Wednesday, January 4, 2012

நானும் ஒரு கொலைகாரனும்-1

Posted by பால கணேஷ் Wednesday, January 04, 2012
ரு மனுஷனுக்கு நேரம் சரியில்லைன்னா அது எப்படியெல்லாம் சோதனைகளைக் கொண்டு வருது? சனிப் பெயர்ச்சில என்னோட கிரக நிலை சரியில்லைன்னு போட்டிருந்துச்சுன்னு சரிதா சொன்னப்ப, ஜோசியத்தை நம்பற அவளைக் கிண்டலடிச்சேன். ஆனா... எனக்கு வந்த சோதனை இருக்கே... அப்படி என்னய்யா நடந்துச்சுன்னு கேக்கறீஙகதானே... சொல்றேன்:

காலை நேரம். அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த நேரம்... காலிங் பெல் ஒலித்தது. சென்று கதவைத் திறந்தேன். வெளியே... கண்ணியமான, விலையுயர்ந்த .உடை அணிந்து நின்றிருந்த அந்த இளைஞன், ‘‘ஸார், நீங்கதானே கணேஷ்?’’ என்றான். வெளியே அவன் வந்த ஸாண்ட்ரோ கார் பளபளப்பாக நின்றிருந்தது.


‘‘ஆமாம். உள்ள வாங்க...’’ என்றேன். உள்ளே வந்ததும் அவனை சேரில் அமரச் சொல்லிவிட்டு, அவனை ஏறிட்டேன். சராசரி உயரம், வட்ட முகம், பிரபுதேவாவுக்கு இருப்பது போல ஸ்ப்ரிங் முடி. பஃப்களில் பார்க்கும் இன்றைய இளைஞர்களை ஒத்திருந்தது அவன தோறறம். ‘‘யார் நீங்க? என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’’ என்று கேட்டேன்.

‘‘ஸார்! ‘மின்னல் வரிகள்’ன்ற பேர்ல ப்ளாக் எழுதறது நீங்கதானே...?’’

‘‘ஆமாங்க... நான் யார்ட்டயும் அதைச் சொன்னது கிடையாதே. எப்படி என்னைக் கண்டுபிடிச்சீங்க?’’

‘‘நான் பக்கத்துல கே.கே.நகர்லதான் இருக்கேன் ஸார். ப்ளாக்ல படிக்கும் போது உங்க ஃபோட்டோவை பார்த்திருக்கேன். இந்த ஏரியாவுல ஒரு நாள் கிராஸ் பண்றப்ப நீங்க வீட்டுக்குள்ளருந்து வெளில வந்து ஸ்கூட்டர்ல போறதப் பாத்தேன். நீங்கதான்னு தெரிஞ்சுககிட்டேன். அது இப்ப உதவியா இருக்குது. நீங்க எழுதற மேட்டர்ஸ் நிறையப் படிச்சிருக்கேன். நல்லா எழுதறீங்க ஸார்...’’ என்றான். என் எழுத்தைப் படித்துவிட்டு ஒருவன் வீடு‌‌ தேடி வந்து பாராட்டுவதாவது! உள்ளே திரும்பி சரிதாவைப் பெருமையாகப் பார்த்தேன். ‘‘ரொம்ப நன்றி ஸார்!’’ என்றேன்.

‘‘ஸார், உங்களால எனக்கு ஒரு ஹெல்ப் ஆகணும். அதுக்குத்தான் வந்தேன்....’’

‘‘சொல்லுங்க. என்னால முடிஞ்சதுன்னா கண்டிப்பா பண்றேன்...’’

‘‘ஸார், நான் இப்ப சொல்லப் போறது என்னோட லைஃப்ல நடந்த விஷயங்கள். அதை நீங்க முழுசாக் கேட்டாதான் உங்ககிட்ட நான் ஹெல்ப் கேக்க முடியும். என்னோட கதைய நீங்க உங்க ப்ளாக்ல வேணும்னாலும் எழுதலாம். எனக்கு ஆட்சேபணையில்ல...’’

அடடா... ஆடு தானேவந்து பிரியாணியாகிறேன் என்கிறதே... பதிவுக்கு மேட்டர் தேத்த அலையும் நமக்கு இப்படி ஒரு சான்ஸா? மகிழ்ச்சியாக, ‘‘எழுதறேன் ஸார். முதல்ல உங்க பேர் என்ன சொல்லுங்க...’’ என்றேன்.


‘‘என் பேர் லட்சுமணன். இப்ப ராமன் ஸார்...’’

‘‘அடிக்கடி பேர் மாத்திக்குவீங்களா நீங்க?’’

‘‘இல்ல ஸார். ஒரு சின்னத் தப்புப் பண்ணினதுக்காக இப்ப என்னை போலீஸ் தேடிக்கிட்டிருக்கு...’’

‘‘போலீஸா? போலீஸ் தேடற அளவுக்கு என்ன தப்புப் பண்ணினீங்க?’’

‘‘கொலை பண்ணிட்டேன் சார்...’’ என்றான் கூலாக.

நான் திடுக்கிட்டேன். ‘‘கொக்.... கொக்.... ‌கொக்... கொலையா?’’ என்றேன் துண்டுதுண்டாக. ‘ஙே’ என்று விழித்தேன்.

‘‘அதுக்கு ஏன் சார் கோழி மாதிரி கூவறீங்க? நான் சொல்ற மேட்டரை கவனமாக் கேட்டு உங்க ப்ளாக்ல எழுதுங்க...’’

‘பாவி! கொலை பண்ணுறது சின்னத் தப்பாடா உனக்கு?’ என்று மனதிற்குள் எழுந்த கேள்வியை அடக்கிக் கொண்டு உதறலுடன் சொன்னேன்: ‘‘ஸார், நான் கொஞ்சம் பயந்த சுபாவம். நீங்க வேணா ‘நாஞ்சில் மனோ’ன்னு ஒருத்தர் எழுதறார். நல்ல தைரியசாலி! அவரைப் பாருங்களேன்...’’

‘‘ஹலோ, நானும் ப்ளாக்லாம் படிக்கறவன்தான். எனக்கு உள்நாட்டில எழுதறவங்கதான் வேணும்...’’

‘‘அப்ப ‘சி.பி.செந்தில்குமார்’னு நம்ம ஃப்ரெண்டு ஈரோடுலருந்து எழுதறாரு. ரொம்பப் பிரபலம். நிறைய ஃபாலோயர்ஸ் உண்டு அவருக்கு. கில்மாப் படங்களுக்கு விமர்சனம் தவிர அப்பப்ப உண்மைக் கதைகளும் எழுதுவார். அவரை வேணாப் பாருங்களேன்...’’ என்றேன். மனதிற்குள் ‘ப்ளாக்ல இருக்கற ஃபோட்டோவை முதல்ல எடுத்துரணும்டா கணேஷ்!’

‘‘சும்மாருங்க சார்.. நான் சொல்றதை எழுதறதுக்கு ஃபேமஸ் ஆட்கள் வேண்டாம்....’’

‘‘அப்படியா ராமன் ஸார்? அப்ப ‘ராஜி’ன்னு நம்ம தங்கச்சி ப்ளாக் எழுதிட்டிருக்காங்க. உங்க கார்ல போனா மூணு மணி நேரத்துல பாத்துடலாம்...’’

‘‘பொம்பளைங்கட்ட சொல்ல நான் விரும்பலை. உங்களை என்ன கொலையா பண்ணச் சொன்னேன். கேக்கத்தானே ‌சொன்னேன்? கேளுங்க ஸார்...’’ என்றான் அதட்டலாக.

‘விட்டால் நம்மைக் குத்தி விடுவானோ’ என்று உள்ளே ஒரு எண்ணம் ஓட, நடுங்கியபடி அதை வெளிக்காட்டாமல் , ‘‘சரி, கேக்கறேன். சொல்லுங்க ஸார்...’’ என்றேன். (வேற வழி?)

அவன் பேசுவதற்கு வாயைத் திறந்த நேரம்... சரிதா ட்ரேயில் இரண்டு காபிக் கோப்பைகளுடன் வந்தாள். ‘‘காபி எடுத்துக்கங்க...’’ என்றாள். நான் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டேன். அந்த ராமன், ‘‘எனக்கு காபி வேணாம். ஹாட் வாட்டர் தாங்க மேடம்...’’ என்றான்.

‘‘அதைத்தான் காபின்னு சொல்லித் தர்றா. சும்மா குடியுங்க...’’ என்றேன். சரிதாவின் முகத்தில், ‘உள்ள வருவில்ல... அப்ப இருக்கு உனக்கு’ என்ற வரிகள் தெரிந்தன. அவள் திரும்பிச் சென்றபின் அவன் பேசத் தொடங்கினான்:


‘‘என் அண்ணன் ராமனும், நானும் இரட்டைப் பிறவிகள். எனக்கு கால் க்ட்டை விரலில் ஒரு மச்சம் உண்டு என்பதைத் தவிர இருவருக்கும் வேறு எந்த உருவ வித்தியாசமும் கிடையாது. இந்த மாதிரி இரட்டைக் குழந்தைகளை பெற்றவர்கள் மட்டும் சரியாக அடையாளம் கண்டு கொள்வார்கள். பள்ளிக்கூடத்துலயும் சரி, உறவினர்கள் மத்தியிலயும் சரி, யாரு ராமன், யாரு லட்சுமணனனு ஒரு குழப்பம் இருந்தது. என் அப்பா நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது என் கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு கட்டி வைத்திருந்தார் மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காக.

அதென்னமோ தெரியல... ட்வின்ஸ்களோட பேரண்ட்ஸ் எல்லாருமே ரெண்டு‌ பேருக்கும் ட்ரெஸ்லருந்து, ப்ரஷ் வரைக்கும் ஒரே மாதிரிதான் வாங்கறாங்க. எங்கப்பாவும் அப்படித்தான் செஞ்சார். நாங்கள் வளர்ந்து வாலிபர்களான பிறகு நான் சொன்ன யோசனையின் படி ராமன் மீசை வளர்க்காமல் இருந்தான். நான் மீசை வைத்திருந்தேன். இதுதான் எங்களை அடையாளம் கண்டுகொள்ள வழியாக இருந்தது. நாங்க ஒற்றுமையா பாசமுள்ள அண்ணன் தம்பிகளா வாழணும்னு ஆசைப்பட்ட எங்கப்பா எங்களுககு ராமன் - லட்சுமணன்-னு பேர் வெச்சார்...’’

‘‘இவ்வளவு உருவ ஒற்றுமையுள்ள நீங்க அண்ணனுக்கேத்த தம்பியா இருந்திருப்பீங்க...’’

‘‘யார் சொன்னது? உருவம்தான் ஒற்றுமையா இருக்குமே தவிர, நாங்க ரெண்டு பேரும் நேர்எதிராத்தான் இருந்தோம். நான் கொலை செஞ்சேன்னு சொன்னேனே.... அது எங்கண்ணன் ராமனைத்தான்’’ என்று ஒரு வெடிகுண்டை வீசினான் அவன். நான் அதிர்ந்து போனேன்.
-அடுத்த பகுதியில முடிச்சிரலாம்...

ஒரு பின்குறிப்பு: இந்தப் பதிவில் வெளியிட்டுள்ள என் படங்களைப் பார்த்து ‘கொலவெறி’யுடன் கம்பு, கட்டைகளை எடுப்பவர்கள் நண்பர் ‘நாஞ்சில் மனோ’வின் ப்ளாக்கில் சென்று வீசும்‌படி கோரப்படுகிறார்கள். ஐடியா உபயம் அவ்விடம்தான்.

ஒரு மகிழ்ச்சி: நான் வலையுலகில் எழுதத் துவங்கி நான்கு மாதங்கள் முடிந்திராத நிலையில் சென்ற ஆண்டின் ‌வலைப்பதிவர் பட்டியலில் தமிழ்மணம் திரட்டி எனக்கு 55வது இடம் கொடுத்துள்ளது.

ஒரு நன்றி நவிலல்: இதற்கு முழுமுதற் காரணம் உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவுமே. திரட்டியின் மதிப்பைவிட மேலாக உங்கள் இதயங்களில் எனக்கு ஒரு இடம் தந்துள்ள நட்புகள், உறவுகளான உங்கள் யாவருக்கும் என் கைகுலுக்கல் + இதயம் நிறைந்த நன்றிகள்!

ஒரு வருத்தம்: எனக்கு வலைக்கணக்கைத் துவக்கித் தந்து, ஆரம்ப நாட்களில் திரட்டிகளில் இணைத்து வழிகாட்டியாக .உடனிருந்த நண்பர் ‘சேட்டைக்காரன்’ இப்போது வலையுலகில் இல்லாதது. இப்போதும் அவரை எழுதச் சொல்லி நிறைய இமெயில்களும், போன்களும் வருவதாகச் சொன்னார். ‘‘நீங்கதான் பாக்கறீங்களே... என் மனநிலையும், உடல்நிலையும் சரியில்லாத நிலையில நான் எப்படி எழுத முடியும்? எல்லாருக்கும் என் நன்றியையும், வலையுலகில் நான் செயல்பட முடியாத நிலையையும் தெரிவிச்சுடுங்க’’ என்றார். ‌இதன் மூலம் தெரிவித்து விட்டேன்!

77 comments:

  1. :):) வரேன் வரேன் முழுக்க வாசிக்கல இன்னும்.

    ReplyDelete
  2. @ ஷைலஜா said...

    முதல் வருகைக்கு வெல்கம்! மெதுவா படிச்சுட்டு வாங்க, காத்திருக்கேன்...

    ReplyDelete
  3. நீங்க வேணா ‘நாஞ்சில் மனோ’ன்னு ஒருத்தர் எழுதறார். நல்ல தைரியசாலி! அவரைப் பாருங்களேன்...’’//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் இல்லை நான் இல்லை, நான் யாருன்னு எனக்கே தெரியாது ஒடுலேய் மனோ ஒடுலேய் வசமா பலிகடா ஆக்குறாரு திரும்பி பார்க்காம ஓடு மக்கா......

    ReplyDelete
  4. அப்ப ‘சி.பி.செந்தில்குமார்’னு நம்ம ஃப்ரெண்டு ஈரோடுலருந்து எழுதறாரு. ரொம்பப் பிரபலம். நிறைய ஃபாலோயர்ஸ் உண்டு அவருக்கு. கில்மாப் படங்களுக்கு விமர்சனம் தவிர அப்பப்ப உண்மைக் கதைகளும் எழுதுவார். அவரை வேணாப் பாருங்களேன்..//

    இது அவனுக்கு தெரிஞ்சா ஈரோட்டை விட்டு நேப்பாளம் ஓடிருவான் பாருங்க....ஒரே ஓட்டமா

    ReplyDelete
  5. @ MANO நாஞ்சில் மனோ said...

    என்னவோய்... ‘மனோ’தைரியம் உள்ள நீங்களே இப்படி பயந்தா நான்லாம் என்ன ஆவுறது... அவ்வ்வ்வ்!

    ReplyDelete
  6. அப்ப ‘ராஜி’ன்னு நம்ம தங்கச்சி ப்ளாக் எழுதிட்டிருக்காங்க. உங்க கார்ல போனா மூணு மணி நேரத்துல பாத்துடலாம்..//

    நல்ல பிளான் சரியான இடத்துக்குத்தான் அனுப்புறீங்க, போங்க போங்க அங்கே தங்கச்சி வீச்சருவாளோட நின்னுகிட்டு இருக்காள் ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  7. கணேஷ் said...
    @ MANO நாஞ்சில் மனோ said...

    என்னவோய்... ‘மனோ’தைரியம் உள்ள நீங்களே இப்படி பயந்தா நான்லாம் என்ன ஆவுறது... அவ்வ்வ்வ்!//

    நாங்க வெளியில வீட்டுல எலி, வெளியிலையும் எலிதான்,திடீர்னு கொலைகாரனை அனுப்புனா கைப்புள்ளை என்னவாகுறது...?

    ReplyDelete
  8. ஒரு பின்குறிப்பு: இந்தப் பதிவில் வெளியிட்டுள்ள என் படங்களைப் பார்த்து ‘கொலவெறி’யுடன் கம்பு, கட்டைகளை எடுப்பவர்கள் நண்பர் ‘நாஞ்சில் மனோ’வின் ப்ளாக்கில் சென்று வீசும்‌படி கோரப்படுகிறார்கள். ஐடியா உபயம் அவ்விடம்தான்.//

    ஆஹா சிபி இதை பார்த்தாம்னா கொலைவெறியோட வருவானே அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  9. ஒரு மகிழ்ச்சி: நான் வலையுலகில் எழுதத் துவங்கி நான்கு மாதங்கள் முடிந்திராத நிலையில் சென்ற ஆண்டின் ‌வலைப்பதிவர் பட்டியலில் தமிழ்மணம் திரட்டி எனக்கு 55வது இடம் கொடுத்துள்ளது.//

    உங்கள் மகிழ்ச்சி எங்கள் சந்தோஷம் வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  10. @ MANO நாஞ்சில் மனோ said...

    அடங்கொக்கமக்கா... என்ன சொல்லுதீரு? நீரே சொல்லிக் குடுத்திருவீர் போலருக்குதே.. மாட்டி வுட்றாதிரும் ஐயா...

    ReplyDelete
  11. நீங்கதான் பாக்கறீங்களே... என் மனநிலையும், உடல்நிலையும் சரியில்லாத நிலையில நான் எப்படி எழுத முடியும்?//

    ஆமாம் சேட்டைகாரனுக்கு என்னாச்சு சுகமில்லையா புரியலை...?

    ReplyDelete
  12. MANO நாஞ்சில் மனோ said...

    நாங்க வெளியில வீட்டுல எலி, வெளியிலையும் எலிதான்,திடீர்னு கொலைகாரனை அனுப்புனா கைப்புள்ளை என்னவாகுறது...?

    -என்னாது... எலியா? அப்பப்ப எடுரா அருவாளைன்னு சொல்விங்களே, அதெல்லாம் அப்ப கைப்புள்ள ஸ்டைல்தானுங்களா..?

    ReplyDelete
  13. திகில் திரில்லோடு பதிவை போட்டு எங்களை கலவர படுத்திட்டு தொடரும் வேறையா...? சாமீ முடியல...!

    ReplyDelete
  14. கணேஷ் said...
    @ MANO நாஞ்சில் மனோ said...

    அடங்கொக்கமக்கா... என்ன சொல்லுதீரு? நீரே சொல்லிக் குடுத்திருவீர் போலருக்குதே.. மாட்டி வுட்றாதிரும் ஐயா...//

    அண்ணே சிபி அண்ணே எங்கிருந்தாலும் உடனே வாடா அண்ணே....

    ReplyDelete
  15. @ MANO நாஞ்சில் மனோ said...

    -பயப்படாதீங்க மக்கா... சிபிய நான் சமாளிச்சுக்கிடுதேன்.

    -நீங்கள் சந்தோஷப்பட்டு வாழ்த்தியதற்கு நன்றி நண்பா.

    -சேட்டைக்காரண்ணன் குடும்ப பாரத்துல சுமக்கற சுமைகள் பத்தாதுன்னு இப்ப பத்து நாளா கடும் ஃபீவர் வேற... ஜூரம் தாங்கற உடம்பா அது? வாழைத்தண்டு போல உடம்பு அலேக்ங்கற மாதிரில்ல இருப்பாரு?

    ReplyDelete
  16. கணேஷ் said...
    MANO நாஞ்சில் மனோ said...

    நாங்க வெளியில வீட்டுல எலி, வெளியிலையும் எலிதான்,திடீர்னு கொலைகாரனை அனுப்புனா கைப்புள்ளை என்னவாகுறது...?

    -என்னாது... எலியா? அப்பப்ப எடுரா அருவாளைன்னு சொல்விங்களே, அதெல்லாம் அப்ப கைப்புள்ள ஸ்டைல்தானுங்களா..?//

    இது நமக்குள்ளேயே இருக்கட்டும் வெளியே சொல்லிறாதீங்க...

    ReplyDelete
  17. @ MANO நாஞ்சில் மனோ said...
    திகில் திரில்லோடு பதிவை போட்டு எங்களை கலவர படுத்திட்டு தொடரும் வேறையா...? சாமீ முடியல...!

    -இப்பவே இப்டிச் சொன்னா எப்படி? அடுத்த பகுதில இன்னும் அதிர்ச்சிகள் காத்திருக்கே தோழா...

    ReplyDelete
  18. சேட்டைக்காரண்ணன் குடும்ப பாரத்துல சுமக்கற சுமைகள் பத்தாதுன்னு இப்ப பத்து நாளா கடும் ஃபீவர் வேற... ஜூரம் தாங்கற உடம்பா அது? வாழைத்தண்டு போல உடம்பு அலேக்ங்கற மாதிரில்ல இருப்பாரு?//

    குடும்ப பாரம் குறைய, உடல் நலம் பெற பிரார்த்திப்போம், நான் அவரை மிகவும் கேட்டதாக சொல்லுங்கள்.

    ReplyDelete
  19. @ MANO நாஞ்சில் மனோ said..
    அண்ணே சிபி அண்ணே எங்கிருந்தாலும் உடனே வாடா அண்ணே....

    -சிபி எங்கயோ சினிமா தியேட்டர்ல படம் பாத்துட்டு இருப்பாருன்னு நினைக்கேன். நீங்க இப்படி பாதில கூப்ட்டா எப்புடி?

    ReplyDelete
  20. கணேஷ் said...
    @ MANO நாஞ்சில் மனோ said...
    திகில் திரில்லோடு பதிவை போட்டு எங்களை கலவர படுத்திட்டு தொடரும் வேறையா...? சாமீ முடியல...!

    -இப்பவே இப்டிச் சொன்னா எப்படி? அடுத்த பகுதில இன்னும் அதிர்ச்சிகள் காத்திருக்கே தோழா...//

    எங்களை கொலைகாரன்கிட்டே மாட்டி விடனும்னு நீங்க கொலைவெறியா இருக்கும் போது நாங்க தப்பமுடியுமா என்ன ஹி ஹி...?

    ReplyDelete
  21. @ MANO நாஞ்சில் மனோ said...
    இது நமக்குள்ளேயே இருக்கட்டும் வெளியே சொல்லிறாதீங்க...
    -சரீ... சரீ...

    குடும்ப பாரம் குறைய, உடல் நலம் பெற பிரார்த்திப்போம், நான் அவரை மிகவும் கேட்டதாக சொல்லுங்கள்.

    -அடிக்கடி சந்திப்பேன். சொல்லிருதேன்...

    ReplyDelete
  22. கணேஷ் said...
    @ MANO நாஞ்சில் மனோ said..
    அண்ணே சிபி அண்ணே எங்கிருந்தாலும் உடனே வாடா அண்ணே....

    -சிபி எங்கயோ சினிமா தியேட்டர்ல படம் பாத்துட்டு இருப்பாருன்னு நினைக்கேன். நீங்க இப்படி பாதில கூப்ட்டா எப்புடி?//

    வெள்ளிகிழமை மட்டும்தான் கில்மா படம் பார்ப்பேன்னு சொன்னானே, பயபுள்ள சந்துல புகுந்து கில்மா பார்க்க ஓடிட்டானோ...?

    ReplyDelete
  23. MANO நாஞ்சில் மனோ said...
    எங்களை கொலைகாரன்கிட்டே மாட்டி விடனும்னு நீங்க கொலைவெறியா இருக்கும் போது நாங்க தப்பமுடியுமா என்ன ஹி ஹி...?

    -தப்பிடலாம். அவன்தான் உங்களைல்லாம் விட்டுட்டு என்னப் புடிச்சிக்கிட்டானே... அவன் சொன்ன விஷயங்கள்லருந்து நான் வெளியவர ஒரு வாரம் புடிச்சது. அடுத்த பகுதில நீங்களே பாருங்க...

