“அண்ணே... அவசரமாப் பேசணும்னு சொன்னீங்களே... என்ன விஷயம்ணே?”
“வாய்யா... ப்ளாக் எழுதறதை விட்டுட்டு காணாமப் போய்ட்டவங்கன்னு சொல்லி நம்ம வெங்கட் நாகராஜ் ஒருபோஸ்ட் போட்ருக்காரு தெரியுமா.-? அதுல முக்கியக் குற்றவாளியா உன்னையும் சேத்திருக்காரு. அதான்... ஏன் நீ இங்கிட்டு வரலன்னு கேக்கலாம்னு கூப்ட்டேன்...”
“ப்ளாக் எழுதறதுக்கு நேரம் ஒதுக்க முடியாம முக்கிட்டு இருக்கறதால முக்கியக் குற்றவாளியா சேத்திருப்பாருண்ணே... ஹி... ஹி... ஹி...”
“ஏன் நேரம் ஒதுக்க முடியலை..? என்னாச்சு..?’‘
“வயித்துப் பொழப்புண்ணே. புல்டைம் ஜாபும், பார்ட் டைம் ஜாபுமா நேரத்தைச் சாப்பிட்ருது. வருமானம் வேணும்லண்ணே பொழைப்புக்கு..?”
“முன்ன ப்ளாக் எழுதிட்டிருந்தப்ப கோடீஸ்வரனா இருந்தியாக்கும்..? அப்பவும் துந்தனாதானே பொழப்பு..? அதில்லை சரியான காரணம். என்னான்னு தெரிஞ்சாவணும் எனக்கு இப்ப...”
“உங்களை டபாய்க்க முடியாது. கிடைக்கற கொஞ்ச நேரத்தை முகநூல்ல உலாவுறதுல செலவு பண்ணிட்டிருக்கேன் அண்ணே. அதான் இங்கிட்டு... ஹி.. ஹி.. ஹி...”
‘என்னது..? முகநூலா..? இங்க இல்லாத என்ன வசதி அங்க கெடைச்சிடுது உனக்கு அங்கயே சுத்திட்டிருக்கற அளவுக்கு..?”
“ரெண்டு சமாச்சாரம்ணே. இங்க எழுதி போஸ்ட் பண்ணிட்டு யாராச்சும் கமெண்ட் சொல்வாங்களான்னு பாத்துட்டிருப்போம். அதுக்கு நாம பதில் போட்டு, அத பாத்துட்டு அவங்க பதில் போட்டு... நாளே ஆயிடும்ணே. அங்கிட்டுன்னா பாத்த உடனே கமெண்ட் போடுவாங்க.நாம பதில் சொன்னா, உடனே பதில் சொல்லுவாங்க. போன்ல பேசிக்கறதுக்கு பதிலா டைப்பிங்ல பேசிக்கற மாதிரிண்ணே. அதான்.”
“ஓகோ... அந்த இன்னொரு சமாச்சாரம்..?”
“இங்ஙன எழுதறதுன்னா எதுனாச்சும் டாபிக் வேணும்ணே. கதையோ, கட்டுரையோ யோசிச்சு எழுதணும். அங்ஙன எழுதணும்னா பெருசா யோசிக்க வேண்டியதில்லைண்ணே. நாலு வரி எழுதுனாலே போதும். டைம் கம்மி. ஈஸியா எழுதிரலாம்ணே....”
“ஓகோ... அப்ப சோம்பேறியா ஆக்கிட்டிருக்குது போல அந்த முகநூல் உன்னைய...”
“அப்டியும் ஒரேயடியா சொல்லிட முடியாதுண்ணே. ப்ளாக்லயும், முகநூல்லயும் திரிஞ்சிட்டிருந்தா பத்தாது அச்சு ஊடகத்துலயும் நீ வரணும்னு நமக்கு வேண்டிய சில பேரு தூண்டி விட்டுட்டாங்கண்ணே. அந்த ஆசை தீயாப் புடிச்சுக்கிச்சு இப்ப. போன வாரத்துக்கு முந்தின வாரம் குமுதம் லைஃப் புக்குல என் ஆர்ட்டிக்கிள் ஒண்ணு வந்துச்சுண்ணே...’‘
“அடடே... சொல்லவே இல்லையே... எங்க அது..?’‘
“இதாண்ணே.. பாருங்க...”
“சபாஷ். அழகான லேஅவுட்ல பாக்கவே நல்லாருக்கு...”
“அவ்வ்வ்வ்... பாக்கத்தான் நல்லாருக்கா..? எழுதுனதும் நல்லாருக்குன்னு நெறையப் பேரு சொன்னாங்கண்ணே. இந்த இஷ்யூ ஜன்னல்ல பாக்கெட் நாவல் அசோகன் சாரை இண்டர்வியூ எடுக்க நானும் போயிருந்தேன் அண்ணே. சொன்னா நம்ப மாட்டீங்கன்னு சாட்சிக்கு போட்டோவே போட்ருக்காங்க பாருங்க இங்க...”
“சூப்பர். இப்டி ரெண்டு ப்ளஸண்ட் சமாச்சாரம் சொல்லிட்டு ஒரு கேக் கூடத் தராட்டி எப்டி..? வாய்யா, போலாம்...”
“கேக் இல்லண்ணே. கிராண்ட் பார்ட்டியே தந்துரலாம். ஏன்னா, இந்த ஆகஸ்ட் மாசத்துல என்னோட மொத மாச நாவல் வெளியாகப் போகுது. ஹி... ஹி... ஹி..”
“வாவ்.... யாரு வெளியிடறாங்க..? எப்ப வருது..?”
“பைனலைஸ் ஆயிருச்சே தவிர, வந்தப்பறம் சொல்லலாம்னு வாயைக் கட்டிருக்காங்கண்ணே. அதுனால வந்ததும் ஒடனே இங்கிட்டு வந்து சொல்லிர்றேன்...”
“சந்தோஷம்டே. ஆக மொத்தத்துல, அங்கிட்டும் இங்கிட்டும் உலாத்துவியே தவிர, ப்ளாக் ஏரியாவுக்கு எண்ட்ரி குடுக்க மாட்டேன்னு சொல்ல வர்ற..? அப்டித்தான..?”
“இல்லீங்ணா. பழைய மாதிரி ப்ளோவுல எழுத முடியுமான்னு கொஞ்சம் பயமா இருக்குங்ணா. நான் நல்லா எழுதி நாலு பேரு பாராட்டினா, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வெங்கட் நாகராஜா?” அப்டின்னு அவரு சந்தோஷப்படுவாரு. சரியா எழுதலன்னா, “இதற்காடா ஆசைப்பட்டாய் வெங்கட் நாகராஜா?” அப்டின்னு சொவத்துல முட்டிக்குவாரே.. அத நெனச்சாத்தான்ணே பாவமா இருக்குது...”
“அப்டிச் சொல்லாதீங்க பாலகணேஷ்.. அப்டில்லாம் நடக்காது. அதெல்லாம் எழுதிடுவீங்க. நீங்க யானை மாதிரி...”
“அவ்வ்வ்வ்வ்... அண்ணே, 108 கிலோ இருந்த வெயிட்டை இப்பத்தான் கொறைச்சு 96க்கு வந்துருக்கேன். இன்னும் தீவிரமா இலியானா மாதிரி ஒல்லியானா என்னன்னு யோசிச்சிங். இப்பப் போயி என்னைய யானைன்னு கேலி பண்றீங்களே...”
“அட, உடம்பு சைஸச் சொல்லலய்யா. எழுதற விஷயத்துல சொன்னேன். தயக்கத்தைத் தூர வெச்சுட்டு தைரியமா உள்ள பூந்து அடிச்சு ஆடுங்க. மறுத்துப் பேசப்படாது. சொல்லிட்டேன்..”
“சரிங்கண்ணே. முன்ன மாதிரி ஒருநாள் விட்டு ஒரு நாள் எழுதாட்டியும் இனிமே வாரம் ஒண்ணாச்சும் போஸ்ட் எழுதிடறேண்ணே. வாங்க, ட்ரீட்டுக்குப் போகலாம்...”
|
|
Tweet | ||
ஆஹா.,.. வாழ்த்துகள் கணேஷ். எனக்கு ட்ரீட்.... நான் சென்னை வரும்போது சேர்த்து வாங்கிக்கறேன்...
ReplyDeleteமுடிந்த போது இங்கேயும் எழுதுங்க கணேஷ்.
கடைசிப் பாராவுல இதுக்கான பதில் இருக்கே வெங்கட்.
Deleteஅது சரி ,முதலில் பிழைப்பு ,அப்புறம் தானே வலைப்பூ :)
ReplyDeleteநன்றி பகவான்ஜி. நீண்ட இடைவேளை (எனக்கு) ஆனாலும் கரெக்ட்டா விசிட அடிச்ச உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
DeleteGreat Congratulations Ganesh.so happy for you.
ReplyDeleteமகிழ்வான நன்றிம்மா.
Deleteவாங்க கணேஷ்/அண்ணா! உண்மைதான் வயித்துப் பொழப்பு பாத்துட்டுத்தானே இங்கயும் எழுத முடியும்!! நேரம் கிடைக்கும்போது இங்கயும் வந்துட்டுப் போங்க...
ReplyDeleteவெங்கட்ஜி பதிவு போட்டதுக்காச்சும் வந்துட்டீங்களே...நன்றி வெங்கட்ஜி!!!
அப்பப்ப வந்து கலக்குங்க!!
வாழ்த்துகள்! குமுதம் லைஃப்ல உங்க ஆர்ட்டிக்கிள் வந்ததுக்கும் இனி வரப் போவதற்கும் சேர்த்து...வாழ்த்துகள்! பாராட்டுகள்!
ReplyDeleteஅன்புடன் வாழ்த்திய உங்களுக்கு அளவற்ற நன்றிகள்.
Deleteநல்ல செய்தியோடு பிறந்த வீடு
ReplyDeleteமீண்டும் வந்தது மிக்க மகிழ்வளிக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும்
நல்வாழ்த்துக்களுடன்...
தொடர்கிறேன் ரமணி ஸார். அன்பான வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி.
Deleteவாங்க வாத்தியாரே...
ReplyDeleteவரவேற்ற வலைச்சித்தருக்கு இதய நன்றி.
Deleteஅப்படியே சிஷ்யர்கள் அனைவருக்கும் பதிவு எழுத ஒரு கட்டளை இடுங்கள்...
DeleteCongrats Sir!
ReplyDeleteமகிழ்வுதந்த வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி.
Deleteவாங்க கணேஷ்/அண்ணா! உண்மைதான் வயித்துப் பொழப்பு பாத்துட்டுத்தானே இங்கயும் எழுத முடியும்!
ReplyDeleteமிக்க நன்றி நேசன்.
Deleteவாழ்த்துகள் சார்
ReplyDeleteமகிழ்வு தந்த வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி எல்.கே.
Deleteபாராட்டுக்கள். நீங்க முக்கினாலும் முக்காவிட்டாலும் முக்கா சே முழு முக்கியம்.
ReplyDeleteநாவல் படிக்கக் காத்திருக்கிறேன்.
காத்திருக்கும் உங்களுக்கு இதயம் நிறைந்த நன்றி.
Deleteவருக, வருக, வலை உலகுக்கு மீண்டும் வருக! நகைச்சுவையைத் தருக!
ReplyDeleteஉவப்பான வரிகளோடு வரவேற்ற உங்களுக்கு உள்ளன்போடு என் நன்றி.
Deleteவாழ்க வெங்கட். வாழ்க மின்னல் வரிகள். மீண்டும் வருக மின்னல் வரிகள்
ReplyDeleteவரவேற்று வாழ்த்திய ஸ்ரீக்கு மனம் நிறைந்த நன்றி.
Deleteவாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Delete'இனிமே வாரம் ஒண்ணாச்சும் போஸ்ட் எழுதிடறேண்ணே'
ReplyDeleteஅது:)!
வெற்றி வெங்கட்டுக்கே! ஆனால் இருவருக்கும் வாழ்த்துகள்:)!
மகிழ்வுதந்த வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி.
Deleteவாழ்த்துக்கள் பாலகணேஷ். பொழப்புதான் முதலில்.
ReplyDeleteஇருந்தாலும் அப்போ அப்போ கதை எழுதினீங்கன்னா, பின்னால புத்தகமாக்கறதுக்கு உங்களுக்கு உபயோகமா இருக்கும்.
எத்தனை மாதங்களில் 108லிருந்து 96? வழியைப் பத்தி ஹின்ட் கொடுங்களேன்.
மூணாவது சிறுகதைத் தொகுப்பு வர வழி சொல்லிட்டீங்க நன்றி. உடம்பு இளைத்தது 80 நாட்களில். ஹிண்ட் ஒண்ணும் பெருசா கெடையாது ப்ரதர். சர்க்கரைங்கற வஸ்துவை புறக்கணிச்சாச்சு. காலை இரண்டு இட்லி மட்டும். மதியம் ஒரு சிறிய கிண்ணம் சாதம், நிறைய காய்கறி + கீரை. வாரத்துல ரெண்டு நாள் பச்சைக் காய்கறிகள், பழங்கள். இரவு இரண்டே சப்பாத்தி. இப்படி உணவுக் கட்டுப்பாடு. அத்துடன் வாகனங்களைப் புறக்கணித்து இயன்ற வரை நடந்தே செல்லுதல். தட்ஸால் நான் செஞ்சது.
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteநலமா மாதேவி? அன்பான வாழ்த்துக்கு அகம் நிறைந்த நன்றி.
DeleteVery good. Keep it up.
ReplyDeleteவாழ்த்துக்கள் பாலகணேஷ் சார்! மீண்டும் தொடங்குங்க கச்சேரியை!
ReplyDeleteசென்னையில் உங்களை சந்திக்க முடியாதபோதே உங்கள் மும்முரம்தெரிந்தது வாழ்த்துகள்
ReplyDeleteவெங்கட் மூலமாகத்தான் பல ரகசியங்கள் வெளியாகியிருக்கு. வெற்றி வாய்ப்புகள் கூடிவரட்டும். வாழ்த்துகள் கணேஷ்.. தொடர்ந்து எழுதுங்க..
ReplyDeleteமுகநூல்ல இன்பாக்ஸ் வசதி இருக்கு. அதை விட்டுட்டியேண்ணே.
ReplyDelete