வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய
நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை
முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், ''கோழி இன்னும் சாகலையாப்பா?''
முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், ''கோழி இன்னும் சாகலையாப்பா?''
கன்னடத் திரையுலகின் இளம் நடிகரான ரக்ஷித் ஷெட்டி முதல் முறையாக இயக்கி நடித்த படம் ‘உலிதவரு கண்டந்தே’ (Ulidavaru Kandante) -- என்றால் ‘மற்றவர் பார்வையில்’ என்று பொருள் என்று கன்னடம் தெரிந்த நண்பர் பிரபுகிருஷ்ணா சொன்னார். – சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால் அந்தப் படம் புரியவில்லை, என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை என்றெல்லாம் புகார்கள் எழுந்ததால் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக படத்தின் மொத்த்த் திரைக் கதையையும் பி.டி.எப் பைலாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். பட்ம் தியேட்டர்கள்ல ஓடிட்டிருக்கும் போதே முழுத் திரைக் கதையையும் வெளியிட்ட இவங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. இங்கே க்ளிக்கினால் கன்னடத்திலும், இங்கே க்ளிக்கினால் ஆங்கிலத்திலும் டவுன்லோடு செய்து படிக்கலாம். எனக்குக் கூடத்தான் நிறைய தமிழ்ப் படங்கள் புரிவதில்லை. அதாவது... ஏன் எடுக்கிறார்கள் என்றே புரிவதில்லை. ஹி.... ஹி... ஹி...!
=======================================================================================
ஒரு கல்யாணத்தில் திரு,கிரேசி மோகனும் திரு ஏ.ஆர்.எஸ்ஸும் பேசிக்கொண்டதை ஒட்டுக்கேட்டதில்....
ஒரு கல்யாணத்தில் திரு,கிரேசி மோகனும் திரு ஏ.ஆர்.எஸ்ஸும் பேசிக்கொண்டதை ஒட்டுக்கேட்டதில்....
ஏ.ஆர்,எஸ்: “மோகன்! ஒரு நாள் வீட்டுக்கு வாயேன். பழய போட்டொவெல்லாம் காட்டறேன்! எம்ஜிஆர் வித் தொப்பி, வித்தவுட் தொப்பி...”
கிரேசி: “நீங்க எங்க வீட்டுக்கு வாங்க! நானும் நிறைய - போட்டோ வித்தவுட் எம்ஜிஆர் - காட்டறேன்..”
=======================================================================================
கந்தசாமிப்பிள்ளை ஆழ்ந்த சிந்தனையுடன் தலையை நிமிர்த்தி கூரையை நோக்கிய வண்ணம் உட்கார்ந்திருந்தார். “என்ன பிள்ளைவாள்... என்ன அவ்வளவு அபாரமாய் யோசிக்கிறீர்?” என்றார் முதலியார். “பொழுது விடிந்தால் கவலைப்படுவதற்கே நேரம் போதவில்லையே... பலவிதத் தொல்லை...” என்றார் பிள்ளை. “அது என்னய்யா அப்படிப்பட்ட தொல்லை? எழுந்து வாருங்காணும்... இப்படிக் காற்றாட வெளியில் போய்விட்டு வரலாம்...” என்றார் முதலியார். “ஓய்! என்னுடைய கசலையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வரக் கூடியதல்ல...” என்றார் பிள்ளை. “பூ! அப்படிப்பட்ட கவலை என்னென்ன சொல்லும். ஒரேயடியாகக் குறைக்க வழி சொல்கிறேன்...” -முதலியார். பிள்ளை ஆரம்பித்தார், “ஸார்! பொழுது விடிந்தால் பொங்கல் பண்டிகை. சாமான் வாங்கிப் போடணும். குறைந்தது பத்து ரூபாயாவது ஆகும். என் தங்கை ஊரிலிருந்து வந்திருக்கிறாள். அவளுக்கு ஒரு நூல் புடவையாவது வாங்க ஆறு ரூபாய் வேண்டும்... கை மாற்றுக் கடனைத் திருப்ப 5 ரூபாய் தேவை. பால் பாக்கி எட்டு ரூபாய்..! பார்த்தீரா...? ஒன்றா, இரண்டா கவலைப்படுவதற்கு..?”. முதலியார்,“இவ்வளவுதானே..? இவ்வளவு காரியங்களைச் செய்வதற்கு இருபத்தொன்பது ரூபாய் வேண்டும் இல்லையா..?” என்றார். “ஆமாம்” என்ற பிள்ளையிடம், “இப்பொழுது ரூபாய் 29 வேண்டும் என்ற கவலையாயிருக்கட்டுமே. எதற்காக பாக்கி கொடுக்கணும். சாமான் வாங்கணும், புடவை எடுக்கணும் என்று பலவிதமாய் கவலைப்படுகிறீர்?” என்றார்.
=======================================================================================
கந்தசாமிப்பிள்ளை ஆழ்ந்த சிந்தனையுடன் தலையை நிமிர்த்தி கூரையை நோக்கிய வண்ணம் உட்கார்ந்திருந்தார். “என்ன பிள்ளைவாள்... என்ன அவ்வளவு அபாரமாய் யோசிக்கிறீர்?” என்றார் முதலியார். “பொழுது விடிந்தால் கவலைப்படுவதற்கே நேரம் போதவில்லையே... பலவிதத் தொல்லை...” என்றார் பிள்ளை. “அது என்னய்யா அப்படிப்பட்ட தொல்லை? எழுந்து வாருங்காணும்... இப்படிக் காற்றாட வெளியில் போய்விட்டு வரலாம்...” என்றார் முதலியார். “ஓய்! என்னுடைய கசலையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வரக் கூடியதல்ல...” என்றார் பிள்ளை. “பூ! அப்படிப்பட்ட கவலை என்னென்ன சொல்லும். ஒரேயடியாகக் குறைக்க வழி சொல்கிறேன்...” -முதலியார். பிள்ளை ஆரம்பித்தார், “ஸார்! பொழுது விடிந்தால் பொங்கல் பண்டிகை. சாமான் வாங்கிப் போடணும். குறைந்தது பத்து ரூபாயாவது ஆகும். என் தங்கை ஊரிலிருந்து வந்திருக்கிறாள். அவளுக்கு ஒரு நூல் புடவையாவது வாங்க ஆறு ரூபாய் வேண்டும்... கை மாற்றுக் கடனைத் திருப்ப 5 ரூபாய் தேவை. பால் பாக்கி எட்டு ரூபாய்..! பார்த்தீரா...? ஒன்றா, இரண்டா கவலைப்படுவதற்கு..?”. முதலியார்,“இவ்வளவுதானே..? இவ்வளவு காரியங்களைச் செய்வதற்கு இருபத்தொன்பது ரூபாய் வேண்டும் இல்லையா..?” என்றார். “ஆமாம்” என்ற பிள்ளையிடம், “இப்பொழுது ரூபாய் 29 வேண்டும் என்ற கவலையாயிருக்கட்டுமே. எதற்காக பாக்கி கொடுக்கணும். சாமான் வாங்கணும், புடவை எடுக்கணும் என்று பலவிதமாய் கவலைப்படுகிறீர்?” என்றார்.
--26.3,1939 விகடனில் ‘சாவி’ எழுதிய சின்னஞ்சிறு கதை
=======================================================================================
ஓரிரண்டு பதிவுகளுக்கு
முன்னர் நான் ட்ரிபிள் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டு இருப்பதைக் கவனித்தேன்.
இதொன்றும் மார்தட்டிக் கொள்கிற அளவுக்கு பெரிய சாதனை இல்லைதான். என்றாலும் இதுவரை
என்ன எழுதியிருக்கிறோம் என்ற போன வாரம் ஒருநாள் ‘பொழுதுபோகாத பொம்மு’வாக இருந்தபோது பெரும்பாலான பகிர்வுகளை மறுவாசிப்பு செய்தேன்.
எந்த ஒரு பகிர்வும் ‘இதை ஏன் எழுதினோம்?’ என்று
வருத்தப்பட வைக்கவில்லை என்கிற மகிழ்வும், சிலவற்றை இப்போது படிக்கையில் ‘நாம் தானா எழுதியது?’ என்ற வியப்பும் என்னுள் எழுந்த்து.
இந்த இரண்டுக்கும் காரணமானவர் நீங்கள். எல்லாப் புகழும் உங்களுக்கே.
உங்களனைவருக்கும் மனதின் ஆழத்திலிருந்து மகிழ்வான நன்றி!
(20ம் நூற்றாண்டு நரி என்கிற ஆங்கிலப்பட நிறுவனத்தின் லோகோ எனக்கு மிகப் பிடிக்கும் என்பதால் 200க்கு போட்ட அதே படத்தை 300க்கும் மாற்றி விட்டேன். ஹி... ஹி... ஹி...!)
(20ம் நூற்றாண்டு நரி என்கிற ஆங்கிலப்பட நிறுவனத்தின் லோகோ எனக்கு மிகப் பிடிக்கும் என்பதால் 200க்கு போட்ட அதே படத்தை 300க்கும் மாற்றி விட்டேன். ஹி... ஹி... ஹி...!)
|
|
Tweet | ||
savukku maram/ valai maram oppitu arumai sir.
ReplyDelete300 pathivu thottatharkku vazthukal.
thodarnthu eluthi 300 pathivai 3000 aka matrangal sir.
மனம் நிறைய வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வான நன்றி மகேஷ்.
Delete//கோழி இன்னும் சாகலையாப்பா?''//
ReplyDeleteஅருமையான பன்ச்..
அதுதான் நாகேஷ்!
Delete300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஇங்கே க்ளிக்கினால் கன்னடத்திலும், இங்கே க்ளிக்கினால் ஆங்கிலத்திலும் டவுன்லோடு செய்து படிக்கலாம். // எங்கே கிளிக்கினால் தமிழில் படிக்கலாம்?
ReplyDeleteஅவ்வ்வ்வ்! நானா டைரக்டர்? ரக்ஷித் ஷெட்டிக்கு மெயில் அனுப்பிக் கேளுய்யா...!
Delete//200க்கு போட்ட அதே படத்தை 300க்கும் மாற்றி விட்டேன். ஹி... ஹி... ஹி...!)
ReplyDelete// கலக்கல் வாத்தியாரே.. வாழ்த்துகள் (அப்படியே, எனக்கு "கனவு வேலைகளின்" லோகோ பிடிக்கும்.. அதுல ஒரு முன்னூறு ப்ளீஸ்.. இன்னும் ரெண்டு பதிவுல நாங்களும் எட்டறோம்..) பயனுள்ள பதிவான்னு உங்கள மாதிரி நான் திரும்பிப் பார்க்க முடியாது..ஏன்னா பெரும்பாலும் சினிமா - சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டிக்காக முதல் நாள் முதல் ஷோ பார்த்து போட்டது.. ஹிஹிஹி..
அடடே... அட்வான்ஸ் வாழ்த்துகள் ஆவி! உங்களுக்கும் ஒண்ணு தயாரிச்சிரலாம்.
Deleteநாகேஷ் சொன்ன சவுக்கு மர விளக்கம் சிறப்பு...
ReplyDelete300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே...
எனக்கும் நாகேஷின் அந்தக் கருத்து மிகவும் பிடிச்சிருந்தது டி.டி. வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி.
Delete300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.
Deleteமுதலில் முன்னூறுக்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே!
ReplyDeleteசவுக்கு மர செய்தி முன்னரே படித்திருந்தாலும் அது யார் சொன்னது என்று நினைவிலில்லை. முள் கரண்டி பன்ச் செம டைமிங்..
ஹா ஹா அது 20th Century Fox.... சூப்பரு...
ரசித்துப் படித்து வாழ்த்திய உனக்கு மனம் நிறைய நன்றி ஸ்.பை. ///அது 20th Century Fox..../// இதத்தானப்பா நானும் சொல்லிருக்கேன். ஹி... ஹி... ஹி...
Deleteமிக்ஸர் வழக்கம் போல் அருமை.... 300 பதிவா... அடடே பேஷ் பேஷ் கலக்குங்க அண்ணா...
ReplyDeleteமிக்ஸரை ரசித்து என்னை வாழ்த்திய தங்கைக்கு மனம் நிறைய நன்றி.
Deleteமிக்ஸ்சரில் இருந்தவைகள் அனைத்தும் அருமை..... 300 வது பதிவுக்கு மட்டுமல்ல உங்களின் ஒவ்வொரு பதிவுக்கும் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன் அனைத்துப் பதிவுகளுக்கும் வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteவாழ்த்துக்கள் வாத்தியார்.. இந்த இத்தனாவது பதிவுன்னு போடுறதில இருக்குற சவுரியம் இத்தனாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்ன்னு கமெண்ட் கிடைக்கும்.. அதனால எல்லா பதிவுக்கும் இத்தானாவது பதிவுன்னு போட்டுட்டா என்ன # சீரியஸா ஜிந்திசிங்க் :-)
ReplyDeleteநல்ல ஜிந்தனை! யப்பா... மிக்க நன்றி.
Delete
ReplyDeleteஓரிரண்டு பதிவுகளுக்கு முன்னர் நான் ட்ரிபிள் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டு இருப்பதைக் கவனித்தேன். இதொன்றும் மார்தட்டிக் கொள்கிற அளவுக்கு பெரிய சாதனை இல்லைதான். என்றாலும் இதுவரை என்ன எழுதியிருக்கிறோம் என்ற போன வாரம் ஒருநாள் ‘பொழுதுபோகாத பொம்மு’வாக இருந்தபோது பெரும்பாலான பகிர்வுகளை மறுவாசிப்பு செய்தேன். எந்த ஒரு பகிர்வும் ‘இதை ஏன் எழுதினோம்?’ என்று வருத்தப்பட வைக்கவில்லை என்கிற மகிழ்வும், சிலவற்றை இப்போது படிக்கையில் ‘நாம் தானா எழுதியது?’ என்ற வியப்பும் என்னுள் எழுந்த்து.//
இதை நீங்கள் சொல்லவில்லையென்றால்
நாங்கள் சொல்லியிருப்போம்
பதிவுகள் இதே விஷய ஞானத்துடன் சுவாரஸ்யத்துடன்
இளமைத் துள்ளலுடன் ஆயிரத்தைக் கடக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மனம் நிறைய வாழ்த்ய உங்ககுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deletetha.ma 7
ReplyDelete#வாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்!#அதாவது 'ஆம் ஆத்மி ' என்று சொல்லிக்கொண்டு சாதிக்கிறீர்கள் !முன்னூறுக்கு பின்னும் பலநூறு படைக்க வாழ்த்துக்கள் !
ReplyDeleteத ம 8
இந்த ‘சாதாரண மனிதனை’ வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Delete300 _வது பதிவுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteசுவாரஸ்யமான தொகுப்பு. குறிப்பாக நாகேஷின் வானொலிப் பேட்டி அருமை.
தொகுப்பை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteமுதலில்,300-க்கு வாழ்த்துக்கள் பாலகணேஷ் சார்!///மொறு,மொறு மிக்சர் அருமை.///ஒவ்வொன்றாகக் கவலைப்படுவதை விட,29-ரூபாய் வேண்டுமென்று......... ஒற்றைக் கவலை மேல் தான்,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteரசித்து வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி.
Deleteநாகேஷின் சவுக்கு- வாழை மர ஒப்பீடும்- கோழி பன்ச் சும் கலக்கல்! சாவியின் சிறுகதை கலகல! 300வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteபகிர்வை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மகிழவான நன்றி.
Deleteகிரேசி ஜோக் தவிர மற்றவை படித்திருக்கிறேன். 300 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களிடம் சிக்காத/நீங்க படிக்காத விஷயமும் உண்டோ ஸ்ரீ? வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.
DeleteNice post. Feel like meeting you soon so that I can hear many things from your mouth and hope it will be good time pass also.
ReplyDeleteஅப்படியொரு சந்தர்ப்பத்திற்காக ஆவலுடன் காத்திருக்கேன் நான் மோகன். மிக்க நன்றி.
Deleteபாலகணேஷர்,
ReplyDelete300 அடிச்சும் நிதானமாக வண்டி ஓட்டும் உங்களை வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறோம்(சுஜாதா சொன்ன நையப்புடைச்ச கிளிஷே,ஹி...ஹி)
600 அடிச்சாலும் அசராம வண்டி ஓட்ட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
# //வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். //
"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப்போல தன்னை தந்து தியாகியாகலாம்!"
அதனால் தான் வாழைக்கு அந்த சிறப்பு கிடைச்சிருக்கும் போல!
ஒரு வாழை மரத்தினை வெட்டினாலும் இன்னொரு மரத்தினை விட்டு செல்லும்ல!
வாழ்த்தறதுக்கு வயசே வேணாம். 6 வயசுப் பையன்கூட 60 வயசுத் தாத்தாவை வாழ்த்தலாம். ஆசி கூறத்தான் வயசு வேணும். - இது நான் அடிக்கடி குறிப்பிடும் விஷயம். நீங்க சொன்ன ‘நையப்புடைச்ச க்ளிஷே’ வார்த்தையை ரசிச்சு உங்க வாழ்த்தை மகிழ்வோட ஏத்துக்கறேன்.
Deleteவாழை மரம் தன் குலத்தை வளர்ப்பதால மட்டுமில்ல... தண்டுலருந்து இலை வரை அதனோட எல்லாப் பாகங்களும் மனித இனத்துக்குப் பயன்படுபவை. அதனாலும்தான் வாழைக்கு அத்தனை சிறப்பு.
நாகேஷ் என்ன ஒரு அற்புதமான கலைஞன், எதிர் நீச்சல் மாடி வீட்டு மாது போல் தான் நானும் தற்சமயம் சுழன்று கொண்டிருக்கிறேன், அந்த அப்பாவி நாகேஷின் நடிப்பு கண்ணீர் பூக்க வைத்துவிடும், நல்ல நடிகன். கடைசி வரை நல்ல மனிதனாக வாழ்ந்து அழியா புகழுடன் மறைந்து விட்டார்
ReplyDelete300 பதிவு. பால கணேஷ் ஜீ கொஞ்சம் பொறாமையாக உள்ளது, நேற்று தான் பிள்ளையார் சுழியே போட்டுள்ளேன், காலம் மெதுவாகத் தான் கனிந்தது என்றதை நம்ப முடியவில்லை. இமயம் தொட வாழ்த்துக்கள்.
பொறாமை வேண்டாம் தம்பீ... நானும் ஆரம்பக் கட்டங்களில் உன் போல பிரமிப்புடன்தான் எல்லோரையும் பார்த்தேன். எந்த விசேஷ திறமையும் இல்லாத என்னாலேயே இத்தனை தூரம் பிரயாணிக்க முடிகிறதெனில் உங்களாலும் நிச்சயம் முடியும். ஒரு காலத்தில நானும் மாடிப்படி மாதுதான். நிலைமை நிச்சயம் மாறுமப்பா.
Deleteநாகேஷை ரசித்த. என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
300 அடிச்சும் அசராம நிக்கும் அண்ணனுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபார்ரா...
Deleteதங்கையின் குசும்பை!
ஹா... ஹா... ஹா... தங்கச்சி சொல்றது கிரிக்கெட்ல நாட் அவுட் பேட்ஸ்மேனா இருக்கறதை மாதிரி அசராம அடிக்கறதை. நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க அஜிஸ்...! வாழ்த்திய உனக்கு மிக்க நன்றிம்மா.
Deleteவருங்காலத்தில் 500வது பதிவு எழுத்தப்போகும் அண்ணன் பாலகணேஷ் வாழ்க.
ReplyDeleteஹாலிவுட்டில் படம் வருவதற்கு முன்னரே ஒன்லைனர் சொல்லிவிடுவார்கள். நம்ம ஊரில் அப்படிச் சொல்ல பயம்.
நாகேஷ் சொன்னது ஏற்கனவே படிச்சது. இருப்பினும் மறுபடியும் படிக்க பிரமிப்பு.
ஏன் அந்த கான்பிடன்ஸ் இங்க இல்லன்றதுதான் எனக்கும் புரியல..நாகேஷை ரசிச்சு என் 500க்கு இப்பவே வாழ்த்துச் சொன்ன தம்பி கு.பி.க்கு மனம் நிறைய நன்றி.
Deleteபாலகணேஷர்,
Delete//ஏன் அந்த கான்பிடன்ஸ் இங்க இல்லன்றதுதான் எனக்கும் புரியல..//
இது எப்படி புரியலனு சொல்றிங்க?
ஹாலிவுட்ல ஒரே ஒன் லைனர் வச்சு , மேக்கிங் , பிரசென்டேஷன்ல டிபரன்ஸ் காட்டி பல படங்கள் எடுப்பாங்க அதனால் அந்த கான்பிடனாஸ்.
டெர்மினேட்டர் படத்துக்கும் டிரான்ஸ்ஃபார்மர் படத்துக்கும் ஒன் லைனர் பார்த்தா ஒன்னாத்தான் இருக்கும்,ஆனால் திரையில வேற மாதிரி காட்டுவாங்க.
ஏன் ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன் (கிரைப்டான் கிரகவாசி,சாமானியன் என சொல்ல முடியாது), பேட்மன் கதை எல்லாம் ஒரே டைப் தான், ஒரு சாமானியனுக்கு அதீதசக்தி கிடைக்கப்பெற்றால் அதை வச்சு சமூகத்துக்கு என்ன செய்வான்? அவன் ஏன் அப்படி செய்றான் என்பதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு :-))
ஆனால் மேக்கிங் , பிரசென்டேஷன் என வித்தியாசம் காட்டியிருப்பாங்க.
நம்ம ஊர்ல அட்டைக்காப்பி அடிப்பாங்க ,அதனால் வெளியில் சொல்லிக்கிறதில்லை அவ்வ்!
இன்னும் சொல்லபோனால் ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் ஏற்கனவே "நாவல்களாக" (காமிக்ஸ்)வந்து புகழ்ப்பெற்றவற்றின் அடிப்படையிலே ,எனவே கதைய மூடி வச்சு செய்யனும் என்ற அவசியமே இல்லை.
பெரும்பாலான படங்களில் "பேஸ்டு ஆன் திஸ்..." என வெளிப்படையாக கிரெடிட் கொடுப்பாங்க, நம்ம ஊருல திருடி எடுப்பதால் 'ரகசியம்" காக்கிறார்கள்!!!
# நம்ம ஊரில யாரும் இன்னும் சினிமா எடுக்க கத்துக்கவே இல்லைனு சொன்னால் அடிக்க வந்தாலும் வருவீங்க அவ்வ்!
புரிகிறது வவ்வால்... அடிக்கவர மாட்டேன்!
Deleteவாழ்த்துகள்... மூன்றுக்கு பக்கத்தில் பல நூறு பூஜ்ஜியங்கள் இணைய!
ReplyDeleteஇன்றைக்குத்தான் தெரிந்தது ரவீந்தரநாத் டாகூருக்கு எப்படி இவ்வளவு அதிகமாக முடிவளர்ந்தது என்று!
மொறு மொறு மிக்சர் அனைத்தையும் ரசித்தேன்
என்னைக் கவர்ந்த அந்த 1939ன் தாகூர் விளம்பரத்தை யாரும் கவனிக்கலையேன்னு மனக்குறையோட இருந்தேன். அதை தீர்த்து வெச்சு, மிக்ஸரை ரசிச்சதோட, மிக தாராள மனசோட பல நூறு பூஜ்யங்கள் இணைய வாழ்த்திய பிரதருக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.
Deleteமிக்சர் நல்லா என்னுடைய மாலை டீக்கு கம்பெனி கொடுத்தது... 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்ஸரை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.
Deleteநான் ரொம்பவே ரசித்த மிக்சர்! 300 பதிவுகள் - அனைத்தும் அருமை என்பது நீங்கள் உண்மையிலேயே பெருமைப் படவேண்டியது தான்! வாழ்த்துக்கள். நாகேஷ் - என்ன ஒரு கலைஞன்! - ஜெ.
ReplyDeleteநாகேஷின் திரைப்பட நடிப்பையும், அவரைப் பற்றிய செய்திகளையும் தேடிப் பிடித்து படிக்கையில் உங்களின் உணர்வுதான் எனக்கும் ஜெ. மிக்ஸரை மிகவே ரசித்தீர்கள் என்பதில் மனமகிழ்வுடன் உங்களுக்கு என் நன்றி.
Deleteமேலும் மேலும் புகழடைய வாழ்த்துக்கள் கணேஷ் ஐயா.
ReplyDeleteபதிவு அனைத்தும் அருமை. அதிலும்..
““ஆமாம்” என்ற பிள்ளையிடம், “இப்பொழுது ரூபாய் 29 வேண்டும் என்ற கவலையாயிருக்கட்டுமே. எதற்காக பாக்கி கொடுக்கணும். சாமான் வாங்கணும், புடவை எடுக்கணும் என்று பலவிதமாய் கவலைப்படுகிறீர்?” என்றார்.“
இந்த இடம் எனக்கு மிகவம் பிடித்திருந்தது.
பகிர்வை ரசித்து என்னையும் வாழ்த்திய அருணாவுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteமுன்னூறுக்கு முன்னேறிய கணேஷ் அவர்களுக்குவாழ்த்துக்கள்.
ReplyDeleteஎழுதுவது கூட கடினமல்ல. அதை சுவாரசியமாக்கும் தேர்ந்த பத்திரிகை ஆசிரியரின் எடிட்டிங் திறமை உங்களுக்கு உள்ளது. அதனால் உங்கள பதிவுகள் பரிமளிக்கின்றன.
வெள்ளிகிழமை அன்று உங்களை அழைத்தேன் அல்லவா . அந்த விழாவில் மறு வாசிப்பில் தேவன் என்ற தலைப்பில் கிரேசி மோகன் பேசினார். கலக்கிவிட்டார் கிரேசி.
அதைப் பற்றிய பதிவு என் வலைப் பக்கத்தில் விரைவில்
மனமேயில்லாமல் நான் மிஸ் செய்த நிகழ்ச்சிகளில் ஒன்று அது. படிக்க ஆவலோட வெயிட்டிங். கூர்ந்து கவனித்து நான் எடிட்டிங் செய்து வெளியிடுவதை சொன்ன உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.
DeleteVaalthukkal sir, innum niraiya pathivugal eluthi engalai sirikka vaiyungal....... ungalathu pathivugal anaithum pidikkum enakku !
ReplyDeleteஎன் பகிர்வுகள் அனைத்தும் பிடிக்குமென்று கூறி மகிழ்வு தந்த சுரேஷ்குமாருக்கு மனம் நிறைய நன்றி.
Deleteஎல்லாமே சூப்பர் சார். 300 க்கு மேல, இன்னும் நெறைய உங்ககிட்ட இருந்து எதிர் பாக்குறோம்.. வாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteநிறைய எதிர்பார்க்கிறோம் என்று சொல்லி என் பொறுப்பைக் கூட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteமின்னி மறையும் மின்னல் அல்ல , தங்கள் பதிவு! அது நின்று நிலவும் கதிரவன்!
ReplyDeleteநாளும் வரும்! எந்நாளும் வரும்! வாழ்க!
கவிதை நடையில் கருத்துச் சொல்லி ஊக்கம் தந்த புலவர் ஐயாவுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
மிகவும் இரசித்தேன்.
ரசித்துப் படித்துக் கருத்திட்ட முனைவர் ஐயாவுக்கு மனம் நிறைய நன்றி.
Deleteநல்ல மிக்சர். 300-வது பதிவு - வாழ்த்துகள் வாத்யாரே....
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.
Deleteநகைச் சுவை எடுத்துக் காட்டுகள் அருமை. எல்லாமேஸ்பொண்டேனியஸாக வந்தவை/ முன்னூறுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteநகைச்சுவையை ரசித்து என்னைப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி ஐயா.
Deleteமுந்நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கணேஷ். தொடர்ந்து நிதானமாக பலதரமான பல தரமான படைப்புகளை வெளியிடும் தங்கள் திறமைக்கும் எழுத்துவன்மைக்கும் என் பாராட்டுகள். திரும்பிப் பார்க்கும்போது மனநிறைவைத் தரும் எழுத்துதானே உண்மையான படைப்பாளியின் பலம். அந்த வகையில் சிறந்த படைப்பாளி தாங்கள். தொடர்ந்து பல நூறு பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாகேஷ் அவர்களின் பேட்டியில் உள்ள தன்னடக்கம், சாவி அவர்கள் எழுதிய சின்னஞ்சிறுகதையில் உள்ள யதார்த்தம், தாகூர் என்ற நிறுவனம் தயாரிக்கும் கூந்தல் வளர்ச்சிக்கான குந்தலைன் தைல விளம்பரத்துக்கு தாகூரை பயன்படுத்திய சமயோசிதம், கிரேசி மோகனின் டைம்லி ஜோக் என அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி கணேஷ்.
அதேதான்... அதே தாங்க... தாகூர் நிறுவனத்தின் சமயோசிதத்தை வியந்துதான் அந்த விளம்பரத்தைப் போட்டேன் அதையும் மத்த எல்லா அம்சங்களையும் ரசித்து, என்னை நிறைவாக வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி கீதா.
ReplyDeleteஅன்பு கணேஷ், முன்னூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இனியாவது உங்கள் பதிவுகளைப் படிக்கவேண்டும். அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது.
ReplyDeleteஎண்ணிக்கை எல்லாம் நமக்கு ஒரு பெருமையாண்ணேன் ? Anyway எல்லாரும் வாழ்த்தும் போது நான் வாழ்த்தாட்டி enemy ஆனாலும் ஆகிடுவேன் :)
ReplyDeleteவழமை போலவே மிக்சர் மொறு மொறு .
கிரேசி ஜோக் தான் புரியலை . அது யாரு ஏ.ஆர்,எஸ் ?
கிருகப் பிரவேசம் - தமிழ் வார்த்தையா இது ? உள்ளார்ந்த அர்த்தம் என்ன ?
//என்னுடைய கசலையெல்லாம் // கவலையெல்லாம் ?
ஆங் ... அண்ணேன் அந்த குந்தலைன் தைலம் எங்கே கிடைக்கும்னு கேட்டு , நேக்கு ஒரு புட்டி அனுப்பி வச்சீங்கன்னா ரெம்பப்புண்ணியமாப் போகும் ...
முன்னூறு. முன்னேறு.
ReplyDeleteலேட்டா வந்துக்கினேன் வாத்யாரே...! இர்ந்தாலும் மிச்சரு சூப்பரா கீதுபா...!
ReplyDeleteமுன்னூறு மில்லி போட்டுக்கினதுக்கு வாய்த்துக்கள்பா...!
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
300-க்கு வாழ்த்துக்கள், முன்னதாகவே!
ReplyDelete(அப்பவும் வருவோம்... இறை நாட்டம்)
மைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவுகளை தற்போது படித்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
300-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteஒரு சின்ன ஹெல்ப். நான் இப்பதான் பதிவு எழுத தொடங்கி இருக்கேன். join this site (நட்பு வட்டம்). என் பக்கம் தெரிய மாட்டேங்குதே. அதற்கு என்ன செய்யனும்?
ReplyDelete300 - வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக்ஸர் அருமையாக இருக்கிறது. நன்றி,
ReplyDelete