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said...
    வெள்ளிகிழமை மட்டும்தான் கில்மா படம் பார்ப்பேன்னு சொன்னானே, பயபுள்ள சந்துல புகுந்து கில்மா பார்க்க ஓடிட்டானோ...?

    -ஆசாமிய நம்ப முடியாது. இருந்தாலும் இருக்கும்... ஹி... ஹி...

    ReplyDelete
  25. //‘நாஞ்சில் மனோ’ன்னு ஒருத்தர் எழுதறார். நல்ல தைரியசாலி! அவரைப் பாருங்களேன்...’
    //

    பெரிய அருவா பார்ட்டி ஆவர்

    ReplyDelete
  26. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    அதேன் அவர் பேரைச் சொன்னேன். வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

    ReplyDelete
  27. வலைப்பூ பதிவர்களைத்தேடி வந்து க்ரைம் கதை சொல்லுர ஆட்கள் கூட இருக்காங்களே? வாய்ப்பை நல்லாவே பயன்படுத்துக்கிரீங்க.தொடருங்க.

    ReplyDelete
  28. @ Lakshmi said...

    என்னங்க வலைப்பூ பதிவர்ன்னு சாதாரணமா சொல்லிட்டீங்க. வலையில் மேட்டர் படிக்கற பழக்கம் இப்ப ரொம்பவே வளர்ந்துடுச்சு... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா...

    ReplyDelete
  29. அடப்பாவமே, நியூ இயரும் அதுவுமா? அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  30. பாவம் அண்ணே நல்லா மாட்டிக்கிட்டாரு

    ReplyDelete
  31. பதிவிலயுள்ள சிறுகதையைவிட மனோ படுறபாடுதான் சின்னாபின்னாக்கதையாக் கிடக்கு.அவரை எங்கே அவர் தளத்தில தேடுறது.அவர் உங்க பின்னாலயில்ல ஒளிஞ்சிட்டு இருக்கார்.பாவம் சிபி.இன்னும் காணோம்.ஆனாலும் படங்கள் உங்க படங்களோட அழகாயிருக்கு.மனோ எப்பவும் நான் உங்களுக்கு சப்போட் !

    திகில் கதையா இல்ல நகைச்சுவைக் கதையான்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.சரி எதுக்கும் தொடரும்ன்னு போட்டிருக்கீங்க.பாத்துக்கலாம் அடுத்ததில !

    ReplyDelete
  32. அட்டகாசமான தொடக்கம்.
    தானே பிரியாணியாகும் ஆடு, அதைத்தான் காபினு சொல்லித் தர்றா - ரசித்து மாளவில்லை.
    கொலைக்கதை நான் எழுதின ஒரு கதை போல இருக்குதே? எதுக்கு சொல்றேன்னா நாலு வருசம் முந்தி குரோம்பேட்டையிலந்து மாம்பலம் போறப்ப ஒருத்தர் இப்படித்தான் ட்ரெயின்ல பக்கத்துல ஒக்கந்துகிட்டு 'என் பேரு லவா'னு இதே போல ஒரு கதையைச் சொன்னாரு....

    ReplyDelete
  33. ராமன்,லட்சுமணன் கதை தெர்ந்துகொள்ள ஆவல் அதிகரித்தது..அதற்குள் தொடரும் போட்டு விட்டீர்கள்..இடையில் உங்கள் பாணி நகைச்சுவை சுவை..(டீ).55 வது இடமென்ன முதல் இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள் அடுத்த பகுதியைக் காணும் ஆவலை அடை காக்கிறேன்..அருமை..தொடருங்கள்..

    ReplyDelete
  34. //என் மனநிலையும், உடல்நிலையும் சரியில்லாத நிலையில நான் எப்படி எழுத முடியும்?//

    என்ன அவருக்கு? நானும் விசாரித்ததாகச் சொல்லவும். கொலைக் கதையை படிக்க ஆவலாக உள்ளேன்!

    ReplyDelete
  35. எங்கள் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் உங்களுக்கு
    முதலில் என் வாழ்த்துக்கள் & நன்றிகள். நீங்கள் முதலிடம்
    விரைவில் பிடிப்பீர்கள்.
    மீசை உள்ள லக்ஷ்மண ராமன் இப்போ மீசை இல்லாத
    ராமலக்ஷ்மனனாகி ... அடடா குழப்புகிறதே ... கட்டைவிரல்
    எதுக்கும் செக் பண்ணுங்க .... பத்திரமா இருங்க ...
    இப்போ பிரியாணி யாருன்னு தெரியல ...
    நீங்க தொடருங்க .. நான் முடிச்சிடறேன் ...

    ReplyDelete
  36. ஹா.ஹா.ஹா.ஹா. ஒரு வாசகர் வீடு தேடிவந்து பாராட்டியதில் இப்படி வில்லங்கமா?
    என்ன நடந்தது என்று அறிய அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

    ReplyDelete
  37. ////அதைத்தான் காபின்னு சொல்லித் தர்றா. சும்மா குடியுங்க...’’ என்றேன். சரிதாவின் முகத்தில், ‘உள்ள வருவில்ல... அப்ப இருக்கு உனக்கு’ என்ற வரிகள் தெரிந்தன.////
    இருந்தாலும் பாஸ் உங்களுக்கு தில் ஜாஸ்த்திதான்.

    ReplyDelete
  38. @ சி.பி.செந்தில்குமார் said...

    வாங்க செந்தில்! மாட்டி விடறதுன்னு முடிவு பண்ணினப்புறம் நியூ இயரா இருந்தா என்ன... ஹி... ஹி...

    ReplyDelete
  39. @ ரஹீம் கஸாலி said...

    சீக்கிரம் மீண்டுடுவேன்னு நினைக்கிறேன் தம்பி. அவர்(ன்) மேல என்ன சொல்றான்ற‌தைப் பொறுத்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  40. @ ஹேமா said...

    நீங்க மனோவுக்கு சப்போர்ட்டா..? ராஜி தங்கச்சி எங்கம்மா போன? வந்து அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணும்மா. அதுல பாருங்க ஹேமா... சஸ்பென்ஸ் த்ரில்லரா எழுதத்தான் நினைச்சேன். நம்ம கூடவே பொறந்த சிரிப்புச் சுவையும் கலந்துடுது. அடுத்த பகுதில நகைச்சுவைய கட் பண்ணிட்டு, த்ரில்லை மட்டும் தந்துடறேன். சரிங்களா? நன்றி!

    ReplyDelete
  41. ha..ha..ha...
    Arumai. Adutha pathivukku wait panren.

    TM 8.

    ReplyDelete
  42. @ அப்பாதுரை said...

    ஆஹா... அருமையாக் கதை எழுதற அப்பாத்துரை சார் ரசித்தது எனக்கு ரொம்பப் பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. உங்க கதைய நான் படிச்சதில்ல. மண்டபத்துல யாராவது எழுதித் தந்தும் வாங்கிக்கலை. நிஜமா இது என்னுடையது என்னுடையது தானய்யா... (உங்க கதையோட லிங்க் தாங்களேன் ப்ளீஸ்...) கருத்திட்டு ஊக்கப்படுத்தின உங்களுக்கு... வேறென்ன, என் இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  43. @ மதுமதி said...

    கவிஞரே... முதல் இடமா? நானா? ஆனா, இப்படி வாழ்த்தறதுக்கு பெரிய மனசு வேணும்யா. மிக்க நன்றி! நானும் உங்கள மாதிரி ஃபுல் க்ரைமா எழுத நினைச்சாலும் எப்படியோ கொஞ்சம் காமெடி கோட்டிங் வந்துடுது. என்ன செய்ய..? அடுத்த பகுதிக்கு ஆவலை அடைகாத்து நிற்கும் அன்பு நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  44. @ ஸ்ரீராம். said...

    முழு நேரமும் கவனம் செலுத்த வேண்டிய குடும்பச் சூழல். அதைச் சொல்ல எனக்கு அனுமதியில்லை. உடல் நிலை... பத்து நாட்களாய் கடும் ஃபீவர்! (இப்போ கொஞ்சம் பரவாயில்லை) உங்களின் அன்பைச் சொல்கிறேன் ஸ்ரீராம் ஸார்! நீங்கள் கணித்தது சரியே... இதுவரை அரட்டைதானே அடித்திருக்கிறேன். ‘கதை’ அடுத்த பகுதியில்தான் துவக்கம்! நன்றி!

    ReplyDelete
  45. @ ஸ்ரவாணி said...

    நீங்கள் கவலை மறந்து சிரித்தேன் என்றது எனக்கு சாகித்ய அகாதமி விருதுக்கு சமம். மிக மகிழ்ந்தேன். நன்றிங்க! ராம லட்சுமணர்கள் லட்சுமண ராமரான கதை அடுத்த பகுதில. எனக்கே கேட்டதும் ரொம்ப நேரம் தலைசுத்திச்சு. உங்களுக்கு தலைசுத்தாம சொல்ல முயற்சிக்கிறேன். உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மீண்டும் என் வந்தனம்!

    ReplyDelete
  46. @ K.s.s.Rajh said...

    வில்லங்கத்தின் தொடர்ச்சி விரைவில் கொடுத்துடறேன் ராஜ்! தில்லுக்கென்ன... நிறைய‌வே இருக்கு. (ஆனா வீட்டுக்குள்ள போன ‘பறக்கற’ சமாச்சாரங்களப் பத்தி எனக்கில்ல தெரியும். அவ்வ்வ்வ...) நன்றி ராஜ்!

    ReplyDelete
  47. தாங்களும் நாஞ்சில் மனோவும் எவ்வளவு
    உயிருக்கு உயிரான நண்பர்கள் என்பதை மிக அழகாகப்
    புரிந்த் கொள்ள முடிந்தது
    இல்லையென்றால் தங்களைத் தேடிவந்த கொலைகாரரை
    அவரிடம் உடன் அனுப்புவீர்களா ?
    கதை சிறப்பாகத் தொடர்கிறது தொடர வாழ்த்துக்கள்
    த.ம 10

    ReplyDelete
  48. @ துரைடேனியல் said...

    நீங்க ரசிச்சதுல மிகமிக சந்தோஷம் துரை. மிக்க நன்றி. (அது எப்படிப்பா மொபைல்ல ப்ளாக் படிக்க உங்களால முடியுது? எனக்கெல்லாம் ‌அவ்வளவு பொறுமை இல்லை.)

    ReplyDelete
  49. @ Ramani said...

    ஹா... ஹா... அழகாக எள்ளல் தொனியில் சொல்லியிருக்கிறீர்கள். அருமை. மனோ எனக்கு நல்ல நண்பர்தாங்க. ஆனா தைரியசாலி. அதான் அவர்ட்ட அனுப்பப் பாத்தேன். முடியலையே... முடியலையே... (சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்) நீங்கல்லாம் கூட இருக்கற தைரியத்துலதான் தொடரும்னு போட முடியுது. அடுத்த பகுதிக்கும் வந்து வாழ்த்துங்க. உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  50. உங்க ஹாஸ்யம் ரொம்ப இயல்பா ரசிக்க வெக்குது. அடுத்தது என்னன்னு காத்திருக்கோம்.

    //அடடா... ஆடு தானேவந்து பிரியாணியாகிறேன் என்கிறதே... பதிவுக்கு மேட்டர் தேத்த அலையும் நமக்கு இப்படி ஒரு சான்ஸா? ///

    :))))))


    //‘‘எனக்கு காபி வேணாம். ஹாட் வாட்டர் தாங்க மேடம்...’’ என்றான்.

    ‘‘அதைத்தான் காபின்னு சொல்லித் தர்றா. சும்மா குடியுங்க...’’ என்றேன். சரிதாவின் முகத்தில், ‘உள்ள வருவில்ல... அப்ப இருக்கு உனக்கு’ என்ற வரிகள் தெரிந்தன.//

    :))))))))))

    வலையுலக சாதனைக்கு வாழ்த்துக்கள் :) ஃபோட்டோஷாப் வர்க் கலக்கல் !!!!

    ReplyDelete
  51. வந்தவர் தான் கொலை செய்துவிட்டதை சிறிய தவறு என்று சொல்ல ஆரம்பித்ததிலிருந்து சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.கடைசியில் கனவு அல்லது கற்பனைனு சொல்லப்போறீங்களான்னு யோசிக்கிறேன்.

    55வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.சேட்டைக்காரன் அவர்களின் பதிவுக்ளை படித்ததில்லை.ஆனால் பிறர் பதிவுகளில் அவரின் பின்னூட்டங்களை படித்துள்ளேன்.அவருக்கு உடல் நலம் பெற பிராத்திப்போம்.

    ReplyDelete
  52. என்னங்க சார் புகைப்படங்கள் சிட்டி புல்லா இருக்கு
    ம்ம்ம்

    //நான் வலையுலகில் எழுதத் துவங்கி நான்கு மாதங்கள் முடிந்திராத நிலையில் சென்ற ஆண்டின் ‌வலைப்பதிவர் பட்டியலில் தமிழ்மணம் திரட்டி எனக்கு 55வது இடம் கொடுத்துள்ளது.//

    வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  53. சிலர் நகைச்சுவை என்ற பெயரில் எதையாவது எழுதி வாசகரைக் கொல்வார்கள். ஆனால் நீங்கள் கொலைக்கதையையும் நகைச்சுவை மிளிர அழகாக எழுதறீங்க. ஹேமா சொல்லுவது போல் கதை ஒரு பங்கு என்றால் பின்னூட்டங்கள் இன்னொரு பங்கு சுவாரசியமாக உள்ளது. தொடருங்கள் கணேஷ் சார். ஆவலுடன் அடுத்தப் பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  54. @ Shakthiprabha said...

    -சுவைகளில் சிறந்ததான நகைச்சுவையையும் ஃபோட்டோஷாப் ‌வொர்க்கையும் ரசித்ததற்கும், என்னை வாழ்த்தியதற்கும் என் இதயபூர்வமான நன்றிகள்!

    ReplyDelete
  55. @ thirumathi bs sridhar said...

    என்னங்க நீங்க... கனவு இல்லை கற்பனைன்னு முடிக்கிறதுல்லாம் ஒரு பக்கக் கதை ஸ்டைல். நான் நிச்சயம் அப்படிப் பண்ண மாட்டேன், பாருங்க... சேட்டைக்காரனுக்காக பிரார்த்திக்கறேன்னு சொன்ன உங்க நல்ல மனசை அவர்ட்ட சொல்லிடறேன். உங்களோட நானும் சேர்ந்துக்கறேன். என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  56. @ ஹைதர் அலி said...

    -சிட்டி ஃபுல்லா நம்ம படங்கள் வர்ற அளவுக்கு என்னிக்காவது ஃபேமஸ் ஆயிட மாட்டேமாங்கற கனவுலதான் இப்படிப் பண்ணிப் பாத்தேன் ஹைதர் ஸார்! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  57. @ கீதா said...

    நகைச்சுவை மிளிர க்ரைம் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி. பின்னூட்டம் மீன்ஸ் கணேஷி்ன அரட்டை. அது ஹேமா சிஸ்.க்கும் உங்களுக்கும் பிடிச்சிருக்குன்னா அதுல மிகமிக மகிழ்ச்சி எனக்கு.

    ReplyDelete
  58. வழக்கம்போல் கதையோடு ஒன்றியிருந்த உங்கள் நகைச்சுவையை இரசித்தேன்.அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ‘தமிழ் மணம்’ திரட்டியில் 55 வது இடம் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்! விரைவில் முதல் இடத்தை பிடிக்கப்போகும் தங்கள் பதிவு என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

    ReplyDelete
  59. திகில்ல நகைச்சுவை கலக்கமுடியும்னு நிரூபிச்சிட்டீங்க கணேஷ்...கலக்கல்...போட்டோல பரவால்ல 60மார்க் தரேன்:)(நானும் ஷக்தியும் மார்க் போடுவதில் மன்னிகள்:)) சீக்கிரம் தொடருங்க....தலைவெடிச்சிடும்போல் இருக்கு முடிவு தெரில்லன்னா:)

    ReplyDelete
  60. வந்திச்சா என் பின்னூட்டம்? என்னவோ எர்ரர் என்றதே திகில் கதைனனாலே இப்டிதான்ப்பா:)

    ReplyDelete
  61. கொலைக்காரன்கிட்ட தங்கச்சி அட்ரஸ் குடுத்து வித பார்க்குறீங்களே நீங்கல்லாம் ஒரு நல்ல அண்ணனா/?

    ReplyDelete
  62. கதை சூப்பர்.. தமிழ் மணத்துக்கு வாழ்த்துக்கள்.. சேட்டைக்காரனுக்கு என்ன ஆச்சு..

    நாஞ்சில், சிபி சரி.. இதுல ராஜி சாதுப் பொண்ணு அதையும் ஏன் இந்த கொலைக்கேசில இழுத்து விட்டீங்க கணேஷ்..:)

    தமிழ் மணத்துக்கு வாழ்த்துக்கள்.. நான் 60 வது ராங்க்.. அக்கா பின்தங்கிட்டேன்ன்;;)

    ReplyDelete
  63. @ கீதா சாம்பசிவம் said...

    இதன் மூலம் தெரிவி்ப்பது என்னவென்றால்: எல்லாரும் கீதா மேடத்துக்கு ஓட்டுப் போடுங்கள்! (என்னைத் தவிர) ஹி... ஹி... என் ஒரு ஓட்டை தேறாத ஒருத்தனுக்குப் போட்டுட்டேனுங்கோவ்!

    ReplyDelete
  64. அடுத்த பகுதி காண மிகுந்த ஆவல்!
    திகிலும் நகைச் சுவையும் தங்களுக்கு
    கை வந்த கலையோ!
    அருமை!

    இராமாநுசம்

    ReplyDelete
  65. @ புலவர் சா இராமாநுசம் said...

    புலவரையாவின் வருகைக்கும் பாராட்டுக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  66. @ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    ரசித்ததற்கு மனமார்ந்த நன்றி நண்டு ஸார்!

    ReplyDelete
  67. @ வே.நடனசபாபதி said...

