மதிப்புரை.காம் என்ற தளத்தில் நீங்க ரெஜிஸ்டர் செய்து, விமர்சனம் எழுத விரும்பும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். உங்கள் மதிப்புரை வெளியிடப்படும் அதே நேரம் அந்தப் புத்தகம் உங்களுக்கே உடைமையாகி விடும். நான் அங்கு எழுதிய மூன்று மதிப்புரைகளில் ஒன்றை சற்றே வித்தியாசமாக கவிதை(?) நடையில் படைத்திருந்தேன். என்னுடைய தளத்தில் அதைப் பகிர்ந்து என் பதிவுகளை மீண்டும் துவக்குகிறேன் நண்பர்களே...
செங்கிஸ்கான்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தனர் மங்கோலியர் என்ற ஓரினம்
தனித்தனி குழுக்களாய் வாழ்ந்து தம்முள்ளேயே மோதினர் தினந்தினம்
கூடாரமிட்டு பருவந்தொறும் இடமாறிய அவருக்கிலையோர் ஆரிஜின்
அவ்வினங்களை ஓரரசாய் தனிப் பேரரசாய் மாற்ற வந்துதித்தார் டெமுஜின்!
தனித்தனி குழுக்களாய் வாழ்ந்து தம்முள்ளேயே மோதினர் தினந்தினம்
கூடாரமிட்டு பருவந்தொறும் இடமாறிய அவருக்கிலையோர் ஆரிஜின்
அவ்வினங்களை ஓரரசாய் தனிப் பேரரசாய் மாற்ற வந்துதித்தார் டெமுஜின்!
தலைவனான தந்தை இறந்ததும் சிதறியோடியதவர் கூட்டம்
இலையளவும் டெமுஜின் கொள்ளவில்லை மனதில் வாட்டம்!
அகவை பத்திலேயே தன்னினிய குடும்பத்தின் தலைவரானார்
தகவை யிழந்து பிறிதோர் கூட்டத்திடம் சிக்கி அடிமையுமானார்!
இலையளவும் டெமுஜின் கொள்ளவில்லை மனதில் வாட்டம்!
அகவை பத்திலேயே தன்னினிய குடும்பத்தின் தலைவரானார்
தகவை யிழந்து பிறிதோர் கூட்டத்திடம் சிக்கி அடிமையுமானார்!
நல்லோரொருவர் உதவ தப்பினார் அக்கூட்டத்தின் பிடியிலிருந்து
வல்லோனாக வேண்டுமென உறுதி கொண்டார் அடிமனதிலிருந்து!
நல்நண்பனாய் அவருக்கு அமைந்தனன் ஜமுக்கா என்பான்
வல்லரசுக் கனவை அன்னவன் டெமுஜினுக்குள் விதைத்தான்!
வல்லோனாக வேண்டுமென உறுதி கொண்டார் அடிமனதிலிருந்து!
நல்நண்பனாய் அவருக்கு அமைந்தனன் ஜமுக்கா என்பான்
வல்லரசுக் கனவை அன்னவன் டெமுஜினுக்குள் விதைத்தான்!
இந்நாளைய சச்சினைப்போல் அகவையில் மூத்த கன்னியை
அந்நாளில் டெமுஜின் சந்தித்தார்; அவளை மனதில் நன்னினார்!
நல்முகூர்த்த நாளொன்றில் அவளை மணமுடித்தார் மனமெலாம் மகிழ்வாம்
வல்லூறென வேறோர் கூட்டம் கவர்ந்து சென்றதோர் அவலமான நிகழ்வாம்!
அந்நாளில் டெமுஜின் சந்தித்தார்; அவளை மனதில் நன்னினார்!
நல்முகூர்த்த நாளொன்றில் அவளை மணமுடித்தார் மனமெலாம் மகிழ்வாம்
வல்லூறென வேறோர் கூட்டம் கவர்ந்து சென்றதோர் அவலமான நிகழ்வாம்!
காதல் மனையாளை மீட்க அவருக்கு படைதந் துதவினார் சிற்றரசர் ஆங்கான்
முதல் போரில் எதிரிகளை வென்றார் டெமுஜினுக்கோர் இணையிலைகாண்!
டட்டாரெனும் ஓரினத்தை அழித்திட ஆங்கான் வேண்டுகோள் விடுத்தார்
பட்டாரெனச் சென்று எதிரிகளைக் கொன்றெடுத்தார்; போரை வென்றெடுத்தார்!
முதல் போரில் எதிரிகளை வென்றார் டெமுஜினுக்கோர் இணையிலைகாண்!
டட்டாரெனும் ஓரினத்தை அழித்திட ஆங்கான் வேண்டுகோள் விடுத்தார்
பட்டாரெனச் சென்று எதிரிகளைக் கொன்றெடுத்தார்; போரை வென்றெடுத்தார்!
மெல்ல மெல்லப் பெருகி வந்தது மக்கள் ஆதரவு டெமுஜினின் கூட்டணியில்
நல்ல நண்பன் ஜமுக்காவும் வளர்ந்து நின்றிருந்தான் எதிரியின் படையணியில்!
கூட்டத்தை வளர்க்க தடையாய் நண்பனே எதிர்நின்றதோர் பெருஞ்சோதனை
வாட்டத்தை உதறி வென்றார்; அவன் விரும்பியபடியே கொன்றார் நண்பனை!
நல்ல நண்பன் ஜமுக்காவும் வளர்ந்து நின்றிருந்தான் எதிரியின் படையணியில்!
கூட்டத்தை வளர்க்க தடையாய் நண்பனே எதிர்நின்றதோர் பெருஞ்சோதனை
வாட்டத்தை உதறி வென்றார்; அவன் விரும்பியபடியே கொன்றார் நண்பனை!
பேரரசாய் முடிசூடிய டெமுஜினுக்கிடப்பட்ட பெயர்தான் செங்கிஸ்கான்
ஓரரசாய் மங்கோலிய இனத்தை மாற்ற தொடர்ந்து போர்செய்தா ரவர்காண்!
இட்டப்பட்ட பெண்ணை திருடும் மங்கோலிய வழக்கத்தை மாற்றியது கானின் ஆட்சி
சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்றுரைத்திட்டது செங்கிஸ்கானின் உயர்மாட்சி!

படைகளைத் திரட்டி ஒழுங்காக அணியணியாய் பிரித்திட்டார்
கடைக்கோடி வீரன்வரை தானும் நெருக்கமாய்ப் பழகிட்டார்!
உலகையே ஓர்குடைக்கீழ் கொணர விரும்பினான் அலெக்சாந்தர்; அன்னானுக்கு
பலகாலம் முன்பே கான் அக்கனவை படையினரிடம் விதைத்திட்ட முன்னோன்!
கடைக்கோடி வீரன்வரை தானும் நெருக்கமாய்ப் பழகிட்டார்!
உலகையே ஓர்குடைக்கீழ் கொணர விரும்பினான் அலெக்சாந்தர்; அன்னானுக்கு
பலகாலம் முன்பே கான் அக்கனவை படையினரிடம் விதைத்திட்ட முன்னோன்!
போர்களிலேயே வாழ்நாளைக் கழித்திட்டது கானின் பெருமை
பார்புகழும் மன்னரென்றாலும் வாராமல் நின்றிடாதே முதுமை!
தந்தைக்குப் பின் ஆரென்று அடித்துக் கொண்டது வாரிசுகளின் பிழைதான்
சிந்தை மிகக்குலைந் தவர்க்குள் ஒற்றுமைசெய முயன்றது கானின் மனந்தான்!
பார்புகழும் மன்னரென்றாலும் வாராமல் நின்றிடாதே முதுமை!
தந்தைக்குப் பின் ஆரென்று அடித்துக் கொண்டது வாரிசுகளின் பிழைதான்
சிந்தை மிகக்குலைந் தவர்க்குள் ஒற்றுமைசெய முயன்றது கானின் மனந்தான்!
உலகை வெல்லும் கனவை வாரிசுகளிடம் ஈந்து மரித்ததவர் உடலம்
பலகாலம் அதன்பின் மங்கோலியப் பேரரசின் புகழ் மங்காப் படலம்!
கான் மறைந்தபின் கிளைகிளையாய் பெருகியது மங்கோலியப் பேரரசு
சீனத்திலிருந்து இந்தியாவின் மூக்குவரை நீண்டு வளர்ந்ததவ் வல்லரசு!
பலகாலம் அதன்பின் மங்கோலியப் பேரரசின் புகழ் மங்காப் படலம்!
கான் மறைந்தபின் கிளைகிளையாய் பெருகியது மங்கோலியப் பேரரசு
சீனத்திலிருந்து இந்தியாவின் மூக்குவரை நீண்டு வளர்ந்ததவ் வல்லரசு!
செங்கிஸ்கான் மரணதேவனை முத்தமிட்டது ஆயிரத் திருநூற் றிருபத்தாறாம் ஆண்டு
மங்கிடாப் புகழுடன் மங்கோலியப் பேரரசு அதன்பின் விளங்கியது ஓர் நூற்றாண்டு!
தகவலாய்ப் பள்ளியில் படித்திட என்றும் கசந்திடும் ஒன்று வரலாறு
கலகலவென கதையாய்ப் படித்தால் மனதில் இறங்கிடும் ஒருவாறு!
மங்கிடாப் புகழுடன் மங்கோலியப் பேரரசு அதன்பின் விளங்கியது ஓர் நூற்றாண்டு!
தகவலாய்ப் பள்ளியில் படித்திட என்றும் கசந்திடும் ஒன்று வரலாறு
கலகலவென கதையாய்ப் படித்தால் மனதில் இறங்கிடும் ஒருவாறு!
கதையென கானின் வரலாற்றை உரைத்திட்ட முகிலின் கைவண்ணம்
இதைப் படிப்போரெல்லாம் வியந்து பாராட்டிடுவர்; இது திண்ணம்!
வாசகர்கூடத்தில இப்போது.... எம்.ஜி.ஆர்.
இதைப் படிப்போரெல்லாம் வியந்து பாராட்டிடுவர்; இது திண்ணம்!
வாசகர்கூடத்தில இப்போது.... எம்.ஜி.ஆர்.
|
|
Tweet | ||
///கதையென கானின் வரலாற்றை உரைத்திட்ட முகிலின் கைவண்ணம்
ReplyDeleteஇதைப் படிப்போரெல்லாம் வியந்து பாராட்டிடுவர்; இது திண்ணம்!///
பாராட்டுவோம் அருமை
தம 2
படித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பரே....
Deleteமதிப்புரை.காம் தகவல் அனைவருக்கும் உதவும்...
ReplyDeleteஆம் டி.டி. விரைந்து புத்தகங்களை அனுப்புகிறார்கள். நம் கருத்தை வெட்டாமல் வெளியிடுகிறார்கள். நல்ல தளம். மிக்க நன்றி.
Deleteகவிதை வடிவில் மதிப்புரை சூப்பர்
ReplyDeleteமுகநூலில் நூலிலேயே மூழ்கிக் கிடந்து வலைப்பூவை மறந்து விட்டீர்களோ என்று நினைத்தேன்.
ஜனவரி புத்தகக் கண்காட்சி வேலைகள் எல்லா ஆண்டும் நவம்பர் டிசம்பரில் என்னை அழுத்திவிடும் முரளி. என்னையும் நிறையப் பேருக்கு நெருக்கமாக்கிய தாய்த் தளத்தை மறந்துவிட இயலுமா என்ன..? மிக்க நன்றி.
Deleteகடைசி பஞ்ச் உங்களோடுதானே!!! சூப்பர் ண்ணா!
ReplyDeleteநோட் பண்ணினா நிறைய புத்தகம் படிக்கலாம் . செம ஐடியா தான்:)
கடைசி பஞ்ச் மட்டுமில்ல தங்கச்சி.. ஆல் பஞ்ச் நம்மோடதுதான்... ஐடியாவை ரசிச்ச உனக்கு அகமகிழ்வுடன் நன்றி.
Deleteஅப்படியா!!! அடேயப்பா!!! செங்கிஸ்கான் கதையையே பாடவே பாடிவிட்டீர்களே!!! சூப்பர் அண்ணா!!
Deleteவித்தியாசமான முறையில் விமர்சனம்.
ReplyDeleteஅருமையாக எழுதி இருக்கிறீர்கள் கணேஷ் ஐயா.
த.ம. 7
ரசித்ததுடன் அந்த முக்கியமான 7ஐத் தந்த அருணாவுக்கு உளங்கனிந்த நன்றி.
Deleteவாவ் போடவைக்கிறது தங்களின் கவிதை அண்ணா ! தங்களின் கவிதைக்காகவே இப்புத்தகத்தை வாங்கிப்படிக்க வேண்டும் எனத்தோன்றுகிறது !
ReplyDeleteமனம் நிறைந்த நன்றி ப்ரோ.
Deleteவிரைவில் வாங்கிப்படிக்கின்றேன் பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி.
ReplyDeleteரசித்துப் படித்த நேசனுக்கு இதயம் நிறை நன்றி.
Deleteவித்தியாசமாய் இருக்கிறது...
ReplyDeleteயானை பலம் தந்த உங்களின் வார்த்தைகளுக்கு மனம் நிறைய நன்றிண்ணா...
Deleteமுயற்சி சோதனை தான். ;)
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்.... டாங்ஸுங்கோ....
Deleteஇவ்வாறான ஒரு முறை இருப்பது பற்றி எனக்குத் தெரியாது. பகிர்ந்தமைக்கு நன்றி. தங்களின் கவிதை நடை மதிப்பீடு நன்றாக இருந்தது.
ReplyDeleteபடித்து ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.
Deleteமதிப்புரை அருமை அண்ணா...
ReplyDeleteநல்லதோர் முயற்சி அண்ணா.. வாழ்த்துக்கள் த ம எட்டு
ReplyDeleteமதிப்புரை காம் அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteமதிப்புரை (க வி தை) அருமை வாத்தியாரே.....
ReplyDeleteஅருமியான மதிப்புரை கவிதை வடிவில்...
ReplyDeleteநல்ல முயற்சி.....மதிப்புரை டாட் காம் அறிமுகத்திற்கு....
போர்களிலேயே வாழ்நாளைக் கழித்திட்டது கானின் பெருமை
பார்புகழும் மன்னரென்றாலும் வாராமல் நின்றிடாதே முதுமை!
தந்தைக்குப் பின் ஆரென்று அடித்துக் கொண்டது வாரிசுகளின் பிழைதான்
இதுதான் இன்றும் தொடர்கின்றதோ....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடனும், நட்புடனும்
துளசிதரன், கீதா
அண்ணாவிற்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr