தீபாவளித் திருநாள் என்கிற தீபஒளித் திருநாள் வெகு அருகாமையில் வந்துவிட்டது. ஜஸ்ட் 45 மணி நேரங்கள்தான் நமக்கும் தீபாவளிக்கும் இடையில் இப்போது. ஜாதி, மத பேதமில்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த மகிழ்வான திருவிழாவைக் கொண்டாட கோலாகலமான (அ) பெப்ஸிகலமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் மகிழ்வான, இதயம் நிறைந்த, இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
சின்ன வயதில் அதிகாலையில் எழுந்து புத்தாடை எப்போது தருவார்கள், பட்டாசு எப்படா வெடிக்கலாம் என்று ஆர்வமாய், வெறியாய் காத்திருந்த தருணங்களும், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தீபாவளிக்கான கவுண்ட் டவுனை ஆரம்பித்து உற்சாகமாய்க் காத்திருந்ததும் நினைவில் நிழலாடுகின்றன. அந்த மாணவப் பருவ வாழ்க்கையும், தீபாவளிகளும் மறக்க முடியாதவை.
தீபாவளியைக் கொண்டாடி முடித்த கையோடு நாமெல்லாரும் சந்தித்து மதுரையில் மற்றொரு தீபாவளியைக் கொண்டாட இருக்கிறோம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதற்கும் தயாராகி விட்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். 26ம் தேதியன்று நாம் சந்திக்கும் நாளில் நிகழவிருக்கும் நிகழ்வுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் (பெரும்பாலும் இருக்காது) அதுவும் பின்னர் பகிரப்படும்.
இந்த, நம்முடைய இரண்டாவது தீபஒளித் திருநாளையும் சிறப்பிக்க தவறாமல் வந்துடுங்க மக்களே..!
பி.கு.: சென்ற ஞாயிற்றுக்கிழமை என் சரிதாயணம் + நான் இருக்கிறேன் அம்மமா புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அது பற்றிய விவரங்களும், புகைப்படங்களும் என் நினைவுக்காக பதிவாக வெளியிட எண்ணியிருந்தேன். தீபாவளி முடிந்ததும் வெளியிடுகிறேன்.
|
|
Tweet | ||
பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!
ReplyDeleteதங்கள் நூல்களின் வெளியீட்டுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்
பதிவர் தீபாவளியில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
தம 4
ReplyDeleteஅந்த மாணவப் பருவ தீபாவளியை மறக்க இயலுமா ...நண்பர் கணேஷ்..
ReplyDeleteநீங்காத நிழலாகிப் போனது ....
பதிவர் சந்திப்பு தீபாவளியில் அனைவரையும் சந்திக்கும்
தருணத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்
தீபாவளி பீவரை விட பதிவர் சந்திப்பு தான் இங்க எல்லா பக்கமும் களைகட்டுது அண்ணா! உங்களுக்கும், அன்பு குடும்பத்தார்க்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா!
ReplyDeleteபுக் ஸ்டாலும் உண்டு... அதனால் தங்களின் நூல்களையும் கொண்டு வாருங்கள் வாத்தியாரே...
ReplyDeleteவாழ்த்துக்கள். எனது கல்லூரி ஆசிரியர் ( என் ஆசிரியர் ) இங்கு சிறப்புறை ஆற்றுகிறார் என்பதை அறிந்து மிக சந்தோஷம். அவர் எனக்கு ஆசிரியராக ஒரு செமஸ்டர் வந்தார்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஜமாய்ச்சிடலாம் வாத்தியாரே
ReplyDeleteநீங்கள் சொல்வது போல, இப்போது. ஜாதி, மத பேதமில்லாமல் நாடு முழுவதும் தீபாவளியை எல்லோரும் கொண்டாடுவதைக் காணமுடிகிறது.
ReplyDeleteசகோதரர் மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
த.ம.6
எக்சைடட் :-)
ReplyDeleteஇரன்டு திருவிழாக்களும் சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.
தீபாவளி நன்நாளுக்கும், பதிவர்விழா தீபாவளிக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுத்தக வெளியீட்டிற்கும் நல்வாழ்த்துக்கள்!!
பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துகள்......
ReplyDeleteஅனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteமோடி வராராமுல்ல?
ReplyDeleteபுத்தக வெளியீடு பற்றி திரு துளசிதரன் பதிவில் வாசித்து ரசித்தேன்.
ReplyDeleteஇந்தமுறை பதிவர் திருவிழாவை மிஸ் செய்யப் போகிறேன். வருத்தம் தான். ஆனாலும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
அன்புள்ள அய்யா திரு.பால கணேஷ்,
ReplyDeleteவணக்கம். தீபாவளி திருவிழா நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என் சரிதாயணம் + நான் இருக்கிறேன் அம்மமா புத்தக வெளியீட்டு சிறப்படைந்ததற்கு வாழ்த்துகள்.
வலைப்பதிவர் திருவிழாவின் நிகழ்ச்சி நிரல்
கண்டு மகிழ்ச்சி.
சந்திப்போம்...சிந்திப்போம்!
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
பதிவர் திருவிழா பயன்மிகு திருவிழாவாக அமைய வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஎன்னால் கலந்துகொள்ள இயலவில்லையெனினும் பங்கு பெறுகிற அத்தனை பதிவர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளூம்.
பால கணேஷ் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துக்கள் உங்களுக்கும் ..
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ .....!
ReplyDeleteதீபாவளி நல் வாழ்த்துக்கள் சார் பதிவர் திருவிழா சிறக்கவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் அண்ணா...
ReplyDeleteதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
அலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html
நன்றி
மதுரை வலைப்பதிவர் விழாவில்
ReplyDeleteதங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.