை வீரர்கள் பிரதமரை பாதுகாப்பாக இதற்குள் கூட்டிப் போக மற்ற வீரர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் வில்லனை அழித்து விட்டால் ஆக்ஷன் கிங்குக்கு என்ன மதிப்பு? அத்தனைக்கும் பின்னால் அவரே வில்லனுடன் மோதி சம்ஹாரம் பண்ணுவார்.


அடாடா... அந்தப் படத்தின் கடைசி அரை மணி‌ நேரத்தில் சிரித்துச் சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்து விட்டது.  இதை மிஞ்சுகிற மாதிரி காமெடி வேறு எந்தப் படத்திலும் வராது என்றுதான் எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டார் ஆர்.சுந்தரராஜன்.


நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தூக்கு மேடைக்கே கொண்டு வந்து விடுவார்கள். அதே நேரம் கட் ஷாட்டில் இன்னொரு ரஜினிகாந்த் இவரைக் காப்பாற்ற ஒரு அம்பாஸடர் காரில் வந்து கொண்டிருப்பதைக் காட்டுவார்கள். இங்கே இவர் கழுத்தில் கறுப்புத் துணி கூட மாட்டி விடுவார்கள். அவர் பரபரப்பாக அதிவேகத்தில் காரில் வந்து கொண்டிருப்பார். லீவரை இழுக்க சைகை காட்டும் நேரம்... ஜெயிலின் கருங்கல் சுவரை அம்பாஸிடர் காரினால(?) இடித்து தூளாக்கிக் கொண்டு அதகளமாக வருவார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா...


அது மட்டும் காமெடியில்லை... வந்தவர் நேராக அங்கிருக்கும் அதிகாரிகளிடம் வந்து, ‘‘இவன் கொலை பண்ணலை. ஆதாரம் இந்த கேஸட்ல இருக்கு...’’ என்பார். உடனே அனைவரும் தூக்குப் போடுவதை நிறுத்திவிட்டு கேஸட் கேட்கப் போய் விடுவார்கள்.


அட, ஞானசூனியங்களா... தூக்கு மேடைக்குப் போய்விட்ட ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜனாதிபதியிடமிருந்து போனோ கடிதமோ வந்தால்தானே முடியும், ஆடியோ கேஸட்டை ஒரு ஆதாரமாக எந்த நீதிபதியும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே... என்றெல்லாம் யாரும் கேட்டுவிடக் கூடாது.


 ரஜினி மற்றொரு ரஜினியின் கழுத்தில் இருக்கும் கறுப்புத் துணியை எடுக்க, அவர் கூலாக, ‘‘நீ எப்படியும் வருவேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா, நான் தப்பே பண்ணலையே’’ என்க இருவரும் சிரிப்பதைப் பார்த்துக் கை தட்டி ரசிக்க வேண்டும். அப்படி ரசித்துத் தான் ‘ராஜாதி ராஜா’ படத்தை 200 நாட்கள் ஓட வைத்தனர் நம் ரசிகர்கள். இந்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்க்கும் போதெல்லாம் என்னை ரசித்துச் சிரிக்க வைக்கிறது.


‘போய்யாங்க... இதென்ன ஜுஜுபி! இதைப் போய் பெரிசா காமெடின்னு சொல்ல வந்துட்டே... இதைவிடப் பெரிய காமெடில்லாம் நாங்க பார்த்திருக்கோம்’ என்கிறீர்களா? சொல்லுங்களேன்... நானும் தெரிந்து கொள்கிறேன். பார்த்து ரசிக்கிறேன்.



38 comments:

  1. இதுக்குதான் நான் சினிமாவே பார்க்குறதில்லைண்ணா!

    ReplyDelete
  2. நானும் மிகக் குறைவு படங்கள் பார்ப்பது.
    வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்,
    அனுசரித்து வெல்வோம்.
    நகைச்சுவை இனிமை.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. காமெடி படம் பாத்தாலே இப்பல்லாம் அழுகைதான் வருது. கூடவே எரிச்சலும் கோபமும்கூட வருது.அதை சுவாரசியமா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  4. ஆமாம் எனக்கும் சினிமா என்றாலே அலர்ஜி தான் .

    ReplyDelete
  5. இதுதான் தமிழ் சினிமா! லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. நானும் ரசித்தேன்!

    ReplyDelete
  7. அதெல்லாம் இருந்தாதான் சினிமா. இல்லன்னா சீரியல்..!

    ReplyDelete
  8. பால கணேஷ் சார் !!

    எனக்கென்ன தோணுது !! சில காட்சிகளை வேணா சயின்டிஃபிக் ஃபிக்சன் அப்படின்னு சொல்லி நம்மை நாமே
    ஏமாத்திக்கலாம். மத்ததெல்லாம்......

    அபத்தம் அப்படின்னு சொன்னா கன்சர்ன்டு ரசிகர்கள் கோவிச்சுப்பாங்க அப்படிங்கறதாலே
    காமெடி அப்படின்னு நாகரீகமாக சொல்றீங்க...

    வாழ்க தமிழ் சினிமா !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  9. வீட்டில் இணைய இணைப்பு பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் அம்பியாகவோ ரெமோவாகவோ வந்து விடுவேன் என்ற (எனக்கு) மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    welcome ganesh sir

    ReplyDelete
  10. ரசித்தேன் கணேஷ்.

    புதிய பணியில் சேர்ந்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ரசித்தேன்....புதிய வேலையில் சேர்ந்ததற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. புதிய வேலை வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்னடா ஆளை காணவில்லை என்று நினைத்து இருந்தேன். இப்போது உங்கள் பதிவின் மூலம் செய்தி அறீந்து கொண்டேன்

    ReplyDelete
  13. Wish you great advancements in your career, in the new place. Generally every employer looks for sincere and dedicated work during office hours and you had been lucky to use your office time or lunch time in office for your blogs.

    For more humourous scenes in films, you can watch any Telugu film when the hero can handle any number of adversaries at a time! I always watch them when I am bored! (You can see dubbed telugu films in a number of TV channels!)

    -R. J.

    ReplyDelete
  14. வந்தாச்சா ஃப்ரெண்ட்.புது வேலையா....வாழ்த்துகள்.உங்களைத் தேடிதேடி...........சரி சரி தொடருங்கோ !

    ReplyDelete
  15. நீங்க தீபாவளிக்கபுரம் வந்து பதிவு போடா முடிஞ்சதே பெரிய விஷயம் தொடருங்கள் நல்ல படைப்புகளை கொடுங்கள்

    ReplyDelete
  16. இந்த ரெண்டு படத்தையும் பார்த்துருக்கேன்..நீங்க சொன்னதைதான் நானும் இங்க சொன்னேன்.."சினிமால இதெல்லாம் சாதாரணம்ப்பா"னு போக வேண்டியதுதான் ஐயா..தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி.

    ReplyDelete
  17. ஹையோ ஹையோ.....
    இந்தப் படங்களில் ஒரு சில காட்சிகளில் தான் இப்படியான நகைச்சுவைகள்...
    எங்கண்ணன் விஜய்காந்த படங்களில் பூரா இந்த மாதிரி காட்சிகள் தானே இருக்கு...
    வல்லரசு செமையோ செமை...
    இன்னுமொரு படமிருக்கே....செல்போனின் வெளிச்சத்துல ஆபரேஷன் செய்வாரே..... பட பெயரு மறந்து போச்சு :)))

    ReplyDelete
  18. ‘செங்கோட்டை’ படத்தில் அர்ஜூன் விமானத்தில் தப்பிக்கும் காட்சி Arnold Schwarzenegger நடித்த ஒரு ஆங்கிலப்படத்தில் இருந்து ‘சுடப்பட்டது’!.ஆனால் காப்பி அடித்ததையும் சரியாக அடிக்கவில்லை. அதனால்தான் அது நகைச்சுவை காட்சி போல் ஆகிவிட்டது. ‘கன்னித்தாய்’ என்ற திரைப்படத்தில் திரு எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு மாட்டுவண்டியில் குண்டக்கல் என்ற இடத்திலிருந்து கிளம்பி அங்கிருந்து கிளம்பும் ஒரு ரயிலை Overtake செய்துவிடுவார்! இவ்வாறான காட்சிகளை இரசிகர்கள் கைதட்டி ஆதரிக்கும்போது தமிழ் திரைப்படங்களில் Logic எல்லாம் பார்க்கக்கூடாது.

    ReplyDelete
  19. சமிபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி..
    கொடூர மனம் படைத்த தீவிரவாதி ஒருவன் ஹீரோவை கட்டி வைத்திருப்பார்.. ஹீரோ அவரிடம் வழக்கமான தமிழ் சினிமா டயலாக் ஒன்றை விடுவார். "கட்ட அவுத்து விட்டுட்டு சண்டை போடு பாக்கலாம்" என்பார். அவரும் கட்டை அவிழ்த்து விடு அடி வாங்கி தோற்றுப் போவார்..

    ReplyDelete
  20. Dear Ganesh
    Wish you all the best in your new venture.

    Cinema is meant for passing the time but not for pondering over the scenes. In some comedy scenes, there are serious lessons to be learnt and in serious scenes, it is ulta. Cinema is media which befools the millions of people at a time. Invariably, you can find in MGR's movies, fight scenes locations are underground filled with all unwanted items which becomes handy to the fighters. Even in a jail, you can find electrical related items to enable the hero to pass current through the jail bars to escape from it. Either enjoy it and leave it to the masses to enjoy it. Once Sunil Gavaskar was asked when he was peak at Cricket, to give a comment on the quality of Hindi movies of those days:-
    HIS COMMENT WAS : HINDI MOVIES ARE MADE BY ASSES FOR THE MASSES

    ReplyDelete
  21. சினிமா என்பதே அபத்தங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன. அவை அளவுக்கு மீறும்போது அல்லது காலங்கள் கடந்தபின் காமெடி ஆகி விடுகின்றன.

    சம்பந்தப்பட்ட அந்த அர்ஜூன் படம் அர்னால்ட் நடித்த கமாண்டோ படத்தில் வரும் காட்சி. ஆனால் அதைபார்க்கும்போது நமக்கு தத்ரூபமாக தோன்றும். ஆனால் ஹாலிவுட்டில் கிழித்து தொங்கவிட்டு விட்டார்கள்.

    ராஜாதி ராஜா படம் வந்த காலகட்டத்தில் அவ்வளவு டீடைலாக காட்ட முடியாது. காட்டினாலும் அதில் உள்ள சுவாரசியம் குறைந்து விடும். மக்களுக்கும் புரியாது. தற்போது அதை பார்ப்பதற்கு காமெடியாக உள்ளது. அதே போல பழைய தமிழ் படங்களில் வழக்குகள் குறுகிய காலத்தில் நடப்பது போல காட்டி இருப்பார்கள். அது சாத்தியம் இல்லாதது என்று இப்போதுதான் தெரிகிறது. ஆனால் அப்போது நாமே ரசித்திருப்போம். தற்போது நாம் ரசிக்கும் படங்களில் உள்ள அபத்தங்களை அடுத்த சந்ததியினர் காமெடி என்று சொல்வார்கள்.

    நல்ல பகிர்வு சார்.

    ReplyDelete
  22. //இவன் கொலை பண்ணலை. ஆதாரம் இந்த கேஸட்ல இருக்கு...’’ என்பார். உடனே அனைவரும் தூக்குப் போடுவதை நிறுத்திவிட்டு கேஸட் கேட்கப் போய் விடுவார்கள்//

    :))

    ReplyDelete
  23. தமிழ் பட நகைச்சுவை..

    எம்.ஜி ஆரின் அழுகை,

    சிவாஜி,தனுஷின் சண்டை,

    ரஜினியின் மாறுவேடம்,

    கமலின் ஆங்கிலம் ,

    விஜயகாந்த், சூர்யா வின் நடனம்,

    அஜித்,சரத்குமார் வசனம் பேசுதல்,

    விஜய்,சிம்பு அய்யர் வேடம் தரித்தல்,

    ரகுவரன் CBI / போலீஸ் chief ஆக வருதல்,

    இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடும்

    TR காமிரா முன் வருதல்.,

    ReplyDelete
  24. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி கணேஷ் :-)

    கூடுதல் போனஸாக கண்பத்-தின் கலக்கல் கமெண்ட்ஸ் வேறு...

    புதிய பணியில் சேர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  25. புதிய பணியில் இணைந்துவிட்டீர்களா? வாழ்த்துக்கள் சார். எப்போ ட்ரீட்?
    ஒரு பத்து வருடங்களாக இயல்பான பல படங்கள் வந்துள்ளது. அப்போது பார்த்து விட்டோம் இப்போது பார்த்தால் இந்த லாஜிக் இல்லாததையெல்லாம் எப்படி ரசித்தோமென்று தோன்றுகிறது.

    ReplyDelete
  26. ரொம்ப நாள் அப்புறம் ஒரு பதிவு போட்டு சிரிக்க வச்சிடீங்க... நெட் கனக்ஷன் வாங்கிடீங்களா?

    நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் செங்கோட்டை நினைச்சி சிரிப்பு அடக்க முடியல.. அதவிட ராஜாதி ராஜா... செம காமெடி..

    இந்த மாதிரி நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கு சினிமால:-
    சினிமாக்கு ஒரு சின்ன describe : நிஜத்துல செய்ய முடியாத பல காரியங்களை நிழல்ல செஞ்சி காட்டுவது தான். இதுக்கு பேர் ஹீரோஹிசம்...

    இந்த டைம் செட் பண்ணி டைம் bomb வச்சி, கடைசி செகண்ட் ல ஹீரோ காப்பாத்துவாறே அத பார்த்தா சிரிப்பு தாங்காது...

    ReplyDelete
  27. அண்ணாத்தே !

    ஆந்திரா படம் எதுவும் இதுவரை பார்க்கலீங்களா நீங்க ?
    http://aaranyanivasrramamurthy.blogspot.in/2012/12/blog-post_5.html

    ReplyDelete
  28. காமெடி பற்றி காமெடிப்பகிர்வு !

    ReplyDelete
  29. தமிழ் சினிமா :)) ரசித்தேன்.

    ReplyDelete
  30. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete
  31. வரும் புத்தாண்டு உங்களுக்கு நல்லதொரு ஆண்டாக அமைஎட்டும். பதிவுலகில் மீண்டும் எழுத வரவேண்டும் கணேஷ்!
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  33. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  34. இனிய ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  35. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube