குறுகுறு குழந்தைகள் துள்ளி விளையாட...
விறுவிறுவென முதியோர் நடை பழக...
துறுதுறுவெனக் காதலர்கள் கூடிமகிழ...
பரபரப்பான நகரின் நடுவே அவ்வமைதிப் பூங்கா!
வானமது நீலநிறத்தினை யிழந்து அடர்
கருமை பெற்றிடும் நேரந் தன்னிலே
பொறுமையினை யிழந்து ராகுல் ஒரு
எருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே...
ஆடிகாரென ஓசையின்றி ஆடியசைந்து மெல்ல
அருகினிலே வந்திட்டாள் அழகுநங்கை விலாசினி!
குறுநகையொன்றை அவன்மேல் வீசி - காதலனுக்குக்
காத்திருத்தலே அழகு கண்ணா வென்றிட்டாள்!
காதலெனும் அத்தியாயந்தான் முடிந்ததடி கண்ணே...
கல்யாண அழைப்பிதழும் காண் இதோவென்று
காளையவனும் புன்னகை சிந்தி நீட்டிட...
மணமகன் அவனென்றும் மணமகள் அவள்
தோழி மது(வந்தி)யென்றும் பகன்றது பத்திரிகை!
விஜயகாந்த்போல் விழிகள் சிவந்திட
வீறிட்டலறினாள் அழகுநங்கை விலாசினி..!
பாரினிற் சிறந்த அழகி நானெனப் பலநாள்
பகன்றதெல்லாம் பொய்யோ - நீயும் தினம்
மலர்விட்டு மலர் தாவுமொரு வண்டோ...?
மதுவென் னுள்ளிருக்க மதுவின் வீட்டினில்
மழைநாளொன்றில் யான் ஒதுங்கிடவே நேரிட
வழக்கம்போல நம்மரசு மின்சாரத்தைப் பறித்திட
விளைந்திட்ட விளைவாய் மதுவினுள்ளே யின்று
மழலையொன்று விதை கொண்டிட்டதே கண்மணி...
சீராய்ப் பலமுறை யோசித்து யான்.இழைத்திட்ட தவறுக்கு
பிராயச்சித்தம் இதுவெனத் தெளிந்தே மனதின் ஆசைக்கு
மாறாய் முடிவெடுத்தேனவளை மணந்திடவே - மங்கையெனை
மன்னித்தே விலகிடுவாயென ராகுலவன் இயம்பிடவும்...
கண்ணிரண்டும் சிவந்திருக்க பாவையவனை ஏறிட்டாள்...
காவலனாய் நீயிருப்பாய் என நினைக்க நீயோ
கேவலனாய் மாறிடுவாய் என கனவிலும்
யான் நினைத்தேனில்லை தடியா.... ஒழி
என் கண்முன் நில்லாதே இனி...! கண்டால்
கொன்றிடுவேன் நானுனை யென்றாள்...!
கோபம் கொப்பளித்த மங்கையின் மதிமுகத்தை
தாபமுடனொரு முறை பார்த்து ராகுல்வன் நகர...
அரக்கனே நில்.... போவதற்கு முன்பெனக்கு
அரவிந்தனெனும் உன் நண்பனின் அலைபேசி
எண்ணைத் தந்தே யொழிவாய் பாதகா வென்றாள்!
விறுவிறுவென முதியோர் நடை பழக...
துறுதுறுவெனக் காதலர்கள் கூடிமகிழ...
பரபரப்பான நகரின் நடுவே அவ்வமைதிப் பூங்கா!
வானமது நீலநிறத்தினை யிழந்து அடர்
கருமை பெற்றிடும் நேரந் தன்னிலே
பொறுமையினை யிழந்து ராகுல் ஒரு
எருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே...
ஆடிகாரென ஓசையின்றி ஆடியசைந்து மெல்ல
அருகினிலே வந்திட்டாள் அழகுநங்கை விலாசினி!
குறுநகையொன்றை அவன்மேல் வீசி - காதலனுக்குக்
காத்திருத்தலே அழகு கண்ணா வென்றிட்டாள்!
காதலெனும் அத்தியாயந்தான் முடிந்ததடி கண்ணே...
கல்யாண அழைப்பிதழும் காண் இதோவென்று
காளையவனும் புன்னகை சிந்தி நீட்டிட...
மணமகன் அவனென்றும் மணமகள் அவள்
தோழி மது(வந்தி)யென்றும் பகன்றது பத்திரிகை!
விஜயகாந்த்போல் விழிகள் சிவந்திட
வீறிட்டலறினாள் அழகுநங்கை விலாசினி..!
பாரினிற் சிறந்த அழகி நானெனப் பலநாள்
பகன்றதெல்லாம் பொய்யோ - நீயும் தினம்
மலர்விட்டு மலர் தாவுமொரு வண்டோ...?
மதுவென் னுள்ளிருக்க மதுவின் வீட்டினில்
மழைநாளொன்றில் யான் ஒதுங்கிடவே நேரிட
வழக்கம்போல நம்மரசு மின்சாரத்தைப் பறித்திட
விளைந்திட்ட விளைவாய் மதுவினுள்ளே யின்று
மழலையொன்று விதை கொண்டிட்டதே கண்மணி...
சீராய்ப் பலமுறை யோசித்து யான்.இழைத்திட்ட தவறுக்கு
பிராயச்சித்தம் இதுவெனத் தெளிந்தே மனதின் ஆசைக்கு
மாறாய் முடிவெடுத்தேனவளை மணந்திடவே - மங்கையெனை
மன்னித்தே விலகிடுவாயென ராகுலவன் இயம்பிடவும்...
கண்ணிரண்டும் சிவந்திருக்க பாவையவனை ஏறிட்டாள்...
காவலனாய் நீயிருப்பாய் என நினைக்க நீயோ
கேவலனாய் மாறிடுவாய் என கனவிலும்
யான் நினைத்தேனில்லை தடியா.... ஒழி
என் கண்முன் நில்லாதே இனி...! கண்டால்
கொன்றிடுவேன் நானுனை யென்றாள்...!
கோபம் கொப்பளித்த மங்கையின் மதிமுகத்தை
தாபமுடனொரு முறை பார்த்து ராகுல்வன் நகர...
அரக்கனே நில்.... போவதற்கு முன்பெனக்கு
அரவிந்தனெனும் உன் நண்பனின் அலைபேசி
எண்ணைத் தந்தே யொழிவாய் பாதகா வென்றாள்!
|
|
Tweet | ||
ஹா ஹா, கடைசில கொலை வெறியை காட்டிட்டாங்க....
ReplyDeleteபுலிப்பாணி பாடல் மாதிரியே இருக்கு வாத்தியாரே....
புலிப்பாணி...? சித்தர் பாடல்லாம் படிக்கறியா ஸ்.பை...? ஆச்சர்யம் தான். படிச்சு ரசிச்ச உனக்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteபுலிப்பாணி ங்கிறது ஒரு படத்துல வித்தியாசமா முடி வச்சுகிட்டு senthil வருவாரே, அவர் பெயர் தானே? ;-)
Deleteநான் நினைச்சதில்லையா அது...? ஆவி வேறெதோ சொல்றாரே... ‘விம்’முங்க ஸ்.பை....!
Deleteஎதுக்கு ஸ்.பை க்கு 'விம்'?(அது பாத்திரம் கழுவ யூஸ் பண்ற பவுடர், இல்ல?
Deleteபாதகா(என்றாள்) வென்றாள்?
ReplyDeleteத ம 2
பிரித்தெழுத்து என்றாள்... சேர்த்தெழுத்து வென்றாள்... ஒகேவா...? படிச்ச ரசிச்ச(!) உங்களுக்கு செம்ம நன்றி.
Deleteபிரித்து எழுதி(னால்) என்றாள்.சேர்த்து எழுதி(னால்) வென்றாள்!
Deleteஅட.. கடைசி டச் செம்ம..
ReplyDeleteதிருப்பத்தை ரசிச்ச ஆவிக்கு திருப்தியுடன் என் நன்றி.
Deleteஎங்க வாத்தியாரே ஒளிச்சு வச்சிருந்தீங்க இம்புட்டு சரக்கையும்?
ReplyDeleteபோங்கப்பு... எனக்கு வெக்க வெக்கமா வருது.... ஹி... ஹி.... ஹி....
Deleteகடைசி இரண்டு வரிகள்
ReplyDeleteதிடீர் திருப்பம்
நன்றி ஐயா
திருப்பத்தினை ரசித்திட்ட உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி நண்பரே...
Deleteதம 4
ReplyDeleteநல்லாதனே இருந்தீங்க என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் இப்படி? எங்கே அந்த சீனு & ஸ்கூல் பையன் நல்லா இருந்த ஆளை இப்படி ஆக்கிவிட்டீங்களே சும்மா இருந்த சிங்கத்தை இப்படி தூண்டி விட்டுடிங்களே...பயமா இருக்குபா
ReplyDeleteநகைச்சுவை எழுதலாம்னு உக்காந்தா மூடு வரலை... அது திடீர்ன்னு கொலைசசுவையா கன்வர்ட் ஆகிடுச்சு. ஹி... ஹி.... ஹி....
Deleteமதுரை.. இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. இன்னும் தொடர்ந்து நாலு கவிதை போட்டா வாத்தியார் யாருன்னே தெரியாது சொல்லிருவேன் :-)))))))
Deleteஇனிமே கவிதை எழுதினா 18 + போடுவது மாதிரி க+ என்று போடவும் ...
ReplyDeleteக+ ஆ?
Deleteஆஹா... அந்த க+ ஐ பாத்ததுமே எஸ்கேப்பாயிரலாம்னு பிளானா...? விட மாட்டேன் மதுரைத்தமிழரே.... விடமாட்டேனாக்கும்.... மிக்க நன்றி.
Deleteஇதிலும் கலக்கல்... வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteரசித்து வாழ்த்திய டி.டிக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅற்புதம்
ReplyDeleteகடைசியில் அந்தப் பாதகனிடம்
தமக்குச் சாதகமாக நன்பனின்
விலாசம் கேட்டதாக முடித்தது.....
கொலை வெறிக் (வரிக் ) கவிதைகள். தொடரை
ஆவலுடன் எதிர்பார்த்து....
தோணிணதை போட்ரலாம். கல்லெறி விழும்னு நென்ச்சேன்... தொடரலாம்னு சொல்றீங்களே... மனசே குஷியாய்டுச்சு ரமணி ஸார்... மகிழ்வுடன் என் நன்றி.
Deletetha.ma 6
ReplyDeleteவாத்தியாரே எழுதினது நீங்கன்ற ஒரே காரணத்துக்காகத்தான் இந்த கொலவெறிய தாங்கிக்கிட்டென்.. இதுபோன்ற முயற்சிய வருடத்துக்கு ஒருமுறை எடுக்கவும் இல்லைன்னா அந்த கேவலன அனானியா வந்து கமெண்ட் போட்டு மிரட்ட சொல்லுவேன் ;-)
ReplyDeleteஅட... இந்த மாதிரி கொலவெறிய ஒரு தபாவோட நிறுத்திக்கலாமனுல்ல நெனச்சேன்... அப்ப... அடுத்த வருஷமும் போடலாமா....? படா டாங்ஸுப்பா...
Deleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteதங்கள் துள்ளல் மனம் கவிதையில் பிரதிபலித்திருக்கிறது. கவிதையின் தாக்கத்தைப் புரிந்து கொண்டு கொலைவெறி கவிதைனு நீங்களே தலைப்பிட்டது தான் சிறப்பு. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் நீங்க தொடருங்கள் சகோதரரே!
கவிதை பெண்களின் ஏரியா அந்த ஏரியாவில் நுழைந்து அவர்களின் உரிமையில் தலையிடுவது தவறு. அதை ஆதரிக்கும் உங்களை பெண்கள் சார்பாக நான் கடும் கண்டணத்தை பதிவு செய்கிறேன். இதை நீங்கள் ஒதரந்து செய்தால் உங்கள் வருங்கால துணைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாண்டியன்
Deleteஎன்னாது... வருங்காலத் துணையா...? இதைப் பாத்தா பிரதர் பாண்டியனோட நிகழ்காலத் துணை கொலவெறியாகி என்ன செய்வாங்களோ...? ஆண் பாவம் பொல்லாதது மதுரைத் தமிழா!
Deleteமுதல் முறையாக என் தளத்துக்கு வருகை தந்து ரசித்து உற்சாகம் தந்த நண்பர் பாண்டியனுக்கு நன்றி. (திருமயம் பாண்டியன்தானே நீங்க?)
கவிதை பெண்கள் ஏரியாவா?!
Deleteஅட! நான்கூட வைரமுத்து, வாலி எல்லாம் ஆண்கள் பேருனுல நெனச்சேன்(பாருங்க கொலைவெறி கவிதை பெண்களோட ஏரியா ன்னு தல கௌண்டர் கொடுத்து எஸ் ஆகபோறார்:)))
ஹலோ மதுரைத் தமிழா!!! சினிமாவில் கவிதை எழுதுபவர்கள், ஏன் பல பத்திரிகைகளில் கவிதை எழுதுபவர்கள் ஆண்கள் தமிழா!!!!! அதுவும் காதல் கவிதைகளில் பின்னி பெடலெடுப்பவர்கள் ஆண்களே...பதிவர் தம்பி வெற்றிவேலின் கவிதைகள் சாட்சி!!!!!!!!! இதோ இந்த வாத்தியாரின்கொலைவெறி கூட......(சகோதரி அம்பாள்அடியாள் மன்னிக்கவும்!!!!!!!!)
Deleteகடைசியா கவுத்திட்டீங்களே தலைவா....
ReplyDeleteஹி... ஹி.... ஹி... அதனால தாங்க கொலவெறின்னு தலைப்புலயே உஸார் பண்ணேன் உங்கள... மிக்க நன்றிங்கோ....
Deleteவணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?/பொறுமையினை யிழந்து §§§ராகுல்§§§ஒரு
ReplyDeleteஎருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே...///இது தான் கொல வெறி யோன்னு நெனைச்சேன்,இது வேற....ஹ!ஹ!!ஹா!!!
ReplyDelete
சூப்பர்.....சூப்பர்....அரவிந்தன் நம்பர் கெடைச்சுதா?
ReplyDeleteநீங்க நெனச்சதும் கொலவெறில சேர்த்திதான் நண்பரே.... அவன் நம்பர் கெடைச்சதாங்கறதெல்லாம் உங்க கற்பனைல படமா ஓடட்டும். மிக்க நன்றி.
Deleteஅருமைக்கவி அரவிந்தன் அடுத்த தேர்வோ?? விலாசினி படைப்பு சூப்பர் கனேஸ் அண்ணாச்சி
ReplyDeleteபடைப்பினை ரசித்த நேசனுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Delete//அரவிந்தனெனும் உன் நண்பனின் அலைபேசி
ReplyDeleteஎண்ணைத் தந்தே யொழிவாய் பாதகா வென்றாள்!//
:)))))))))))
சிரித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி ஸ்ரீ...
Deleteகொலவெறிக் கவித கல கல! கலக்குங்கள் வாத்தியாரே!
ReplyDeleteகலகலபபை ரசித்த சுரேஷுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஇப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே?
ReplyDeleteகரீக்ட்டு... இப்புடி ஆளுக்கு இப்புடித் தேங் இருக்கோணும்.. மிக்க நன்றி.
Deleteபால கணேஷர்,
ReplyDeleteஅவ்வ்...அவ்வ்வ்!
என்ன சொல்லுறதுனே தெரியலை அதான்?
உங்களுக்கு பதிலுக்கு ஒரு கொலவெறிக் கவித பின்னூட்டம்!!!
பழிக்கு பழி, கவிதக்கு கவித...ஹி...ஹி!
# why திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி சார்?
why திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி சார்?
மக்களே கல்லு எடுத்துக்கோங்கோ,
அப்படியே கைல கத்தி எடுத்துக்கோங்கோ
ப ப பான் ப ப பான் ப ப பா ப ப பா
சரியா வாசிங்கோ
சூப்பர் வாத்தியாரே ரெடி,
ரெடி 1,2,3,4!
வாவ் வாட் எ சேஞ்ச் ஓவர் வாத்தியார்!
ஓ.கே வாத்தியார் நவ் டியூன் சேஞ்ச்யு
கைல கத்தி
ஒன்லி குத்தி...
ஹேண்ட்ல கத்தி
கத்தில பிளட்
eye- u fulla- aa tear-u
empty life-u
கய்ஸ்-யு கம்-யு
லைஃப் ரிவர்ஸ் கியர்-யு
கொன்னு கொன்னு
ஓ மை கண்ணு!
யூ ஷோவ்டு மி டின்னு!
கொன்னு கொன்னு யூ கொலையா கொன்னு!
ஐ வான்ட்-யு ஹியர் நவ்-யு
God I am dying now-u
"He is happy how-u!"
This song for mokkai boys-u
we don't have choice-u!
why this kola veri kola veri kola veri sir?
# தனியா "பேய்ப்படம்லாம்" பார்க்க போகும் போதே நினைச்சேன் இப்படி எதாச்சும் ஆகும்னு, காத்து கருப்பு ஏதோ அடிச்சிடுச்சு போல , ஓ பாடி காட் மினிஸ்வரா ,வாத்தியார காப்பாத்துப்பா, அவரு செலவுல ஒரு கெடா வெட்டுறேன் ..ஹி..ஹி கறிச்சோறு தின்னு நாளாச்சு அவ்வ்!
சர்த்தான்... எல்லா ஏரியாவுலயும் பூந்து பொற்ப்படற வவ்வாலு இந்த ரத்தம் வரவழைக்கற சூரமொக்கைக்கு போட்டி போட முடியாதுன்னு மனசுல நெனச்சிருந்தேன். கொலவெறி ட்யூனுக்குப் பாட்டே எழுதி அசர்டிச்சிட்டீங்களே குருஜி....!
Deleteஹா ஹா ஹா வவ்ஸ் பின்றேள் போங்கோ.. வாட் எ change ஓவர் மாமா :-)))))
Deleteசெம செம செம :-))))))))
பால கணேஷர்,
Deleteஹி...ஹி நாமலாம் மொக்கை ஸ்பெஷலிஸ்ட்னு தெரியாம தான் இத்தினி நாளும் இருந்திங்களா? இத்தினி மொக்கை பதிவைப்போட்டிருக்கேன் அப்பக்கூட புரிஞ்சிக்கலையே அவ்(நாம போடுற பதிவெல்லாம் மொக்கை தானே)
#//கொலவெறி ட்யூனுக்குப் பாட்டே எழுதி அசர்டிச்சிட்டீங்களே குருஜி....!//
வாத்தியாருக்கே குருவா ,இதெல்லாம் ரொம்ப ஓவராயிருக்கே அவ்வ்!
பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறதுனா தானா ஒரு குதுகளம் பொங்கிடும் அவ்வ்!
-----------
சீனு,
திருப்பி வாங்கிப்போட்டு பின்றேள் போங்கோ -:-))
எல்லாம் வாத்தியாரின் சேஞ்ச் ஓவர் செய்த காரியம்தேன்!
வாத்யாரே.... எதுக்கு இந்த கொலவெறி....
ReplyDeleteகடைசில வச்சீங்க பாருங்க ஒரு ட்விஸ்ட்! :))))
நாளை சந்திப்போம்....
very good... (kavithaila vantha visayaththukku sonnen)
ReplyDeleteஅடடடடடடடா...... என்னமா எழுதுறீங்க......
ReplyDeleteஓ.... இதுதான் கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுப்பதா....
நீங்க எப்படி அறுத்தாலும் எங்க கழுத்து ஸ்டாங்குகோ...))))
வித்தியாசமான பாணி. தொடருங்கள் கணேஷ் ஐயா.
இப்படி ஒரு நகைச்சுவை கவிதைக் கதை யாராலயும் எழுத முடியாது மின்னலைத் தவிர .
ReplyDelete//பொறுமையினை யிழந்து ராகுல் ஒரு
எருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே...//
//விஜயகாந்த்போல் விழிகள் சிவந்திட
வீறிட்டலறினாள் அழகுநங்கை விலாசினி..!//
உவமைகள் பிரமாதம்.
உங்க கொலைவெறியப் பார்த்து வவ்வாலே குஷியாயிட்டரே!
While reading the poetry, instead of reading it as "Kevalanai" I read it as "Kovalanai" which is also quite suitable to an extent.
ReplyDeleteGood attempt with an unexpected twist. Keep it up.
இவ்வளவு நாள் எங்கே ஒளிந்திருந்தது இந்தத் திறமை. ரசித்தேன்
ReplyDeleteSuperb ....! First class ஆ இருக்குண்ணா . நல்ல flow ...
ReplyDelete//கேவலனாய் மாறிடுவாய் என கனவிலும்//
நா கோவலன்னு வாசிச்சுட்டன் :)
கொலவெறின்னு டைட்டில் கொடுத்தாலும் கொடுத்தீங்க
ReplyDeleteஆளாளுக்கு கொலைவெறியா கமென்ட் போட்டுருக்காங்களே!
ஆனாலும் விலாசினி கொடுத்த பன்ச் ககக போ!!!
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் எனக்கு இந்தக் கவிதை ரொம்பவுமே பிடித்திருக்கிறது கணேஷ். வார்த்தைகளாகட்டும், எழுதின விதமாகட்டும், எடுத்துக் கொண்ட கருவாகட்டும்... குறை சொல்ல எதுவுமே இல்லை. எல்லாமே ரசிக்கவைத்தன. உங்களிடம் நல்ல கவித்திறமை இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பாராட்டுகள் கணேஷ்.
ReplyDeleteவாத்தியாரே இப்படி எல்லா ஜெனர்லயும் கலக்கறீங்களே! கொலைவெறி நிஜம்மாகவே கொலைவெறிக் கவிதைதான்!!!!!!!!! அருமையாக எழுதிஇருக்கின்றீர்கள் வாத்தியாரே!
ReplyDelete