பேரன்(பேத்தி?)புடையீர்...
நிகழும் மன்மத ஆண்டு புரட்டாசி 24ஆம் நாள் உத்திர நட்சத்திரமும் சதுர்த்தசியும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணி முதல்...
என்னங்க... உங்களை ஏதோ என் வீட்டுக் கல்யாணத்துக்கோ காதுகுத்துக்கோ அழைக்கப் போறேன்னு நினைச்சீங்களா... இல்லவே இல்லீங்க. அக்டோபர் 11ம் தேதி ஞாயித்துக் கிழமை காலை 9 மணியில் துவங்கி கோலாகலமாக (பெப்ஸிகலமாக?) நடக்கவிருக்கும் நம்முடைய பதிவர் சந்திப்பைத் தூய தமிழ்ல சொல்லி அழைச்சேன். அவ்வளவுதேங்.
புதுக்கோட்டை நண்பர்கள் முழு மூச்சாகக் களத்துல இறங்கி தனித் தனிக் குழுக்களா அமைச்சுகிட்டு, ஒவ்வொரு அம்சத்தையும் பாத்துப் பாத்து திட்டமிட்டுக்கிட்டிருக்கற இந்த நம்முடைய விழாவிற்கான அழைப்பிதழ் இதோ இங்கே உங்களுக்காக....
பிறகென்ன... நம்ம வீட்டுத் திருவிழாவுல நீங்க அனைவரும் தவறாம கலந்துக்கிட்டு அதை என்னென்னிக்கும் நினைவில் நிற்கிற ஒரு நிகழ்வாகச் செய்துவிட வேண்டும் என்று இருகரம் கூப்பி, மகிழ்வுடன் வேண்டிக்கறேனுங்க. விழா அரங்கில் சந்திக்கலாம்.
|
|
Tweet | ||
அண்ணா!! உங்க ஸ்டைல அட்டகாசமாக இருக்கே பதிவு!!! விழாக்குழுவில் கைகோர்த்தமைக்கு புதுகை பதிவர் குழு சார்பாக பல கோடி நன்றிகள்:))
ReplyDeleteநன்றி! புதுக்கோட்டையில் சந்திப்போம்.
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன்...
ReplyDeleteஉங்கள் பாணி தனி பாணி..... அப்புறம் புதுக்கோட்டையில் தனி தனி குழுவாக அமைத்திருக்கிறார்களாம் அதுல ஒரு குழு பூரிக்கட்டையோடு நான் வந்தால் என்னை அடிக்கவென்றே ரெடியாக இருக்கிறதாமே அதைப் பற்றி ஒரு வரி கூட நீங்கள் எழுதவில்லையே
ReplyDeleteஅட! அப்ப நீங்க வர்ரீங்க!! அப்படிச் சொல்லுங்க அதென்னா வந்தால்...ப்ரொடொக்ஷன் கொடுக்க நிறைய நண்பர்கள், சகோதரர்கள் நாங்க சரிசமமா இருக்கோமே தமிழா...
Deleteகீதா: ஹ்ஹ்ஹ்ஹ் உண்மைதான்...வாங்க அப்படியாவது அந்த அன்பான பூரிக்கட்டை அடிகளை உங்கள் சகோதரிகளிடமிருந்து பெறுவதற்காகவாவ்து வாங்க...
ஆஹா! உங்க வழியே தனி வழி அண்ணா. பேரன்(பேத்தி)புடையீர், பெப்சிகலமாக .. எப்டிண்ணா?
ReplyDeleteசரி, தேநீர்கலமாகக் கொண்டாடும்போது நண்பர்கள் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் , சென்ற ஆண்டு தேநீரும் வடையும் கையுமாக பேசிக்கொண்டிருந்தோம் :)
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
ReplyDeleteஎப்படித்தான் வித்தியாசமா அசத்தலா
ReplyDeleteஉடனே யோசிக்கிறீங்களோ
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கோ
பொழைச்சிக்கிறோம்
வாழ்த்துக்களுடன்...
விழா அரங்கில் சந்திப்போம்
ReplyDeleteநன்றி
ஆஹா அருமை ...வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..
ReplyDeleteசெம ஸ்டைல் வாத்தியாரே! முகூர்த்த நேரத்துக்கு முன்னாடியே வந்துருவோம்ல....விழாவில் சந்திப்போம்....
ReplyDeleteகலக்கல் !! வந்தும் எழுதுங்க , நாங்க படிச்சு தெரிஞ்சுப்போமே :)
ReplyDeleteஅண்ணா ஒரு தொடர்பதிவு! தொடருங்கள் ப்ளீஸ் http://makizhnirai.blogspot.com/2015/11/my-wish-list.html
ReplyDelete2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!