ஏப்ரல் மாதத்தில் ஓர் நாள்... தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டில் இருந்து என் முகநூல் நண்பராக இருக்கும் உதவி ஆசிரியர் ஒருவர் என்னை வந்து சந்திக்கச் சொன்னார். போய்ப் பார்த்தேன். தாங்கள் மாத நாவல்கள் வெளியிட உள்ளதாகவும், வரும் மாதத்திலேயே நான்கு நாவல்கள் வெளியிடும் உத்தேசம் இருக்கிறது என்றும், நான்கில் ஒரு நாவலை நான் எழுதித் தர இயலுமா என்றும் கேட்டார்.
பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் வரவேண்டும், அதற்காக நான் சின்ஸியராக முயல வேண்டும் என்று அதற்கு முந்தைய வாரம்தான் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூலில் பதிவு எழுதி யிருந்தார். நானும் பத்திரிகையில் எழுத முயல்வதற்குத் துவங்கியிருந்தேன் என் முயற்சிகளை. இப்படியான நிலையில் அவர்கள் கேட்டதும் சிறிதும் சிந்திக்காமல் சம்மதம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். ஒரே வாரத்தில் நாவலைத் தந்தாக வேண்டிய அவசரம் இருந்தது.
நாவலை எழுதத் துவங்கினால்... இடையில் சில காலம் எழுத மறந்ததால் நகைச்சுவை வண்டி ஓடாமல் ஸ்டரக்அப் ஆகி நின்றது. தொடர்ந்து எண்ணெய் போட்டு (ஐ மீன், எழுதி) வைத்திருந்தால்தான் வண்டி ஓடும் என்பதைப் புரிந்து கொண்ட சமயம் அது. ஓடினேன் குருநாதர் சேட்டைக்காரனிடம். அவர் முதல் சில அத்தியாயங்களைத் திருத்தி, அவருடைய ஸ்பெஷல் டச்கள் சிலவற்றை சேர்த்துக் கொடுத்தார். அவ்வளவுதான்... அதையே கெட்டியாகக் பிடித்துக் கொண்டு கடகடவென்று வண்டியை ஓட்ட, அதன்பின் வரும் உவமை, பன்ச் போன்றவை சரளமாக வந்து விழுந்தன. கடகடவென ஒரே வாரத்தில் முடித்து அனுப்பி விட்டேன் நல்ல பிள்ளையாக.
ஆனால் அவர்களின் நிர்வாகப் பிரச்சனைகள் ஏதோ குறுக்கிட, மாதம் ஒன்றாக வெளியிடத் துவங்கினார்கள். அந்த வகையில் நான்காவதாக என் நாவல் இப்போது வெளியாகி இருக்கிறது. (ஹப்பாடா... வந்தாச்சு...)
இது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற ஒரு அரிய வகை நாவலாகும். படிக்கையில் நிச்சயம் சிரிப்பீர்கள். படித்து முடித்தபின் எதற்காகச் சிரித்தோம் என்று சிந்திப்பீர்கள். ஆகவே இந்தச் சிறப்பான புத்தகத்தை நீங்கள் அனைவரும் வாங்கிப் படித்து உங்கள் விமர்சனத்தை முன்வையுங்கள். மீ ஆவலுடன் வெயிட்டிங்.
புத்தகத்தின் விலை ஐம்பது ரூபாய் மட்டுமே.
புத்தகம் வேண்டுவோர், சென்னையில் 95978 00485 என்ற எண்ணிலும், புதுச்சேரியில் 95978 00487 என்ற எண்ணிலும், கோவையில் 95978 00415 என்ற எண்ணிலும், மதுரையில் 95978 00452 என்ற எண்ணிலும், சேலத்தில் 96009 69301 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பேசினால் புத்தகம் உங்கள் கைகளில் தவழும்.
உடனே பேசிடுவீங்கதான...?
|
|
Tweet | ||
அம்பது ஓவாலாம் கொடுத்து புத்தகம் வான்க முடியாது..
ReplyDeleteஒழுங்கா என் அட்ரசுக்கு புத்தகத்தை அனுப்பி வையும். இல்லாட்டி வீடு புகுந்து மொத்த புத்தகமும் தூக்கப்படும்.
ஹா... ஹா.. ஹா.. எடுத்துட்டு வந்துடறேன் நானே. ரைட்டா..?
Deleteபேசிடலாம் சார்..
ReplyDeleteவாழ்த்துகள் பாலகணேஷ்/ அண்ணா...
ReplyDeleteவாங்கிடுவோம்!!! அட ! மஞ்சு விரட்டு போல பஞ்சு விரட்டா! பஞ்சா பறக்கும் போல !!! பஞ்ச் பஞ்ச்!!!
VPP யில் அனுப்ப முடியாதா?
ReplyDeleteவிரைவில் பேசுகிறேன்...
ReplyDeleteGood! All the Best!
ReplyDeleteபாராட்டுக்கள் பாலகணேஷ். அதிலும் சேட்டைக்காரரை நீங்கள் குறிப்பிட்டிருந்தது பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் கணேஷ். நானும் பேசுகிறேன். மேலும் உங்கள் படைப்புகளை அச்சில் படிக்க காத்திருக்கிறேன்....
ReplyDeleteநகைச்சுவை நாவல்கள் மிக அரிது . அந்தப் பட்டியலில் இந்த நாவலும் சேரட்டும் வாழ்த்துகள்
ReplyDeleteநீங்கள் குருவை மிஞ்சிய சிஷ்யனாகி வெகுநாளாகி விட்டது கணேஷ்! :-)
ReplyDeleteநான் தேடியும் கிடைக்காத அங்கீகாரமெல்லாம் உங்களைத் தேடித்தேடி வருவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்த்துகள்! பாராட்டுகள்!
இது சபையோருக்கு! நான் என்னவோ இவரது நாவலில் திருத்தம் சொன்னதாகவெல்லாம் எண்ண வேண்டாம்! பாயசத்தில் இரண்டு கிஸ்மிஸ் சேர்த்தது தவிர அடியேன் எதுவும் செய்யவில்லை. இது தன்னடக்கமல்ல; உண்மை!
ReplyDeletewoww attakasam Ganesh sago. !!!
ReplyDeleteaama enakku book epo varum :)
வாங்கிடுவோம்
ReplyDelete