    நீங்கள் ரசிச்சுப் படிச்சதுல மிக்க மகிழ்ச்சி. என்னை வாழ்த்தியதற்கு இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  68. @ ஷைலஜா said...

    ஹய்யய்யோ... அக்கா தலை வெடிக்க காரணமா இருப்பனா? இன்னக்கே போட்டுர்றேன் அடுத்த பகுதிய. போட்டோவைப் பாத்துட்டு தலையில குட்டுவீங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். 60 மார்க் வரை தந்ததுல ரொம்ப மகிழ்ச்சி!

    ReplyDelete
  69. @ ராஜி said...

    தங்கச்சி தைரியசாலியாச்சேன்னு நினைச்சு விளையாட்டா சொல்லிட்டேன். தேனக்கா கோவிச்சுக்கிட்டப்புறம் யோசிச்சா நான் பண்ணினது தப்புன்றது தெரியுது. வெரி ஸாரி! ப்ளீஸ், மன்னிச்சூ!

    ReplyDelete
  70. @ தேனம்மை லெக்ஷ்மணன் said...

    நம்ம தங்கச்சியாச்சேன்னு விளையாட்டா பண்ணினது தப்புன்னு நீங்க சொன்னதும் தோணுதுக்கா. மன்னியுங்கள் என்னை. கதை உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல மிக மகிழ்கிறேன். சேட்டையண்ணன் குடும்ப சூழ்நிலை தவிர உடல் நலமும் சற்று குன்றியிருக்கிறார். நம்பர்களை விடுங்க... நல்ல விஷயங்களைத் தருவதிலும், அழகுத் தமிழ்க் கவிதைகளிலும் அக்கா கிட்டகூட இந்தத் தம்பியால வரமுடியாதே...

    ReplyDelete
  71. ஹாஹா, மெதுவா எலக்‌ஷன் வேலை எல்லாம் கவனிச்சுட்டு இப்போத் தான் வந்து படிச்சேன். ரொம்ப தைரியசாலி சார் நீங்க! ஹிஹி,
    உங்க மனைவி இருக்கறச்சேயே காப்பியை வெந்நீர்னு சொன்னதைத் தான் சொல்றேன். எவ்வளோ தைரியம் இருந்தா அப்படிச் சொல்லி இருப்பீங்க! அதான் உங்களைத் தேடி வந்து கொலைக்கதை எல்லாம் சொல்றார், கேட்டுட்டுச் சொல்லுங்க.

    ReplyDelete
  72. நானும் எல்லாருக்கும் ஓட்டிட்டேன். :))))) இலவசங்கள் எல்லாம் அறிவிச்சிருக்கேன், பாருங்க நேரம் கிடைக்கையிலே. :)))))

    சேட்டைக்காரருக்கு என்ன ஆச்சு? ரொம்ப மாசங்களாவே அவரைப் பார்க்கவில்லை. கேட்டதாய்ச் சொல்லுங்க. அடையாளம் வேணும்னா பிள்ளையார் னு சொல்லுங்க, புரிஞ்சுக்குவார். :)))))))

    ReplyDelete
  73. @ கீதா சாம்பசிவம் said...

    என் மனைவிகிட்ட, ‘ப்ளாக்ல காமெடி எழுதறதுக்கு உன்னை கேரக்டரா வெச்சுக்கட்டுமா’ன்னு கேட்டப்ப, ’நல்லவேளை அங்ககூட வேற யாரையாவது ‘வெச்சுக்காம’ என்னையே வெச்சுக்கறேங்கறிங்ளே... செய்ங்க’ன்னு அனுமதி கொடுத்த பெருந்தன்மைக்கு பேர்தான் சரிதா. அதனால தப்பிச்சுடுவேன். சேட்டையண்ணன் கிட்ட உங்கள் அன்பையும் விசாரிப்பையும் சொல்றேன். நன்றிங்க...

    ReplyDelete
  74. அன்புநண்பர் கணேஷ்,
    தமிழ்மணம் உங்களுக்கு ஒதுக்கி இருக்கும் இடம்
    இன்னும் வளர்ந்து நல்ல நிலைக்கு வரவேண்டும். நீங்கள்
    உங்கள் தளத்தில் எழுதுவது ஒரு அழகு என்றால்
    அடுத்தவர்கள் தளத்தில் கொடுக்கும் கருத்து பின்னூட்டங்கள் மற்றொரு தனி
    அழகு.

    அட இங்கே ஒரு தில்லுமுல்லு கதை அரங்கேறி இருக்குது போல.
    இரண்டு நாட்கள் விமானப் பயணத்தில் இருந்ததால்
    தங்கள் தளம் வரமுடியவில்லை.
    இனி தொடர்ந்து தொடர்ச்சியாய் வருகிறேன் நண்பரே.

    ReplyDelete
  75. @ மகேந்திரன் said...

    மகேன், படித்ததும் என் மனதில் தோன்றும் உணர்வுகளை அப்படியே எழுத்தில் கொட்டுவது என் பழக்கம். அதை நீங்கள் ரசித்துச் சொல்லியிருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி. உங்கள் நண்பரின் இடம்தானே... எப்போது வேண்டுமானாலும் வாருங்கள், கருத்துச் சொல்லுங்கள். நன்றி.

    ReplyDelete
  76. //பதிவுக்கு மேட்டர் தேத்த அலையும் நமக்கு இப்படி ஒரு சான்ஸா? மகிழ்ச்சியாக, // ஹா ஹா ஹா பாயின்ட்ட புடிச்சிட்டீங்களே...

    //மனதிற்குள் ‘ப்ளாக்ல இருக்கற ஃபோட்டோவை முதல்ல எடுத்துரணும்டா கணேஷ்!’// ஹா ஹா ஹா

    சார் ஒவ்வொரு லைன் பத்தி தனிதனிய எழுதினா உங்க ஒட்டு மொத கதையையும் எழுத வேண்டி இருக்கு. அருமை

    தமிழ் மனதில் என் ப்லோகை இணைக்க முடியவில்லை என்னாகும் அவங்களுக்கும் என்ன வாய்க்கா தகராரோ தெரியல

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube